பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 75

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    12 x 1 = 12
  1. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

    (a)

    4மீ 

    (b)

    -40மீ 

    (c)

    -0.25மீ

    (d)

    -2.5மீ 

  2. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்

    (a)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    (b)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    (c)

    மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    (d)

    இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  3. ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

    (a)

    சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

    (b)

    சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

    (c)

    சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

    (d)

    மின்விளக்கு மின்னேற்றமடையும்

  4. பின்வரும் ஹேலஜன்களில் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது எது?

    (a)

    அயோடின் 

    (b)

    குளோரின் 

    (c)

    புரோமின் 

    (d)

    புளூரின் 

  5. நீரில் கரைந்துள்ள சர்க்கரை மற்றும் காப்பர் சல்பேட் படிகம் __________ ஆகும்.

    (a)

    இருமடி

    (b)

    மும்மடி

    (c)

    நான்குபடி 

    (d)

    பலபடி 

  6. பின்வரும் வினைகளில் சாத்தியமற்றது எது?

    (a)

    Zn + CuSO4 ⟶ ZnSO4 + Cu

    (b)

    2 Ag + Cu(NO3)2 ⟶ AgNO + Cu

    (c)

    Fe + CuSO4 ⟶ FeSO4 + Cu

    (d)

    Mg + 2HCl ⟶ MgCl2 + H2

  7. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

    (a)

    நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு  அமிலத்தின் சோடிய உப்பு

    (b)

    சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

    (c)

    டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+

    (d)

    கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

  8. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது ______.

    (a)

    கார்போஹைட்ரேட்

    (b)

    எத்தில் ஆல்கஹால் 

    (c)

    அசிட்டைல் கோ.ஏ

    (d)

    பைருவேட் 

  9. ஆக்ஸானின் மேற்புறம் உள்ள ஒரு பாதுகாப்பு உறை _________________ எனப்படும்.

    (a)

    மையலின் உறை 

    (b)

    ரேன்வீரின் அணுக்கள் 

    (c)

    ஸ்லான் துகள்கள் 

    (d)

    நிசில் துகள்கள்

  10. ________________ குளுக்கோகான் ஹார்மோனை சுரக்கிறது.

    (a)

    ஆல்பா செல்கள் 

    (b)

    பீட்டா செல்கள் 

    (c)

    லிடிக் செல்கள் 

    (d)

    கிராஃபியன் செல்கள்

  11. rDNA என்பது ____.

    (a)

    ஊர்தி DNA 

    (b)

    வட்ட வடிவ DNA 

    (c)

    ஊர்தி DNA  மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை 

    (d)

    சாட்டிலைட் DNA 

  12. ஸ்கிராச்சு திருத்தியில் உள்ள பகுதிகள் எத்தனை?

    (a)

    4

    (b)

    2

    (c)

    3

    (d)

    1

  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. மீட்சிச் சிதறல் என்றால் என்ன?

  15. மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.

  16. ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.

  17. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

  18. வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?

  19. சுக்ரோசை எத்தனாலாக மாற்றும் செயல்முறையை எழுதுக.

  20. மனித இரத்தத்தில் உள்ள RBC – யின் வடிவம் என்ன?

  21. மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.

  22. எய்ட்ஸ் நோயினை கண்டறிவதற்கான சோதனைகளை கூறு?

  23. 3R முறை என்பது யாது?

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. ஒரு அலுமினியம்க் கோளத்தின் பருமன் 303 K வெப்பநிலையில் 3 மீ3. அதன் நீள் வெப்ப விரிவு αL=2.4 x 105K-1, அதன் இறுதி பருமன் 3.2மீ3, எனில் அதன் இறுதி வெப்பநிலை யாது?

  26. கொடுக்கப்பட்ட மின்சுற்றுப் படத்திலிருந்து (i) தொகுபயன் மின்தடை, (ii) சூரின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டம், (iii) ஒவ்வொரு மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம், (iv) மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம், (v) ஒவ்வொரு மின்தடையாலும் ஆற்றல் பயனீடு இவற்றை காண்.

  27. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
    CaCO3 ➝ CaO + CO2
    அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
    ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிறையைக் கணக்கிடு.
    இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

  28. a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
    b. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
    c. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?

  29. பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.

    (i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
    (ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
    (iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?

  30. அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?

  31. நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
    i. “L” செல்களின் பெயரை கூறுக.
    ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
    iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
    iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.

  32. ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன. இவை பொதுவான பரிணாம தோற்றத்தைக் கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியுமா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.

  33. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக.

  34. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    3 x 7 = 21
    1. கீழ்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
      அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
      ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
      இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்சிஜனேற்ற வினை
      ஈ. எத்தனாலின் எரிதல் வினை.

    2. மண்ணரிப்பை நீவிர் எவ்வாறு தடுப்பீர்?

    1. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

    2. 'O' இரத்த வகை கொண்ட நபரை இரத்தக் கொடையாளி என்றும் 'AB' இரத்த வகை கொண்ட நபரை இரதம் பெறுவோர் வகை என்றும் அழைக்கப்படுவதேன்?

    1. மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.

    2. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 10th Science - Model Question Paper 2019 - 2020 )

Write your Comment