காலாண்டு மாதிரி வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 100
    14 x 1 = 14
  1. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

    (a)

    ஜெர்மனி

    (b)

    ரஷ்யா

    (c)

    இத்தாலி

    (d)

    பிரான்ஸ்

  2. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

    (a)

    அமெரிக்கா அளித்த உதவி

    (b)

    நெப்போலியனின் படையெடுப்புகள்

    (c)

    சைமன் பொலிவரின் பங்கேற்பு

    (d)

    பிரெஞ்சுப் புரட்சி 

  3. முதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது

    (a)

    அமைதி

    (b)

    வெர்செய்ல்ஸ் 

    (c)

    பாரிஸ்

    (d)

    லண்டன்

  4. மனித உரிமைகள் தினம் _______ ல் கொண்டாடப்படுகிறது

    (a)

    டிசம்பர் 10

    (b)

    நவம்பர் 10

    (c)

    ஜனவரி 10

    (d)

    ஏப்ரல் 10

  5. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

    (a)

    ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

    (b)

    ராஜா ராம்மோகன் ராய்

    (c)

    அன்னிபெசன்ட்

    (d)

    ஜோதிபா புலே 

  6. ______ காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.

    (a)

    அயன மண்டல இலையுதிர் காடுகள் 

    (b)

    அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் 

    (c)

    முட்புதர்க் காடுகள் 

    (d)

    மலைக் காடுகள் 

  7. _________ அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிகவேக இரயில்வண்டி ஆகும்.

    (a)

    சதாப்தி 

    (b)

    ராஜ்தானி 

    (c)

    காத்திமண் 

    (d)

    சார்மினார் 

  8. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

    (a)

    சட்டப்பிரிவு 352

    (b)

    சட்டப்பிரிவு 356

    (c)

    சட்டப்பிரிவு 360

    (d)

    சட்டப்பிரிவு 368

  9. மக்களவை தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ______.

    (a)

    18 வயது 

    (b)

    21 வயது 

    (c)

    25 வயது 

    (d)

    30 வயது 

  10. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் _________ ஆண்டுகள்.

    (a)

    6

    (b)

    4

    (c)

    3

    (d)

    5

  11. ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    ஆளுநர் 

    (c)

    முதலமைச்சர் 

    (d)

    சட்டமன்ற சபாநாயகர் 

  12. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

    (a)

    வேளாண் துறை 

    (b)

    தொழில்துறை 

    (c)

    பணிகள் துறை 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  13. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

    (a)

    அமைச்சரவை 

    (b)

    தலைமை இயக்குநர் 

    (c)

    துணை தலைமை இயக்குநர் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  14. உலக வர்த்தக அமைப்பின் தலைமையிடம் _______ 

    (a)

    ஜெனிவா 

    (b)

    டார்க்குவே 

    (c)

    டோக்கியோ 

    (d)

    ஆஸ்திரேலியா 

  15. 10 x 2 = 20
  16. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.

  17. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

  18. மத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை?

  19. வைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்?

  20. 'ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன?

  21. உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் என்றால் என்ன?

  22. தொழிற்சாலைகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  23. சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக

  24. இந்திய சாலைகளின் வகைகளை எழுதுக.

  25. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  26. 10 x 5 = 50
  27. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

  28. அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்

  29. பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்

  30. சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது

  31. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

  32. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

  33. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.

  34. மத்திய அமைச்சர்களின் வகைகள் பற்றி விரிவாக எழுதவும்.

  35. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.

  36. 2018இல் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எவை?

  37. 2 x 8 = 16
  38. பால்கன் போர்கள்
    அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
    ஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை?
    இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்?
    ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன?

  39. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
    அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
    ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
    இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
    ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Quarterly Model Question Paper )

Write your Comment