" /> -->

எண்களும் தொடர் வரிசைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  7 x 1 = 7
 1. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 . இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

  (a)

  6

  (b)

  7

  (c)

  8

  (d)

  9

 2.  A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

  (a)

  B ஆனது A ஐ விட 264 அதிகம்

  (b)

  A மற்றும் B சமம்

  (c)

  B ஆனது A-ஐ விட 1 அதிகம்

  (d)

  A ஆனது B–ஐ விட 1 அதிகம்

 3. (13+23+33+ ...+ 153) - (1+2+3+....+15) யின் மதிப்பு

  (a)

  14400

  (b)

  14200

  (c)

  14280

  (d)

  14520

 4. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை குழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

  (a)

  0, 1, 8

  (b)

  1, 4, 8

  (c)

  0, 1, 3

  (d)

  1, 3, 5

 5. 74k ☰ (மட்டு 100)

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 6. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு

  (a)

  0

  (b)

  6

  (c)

  7

  (d)

  13

 7. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

  (a)

  16 m

  (b)

  62 m

  (c)

  31 m

  (d)

  \(\frac{31}{2}\) m

 8. 9 x 2 = 18
 9. a -யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க.
  a=−12, b=5

 10. 210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55x-325x, என்ற வடிவில் எழுதினால் x –யின் மதிப்புக் காண்க.

 11. 15 ≡ 3 (மட்டு d) என்றவாறு அமையும் d -யின் மதிப்பைத் தீர்மானிக்க.

 12. 104 ≡ (மட்டு 19) என்றவாறு அமையும் x மதிப்பைக் கணக்கிடுக.

 13. ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை 22.30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்?

 14. 3,15,27,39,… என்ற தொடர்வரிசையின் 15-வது, 24-வது மற்றும் n -வது உறுப்பு காண்க.

 15. பின்வருவனவற்றின் முதல் உறுப்பு மற்றும் பொது விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனுடைய பெருக்குத் தொடர்வரிசைகளைக் காண்க.
  a =-7, r =6

 16. பின்வரும் தொடர் வரிசைக ள் கூட்டுத் தொடர்வரிசையா, இல்லையா எனச் சோதிக்க.
  2,4,8,16,..

 17. பின்வருவனவற்றின் முதல் உறுப்பு மற்றும் பொது விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனுடைய பெருக்குத் தொடர்வரிசைகளைக் காண்க.
  a =256, r =0.5

 18. 3 x 5 = 15
 19. ab x ba=800 என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் ‘a’ மற்றும் ‘b’ ஐ காண்க.

 20. 1,−3,9,−27… என்ற பெருக்குத் தொடர்வரிசையின் முதல் 8 உறுப்புகளின் கூடுதல் காண்க.

 21. ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ.7875-ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - எண்களும் தொடர் வரிசைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Maths - Numbers and Sequences Model Question Paper )

Write your Comment