" /> -->

புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது 

  (a)

  3.5

  (b)

  3

  (c)

  4.5

  (d)

  2.5

 2. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவனது 

  (a)

  \(\frac{3}{10}\)

  (b)

  \(\frac{7}{10}\)

  (c)

  \(\frac{3}{9}\)

  (d)

  \(\frac{7}{6}\)

 3. கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு \(\frac{1}{9}\) எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,

  (a)

  5

  (b)

  10

  (c)

  15

  (d)

  20

 4. ஆங்கில எழுத்துக்கள் {a,b ,.......,z}-யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x-க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு 

  (a)

  \(\frac {12 }{13}\)

  (b)

  \(\frac {1 }{13}\)

  (c)

  \(\frac {23 }{26}\)

  (d)

  \(\frac {3 }{26}\)

 5. ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10-ம் ரூ.500 நோட்டுகள் 15-ம், ரூ.200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ரூ.500 நோட்டாகவோ அல்லது ரூ.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  (a)

  \(\frac {1}{5}\)

  (b)

  \(\frac {3}{10}\)

  (c)

  \(\frac {2}{3}\)

  (d)

  \(\frac {4}{5}\)

 6. 7 x 2 = 14
 7. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் 6 நாட்களில் பெய்யும் மழையின் அளவானது 17.8செ.மீ, 19.2செ.மீ , 16.3செ.மீ, 12.8செ.மீ,11.4செ.மீ  எனில், இந்த தரவிற்கு திட்டவிலக்கம் காண்க.

 8. கொடுக்கப்பட்டுள்ள தரவிற்கு திட்டவிலக்கம் காண்க. 7,4,8,10,11. இதன் எல்லா மதிப்புகளுடனும் 3-யை கூட்டும்போது கிடைக்கும் புதிய தரவிற்கு திட்டவிளக்கம் காண்க.

 9. வகுப்புத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் மதிபெண்ணிற்குத் திட்ட விலக்கம் காண்க.

  4 6 8 10 12
  f 7 3 5 9 5
 10. இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் (i) 4-க்குச் சமமான (ii) 10-ஐ விடப் பெரிதாக (iii) 13-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.

 11. இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

 12. ஒரு நெட்டாண்டில் (leap year) 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?(குறிப்பு:366=52x 7+2)

 13. ஒரு பகடை உருட்டப்படும் அதே நேரத்தில் ஒரு நாணயமும் சுண்டப்படுகிறது. பகடையில் ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கும் நாணயத்தில் தலைக் கிடைப்பதற்குமான நிகழ்தகவைக் காண்க.

 14. 3 x 5 = 15
 15. ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட வாரத்தில் உட்கொள்ளப்பட்ட கொய்யா மற்றும் ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  கொய்யாப் பழங்களின் எண்ணிக்கை  3 5 6 4 3 5 4
  ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை  1 3 7 9 2 6 2

  இங்கு, எந்த பழம் சீராக எடுத்துக்கொள்ளப்பட்டது?

 16. P(A)=0.37, P(B)=0.42, P(A\(\cap\)B)=0.09 எனில், P(A\(\cup\)B)ஐக் காண்க.

 17. A மற்றும் B ஆகியவை P(A)=\(\frac{1}{4}\), P(B)=\(\frac{1}{2}\) மற்றும் P(Aமற்றும் B)=\(\frac{1}{8}\) என இருக்குமாறு அமையும் இரண்டு நிகழ்ச்சிகள் எனில், பின்வருவனவற்றைக் காண்க.
  i) P(A அல்லது B)
  ii) P(A-ம் இல்லை மற்றும் B-ம் இல்லை)

 18. 2 x 8 = 16
 19. ஓர் ஆசிரியர் மாணவர்களை, அவர்களின் செய்முறைப் பதிவேட்டின் 60 பக்கங்களை நிறைவு செய்து வருமாறு கூறினார். எட்டு மாணவர்கள் முறையே 32, 35, 37, 30, 33, 36, 35, 37 பக்கங்கள் மட்டுமே நிறைவு செய்திருந்தனர். மாணவர்கள் நிறைவு செய்யாதப் பக்கங்களின் திட்டவிலக்கத்தைக் காண்க.

 20. 50 மாணவர்கள் 100மீட்டர் தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட கால அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் திட்ட விலக்கம் காண்க.

  எடுத்துக்கொண்ட நேரம் (வினாடியில்) 8.5-9.5 9.5-10.5 10.5-11.5 11.5-12.5 12.5-13.5
  மாணவர்களின் எண்ணிக்கை  6 8 17 10 9

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back Questions ( 10th Standard Maths - Statistics And Probability Book Back Questions )

Write your Comment