10th Public Exam March 2019 Model Question

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 75
  15 x 1 = 15
 1. பட்டாணிச் செடியின் மஞ்சள் விதையின் பண்பானது, பச்சை நிற விதையின் மேல் ஓங்குதன்மை கொண்டது. கீழுள்ளவற்றுள் பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம் ...........................

  (a)

  GG

  (b)

  Gg

  (c)

  Yy

  (d)

  yy

 2. எளிய அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் குறிப்பிட்ட பகுதிகளில் உணர்வுறு  பொருள்களைப்  பயன்படுத்தி நோயாளிகளின் வலியை உணர இயலாமல் செய்வார். இதனால் நரம்பு செல்லின் ......................... யில்  நரம்பு தூண்டல்  நிறுத்தி வைக்கப்படுகிறது.

  (a)

  செல் உடலம்

  (b)

  ஆக்ஸான்   

  (c)

  நரம்பு செல் இணைப்பு பகுதி        

  (d)

  ஆக்சானின் மையப்பகுதி 

 3. எந்தக் கனியின் கரு ஸ்கூட்டல்லம் என்று அழைக்கப்படுகிறது_________

  (a)

  நெல்

  (b)

  அவரை

  (c)

  பட்டாணி

  (d)

  ஆமணக்கு

 4. பாலூட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது.

  (a)

  உரோமம், உணர் உரோமம், உரோம முட்கள் 

  (b)

  உரோமம், நகம், விரல் நகங்கள் 

  (c)

  உரோமம், உணர் உரோமம், கொம்புகள் 

  (d)

  உரோமம், நகம், செதில்கள்

 5. பசுந்தாவரங்களில் காணப்படும் எந்தச் செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்?

  (a)

  மைட்டோகாண்டிரியா

  (b)

  பசுங்கணிகம்

  (c)

  எண்டோபிளாசவலை

  (d)

  உட்கரு

 6. நீர் வாழ் உயிரினங்களுக்குக் குளிர்ந்த நீரே உகந்தது ஏனெனில் .............................

  (a)

  வெப்பநிலை குறையும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது.

  (b)

  வெப்பநிலை உயரும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது.

  (c)

  வெப்பநிலை உயரும்போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின்  கரைதிறன்  குறைகிறது.

 7. ..........................ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையைப் பெற்றுள்ளன.

  (a)

  ஐசோபார்கள்

  (b)

  ஐசோடோன்கள்

  (c)

  ஐசோடோப்கள்

  (d)

  நிறை எண்

 8. வலிமை குறைந்த அமிலம் எது?

  (a)

  HCOOH

  (b)

  HNO3

  (c)

  CH3COOH

  (d)

  H2SO4

 9. மூன்றாவது வரிசையில் தனிமங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை அலோகங்கள் உள்ளன?

  (a)

  8

  (b)

  5

 10. CnH2n+2 என்ற பொது வாய்ப்பாடுடைய நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்கள் ஒரு படிவரிசையை உருவாக்குகின்றன.இவ்வாய்ப்பாட்டில் ஹைட்ரோகார்பனின் மூலக்கூறு வாய்ப்பாடு ________ 

  (a)

  C2H2

  (b)

  C2H6

  (c)

  C2H4

  (d)

  C2H8

 11. திருகு அளவியின் தலைக்கோல், சுழிப்பிரிவு, புரிக்கோலின் வரை கோட்டிற்கு கீழ் அமைகிறது, எனில் சுழிப்பிழை ..................

  (a)

  நேர்குறி

  (b)

  எதிர்குறி

  (c)

  இல்லை

 12. சந்திராயன் I எடுத்துச் சென்ற சில பயன் சுமைகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் சில பெயர்கள் அதோடு தொடர்பில்லாதவை.தொடர்பில்லாத பயன் சுமைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

  (a)

  CIZS, LLRI, RADOM

  (b)

  MNI - SAR, TMC

  (c)

  SAR, IIRS, TMC - 2, CLASS

 13. இயற்கைக் கதிரியக்கத் தனிமத்தின் அணு எண் ...............

  (a)

  82ஐ விட அதிகம் 

  (b)

  82ஐ விடக் குறைவு 

  (c)

  வரையறுக்கப்படவில்லை 

  (d)

  குறைந்தது 92

 14. உயிரி ஆற்றல் மூலம் ______

  (a)

  நிலக்கரி

  (b)

  அனல் ஆற்றல்

  (c)

  வெப்ப ஆற்றல்

  (d)

  மாற்றுச்சாணம்

 15. 10 செ .மீ குவியத் தொலைவுள்ள குவி லென்சிலிருந்து 25 செ .மீ தொலைவில் பொருள் வைக்கப்படுகிறது .பிம்பத்தின் தொலைவு --------------

  (a)

  50செ .மீ .,

  (b)

  16.66செ .மீ .

  (c)

  6.66செ .மீ

  (d)

  10 செ .மீ . 

 16. 20 x 2 = 40
 17. டாக்டர். ஐயான் வில்மட் தனது ஆய்விற்கான ஆறு வயதுடைய பிஃன்டாா்செட் வெள்ளை செம்மறியாட்டின் பால்மடி செல்லின் உட்கருவைப் (2 n) பதப்படுத்தி பயன்படுத்தினர். அவர் மற்றொரு ஆட்டில்  இருந்து ஒரு அந்த செல்லினை சேகரித்தார். இதிலிருந்து ஒற்றைமைய ( n ) உட்கருவை நீக்கினார். உட்கரு நீக்கபட்ட அண்ட  செல்லினுள், மடிசெல்லில் இருந்து எடுக்கப்பட்ட இரட்டைமைய உட்கருவை செலுத்தினார். பின்பு இரட்டைமைய அந்த செல் வளர்ப்புத் தாயான செம்மறி ஆட்டின் கருப்பையில் பதிக்கப்பட்டது. இரட்டை மைய அண்ட செல்லில் இருந்து வளர்ந்த இளம் உயிரி டாலி என அழைக்கப்பட்டது.
  அ) டாக்டர்  ஐயான் விமல்ட் ஏன் மடிசெல்லினைத் தேர்ந்தெடுத்தார்?
  ஆ) வரையறு: ஹேப்ளாய்டு, டிப்ளாய்டு

 18. பொருத்துக.

  அ.சார்லஸ் டார்வின் குளோனிங்
  ஆ.ஜீன் பாப்டைஸ் இயற்கைத்தேர்வு கொள்கை
  இ.எட்வர்ட் ஜென்னர் மரபுவழிக் கடத்தல் விதி
  ஈ.ஐயான் வில்மட் உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி
  உ.ஜோகன் மெண்டல் தடுப்பூசிக் கொள்கை
 19. கொடுக்கப்பட்டுள்ள உடற்குறைபாடுகளில் தனியான ஒன்றைத் தகுந்த காரணங்களுடன் கண்டறிந்து எழுதுக.(தாலசிமியா, ஹீமோபிலீயா,மாலைக்கண், அல்பினிசம், கதிர் அரிவாள்  இரத்த சோகை

 20. தவறுகளைச் சுட்டுதல் வாக்கியத்திலுள்ள பிழைகளைத்திருத்துக.
  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் சரியானதா? தவறு எனில் சரிப்படுத்தி எழுதுக.
  பூஞ்சைகள் பச்சையம் கொண்ட சாறுண்ணி அல்லது ஒட்டுண்ணி வகையாகும். இவை உயிருள்ள அழுகிப்போன கரிம உயிரிகள் அல்லது உயிருள்ள தாவரம் அல்லது விலங்குகளில் வாழும்.

 21. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
  நியூரான்களின் துணைச்செல்கள் ________.(நியூரோகிளியா, நரம்பு இழை)

 22. மலரின் முக்கிய பாகங்கள் யாவை?

 23. தூண்டாதல் என்றால் என்ன?

 24. பின்வரும் பத்தியைப் படிக்கவும்: 
  பெரும்பாலான முதுகெலும்பிகள் தடைகளைப் பெற்று அதில் பற்களும் காணப்படுகின்றன. தடைகளில் பற்கள் அமைந்துள்ள முறைக்குப் பல்லமைப்பு என்று பெயர்.  பாலூட்டிகளின் காணப்படும் பல்வேறு விதமான பற்கள் பின்வருமாறு.  வெட்டும் பற்கள்(I), கோரப்பற்கள்(C) முன் கடவை பற்கள் (P) மற்றும் பின் கடவாய் பற்கள்(M). அவை முறையே உணவை கடிப்பதற்கும், கிழிப்பதற்கும், மெல்லுவதற்கும் அரைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.  மாமிச உண்ணிகளில் கோரப்பற்கள் மாமிசத்தைக் கீழ்ப்பதற்கு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த கோரை பற்கள் தாவர உண்ணிகளில் குறைவாக வளர்ச்சி அடைந்தோ அல்லது இல்லாமலோ காணப்படுகிறது .
  பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:-
  i) தவளையின் மேல் தாடையில் ஒரே மாதிரியான பற்கள் காணப்படுகிறது. ஆனால் மனிதனில் 
  மாறுபட்டுள்ளது. மனிதனில் காணப்படும் இத்தகைய பல்லமைப்பு -----------என்று பெயர். 
  அ) ஹோமோடன்ட் வகை  ஆ) ஐசோடன்ட் வகை இ)  ஹெட்டிரோட்டான்ட் வகை ஈ) அக்ரோடன்ட் வகை 
   ii) பாலூட்டிகளின் பல் சூத்திரம் ICPM = 2023/1023 என்று எழுதப்பட்டால் இதில் இடம் பெறாத பற்களின் வகை-----
  அ) (I) வெட்டும் பற்கள் ஆ) (C)கோரைப் பற்கள்  இ) (P)முன்கடைவாய் பற்கள்  ஈ) (M) பின்கடைவாய் பற்கள் 

 25. நோய் எதிர்ப்பாற்றலுக்கு இன்றியமையாததாக உள்ள பிளாஸ்மா புரோடீன்கள்,இரத்த அணுக்கள் யாவை?

 26. தாவரங்களில் கழிவுநீக்கம் என்பது என்ன?

 27. நீர் மேலாண்மை என்றால் என்ன?

 28. ​​​​​​பொருந்தாததை நீக்குக.
  பின்வருவனவற்றுள் உயிர் சிதைவடையும் கழிவுகளை எழுதுக.(மழை நீர்,கடல் நீர்,நிலத்தடி நீர்,மேற்பரப்பு நீர்).

 29. போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தும் உயர்த்தி - எரிபொருள்கள் யாவை?


 30. அ )குளிர்பானங்களில் கரைக்கப்படும் வாயு எது?
  ஆ )அவ்வாயுவின் கரைதிறனை அதிகரிக்க நீங்கள் என்ன செய்வீர்கள் ?

 31. டின்டால் விளைவு என்றால் என்ன?

 32. Cl என்பது குளோரின் அணுவையும், Cl2 என்பது குளோரின் மூலக்கூறையும் குறிப்பவை எனில் அணுக்களுக்கும், மூலக்கூறுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக

 33. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் நான்கு தொகுதிகளையும் தொடர்புபடுத்துக.

  சேர்மம் மூலக்கூறு வாய்ப்பாடு வேதிப்பெயர் பயன்கள்
  1. சலவைசோடா \(CaOcl_2\) கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் சிலைகள் செய்ய 
  2. சமையல் சோடா \(Na_2CO_3\) சோடியம் பைகார்பனேட்  கடினநீரை மென்மைப்படுத்த
  3. சலவைத்த்தூள் \(CaSO_4.{1\over 2} H_2O\) சோடியம் கார்பனேட்  கேக் தயாரிக்க 
  4. பாரிஸ் சாந்து \(NaHCO_3\) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு வெளுக்கப் பயன்படுகிறது 
 34. நன்கு தெரிந்த சில பொருள்களின் pH மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  பொருள்  pH மதிப்பு 
  காபி  5.0
  எலுமிச்சை சாறு  2.4
  வீட்டில் பயன்படுத்தும் அம்மோனியா  12.0
  தக்காளி சாறு  4.1

  அட்டவணையை பகுப்பாய்வு செய்து கீழே உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கவும்,
  எந்தெந்தப் பொருள்கள் அமிலத்தன்மை உடையவை?
  எந்தெந்தப் பொருள்கள் காரத்தன்மை உடையவை?

 35. இடப்பெயர்ச்சி வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

 36. கொப்புளக் காப்பரில் உள்ள மாசுக்களின் சதவீதம் என்ன?

 37. அலுமினியம் அடர் HCL மற்றும் அடர் H2S0உடன்  வினைபுரிகிறது .ஆனால் அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிகிறது இல்லை உரிய காரணத்துடன் உன் விடையை எழுதுக.

 38.  A, B என்ற இரு சேர்மங்கள்  \(C_2H_6O\) என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றுள்ளன. இவை இரண்டும் வெவ்வேறு கட்டமைப்புகளைப் பெற்றுள்ளன.
  அ) இப்பண்பிற்கு என்ன பெயர்?
  ஆ)  A மற்றும் B ஆகியவற்றின் கட்டமைப்புகளை எழுது.
  இ) அவற்றின் பொது மற்றும்  IUPAC பெயர்களை  எழுது.
  ஈ)  A மற்றும் Bயில் உள்ள வினை செயல் தொகுதிகளை எழுது.

 39. பொருந்துதல் 

  சேர்மங்கள்  வினைசெயல் தொகுதி  எடுத்துக்காட்டு 
  1. ஆல்கஹால்  -CHO  மெத்தனேல் 
  2.ஆல்டிஹைடு  \(_{ \diagup }^{ \diagdown }{ C=O }\) மெத்தனாலிக் அமிலம் 
  3. கீட்டோன்  - COOH  மெத்தனால் 
  4. கார்பாக்ஸிலிக்  -OH  புரொப்பனோன் 
 40. அ) கார்பன் எத்தனை புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது?
  ஆ) கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் யாவை?

 41. கோடிட்ட இடங்களை நிரப்புக.
  மிக நீண்ட தொலைவுகளை லாக்கப் பயன்படும் சிறப்பு முறைகள் ................... , ................... ஆகும்.
  (லேசர் துடிப்பு முறை, ஒளி ஆண்டு முறை, ரேடியோ - எதிரொளிப்பு முறை, வானியல் முறை)

 42. ரேணு புவியின் மையத்திலிருந்து 6.38 X 103 கி.மீ தொலைவில் உணவிருந்தும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறாள். புவியின் நிறை 6 X 1024 கி.கி. 
  அ) புவிஈர்ப்பு முடுக்கத்தைக் காண்க.
  ஆ) மதிய உணவுக்குப் பின் அதன் மதிப்பில் மாற்றம் ஏற்படுமா?

 43. 'm' நிறையுள்ள மனிதன், தொடக்கத்த்தில் ஓய்வுநிலையில் உள்ள வழவழப்பான கிடைத்தளப் பரப்பில் வைக்கப்பட்டு இருக்கும் 'M' நிறையுள்ள கட்டை மீது நிற்கிறான். மனிதன் தரையைப் பொறுத்து கட்டையின் மீது திடீரென 'v' மீ / வி வேகத்தில் நகரத் தொடங்குகிறான். தரையைப் பொறுத்து கட்டையின் திசைவேகத்தை காண்க.

 44. உந்தம் - வரையறுக்க.

 45. மின் உருகு இழை .................... உலோகக் கலவையால் ஆன கம்பி ஆகும். இஃது அதிக மின்தடையும் ................ உருகு நிலையையும் கொண்டது.

 46. 40 W மற்றும் 60 W திறன் கொண்ட இரு மின்விளக்குகள் தொடரிணைப்பில் புற மின்கலத்துடன் இணைக்கப்பட்டால் எந்த மின் விளக்கு அதிக பொலிவாக ஒளிரும்? ஏன்?

 47. கிட்டப்பார்வை ஒருவரின் அமைப்புள்ளி 75செ.மீ எனில், குறைபாட்டினைச் சரிசெய்ய பயன்படுத்தப்படும் லென்ஸின் குவியத்துராம் என்ன?

 48. காந்தப்புலம் என்றால் என்ன? காந்தப்புலக்கோட்டின் பண்புகள் யாவை?

 49. 4 x 5 = 20
 50. அ) மரபுப் பொறியியல் என்றால் என்ன?
  ஆ) மரபுப் பொறியியலின் நன்மைகள் யாவை?
  இ)ரெஸ்டிரிக்ஷன்  எண்டோ நியுக்ளியேஸ் மற்றும் டி.என்.ஏ லிகேஸ் நொதியின் பயன்பாட்டினைக் கூறுக 

 51. பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பாலினப் பெருக்க முறையில் ஈடுபடும்    இரண்டு நிகழ்வுகளை எழுதுக.
  அ )முதல்  நிகழ்வு மற்றும் அவற்றின் வகைகளை விவரிக்க.
  ஆ)அதன் நன்மை தீமைகளை எழுதுக.

 52. தகவமைப்பு என்றால் என்ன? பின்வரும் பாலூட்டிகளின் தகவமைப்புகளை விவரிக்க.
  1.திமிங்கலம் 2. துருவக்கரடி 3. கங்காரு 4. தரவாரங்களை உண்ணும் பாலூட்டிகள் 

 53. ஆற்றல் கணக்கீடு என்பது கட்டங்களில் ஆற்றல் சேமிப்பை ஆய்வு செய்து, அளவீடு செய்து ஆராயும் முறையாகும் .
  அ )  வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டினை நீங்கள் எவ்வாறு அளவிடுவீர்கள்?
  ஆ)  உங்கள் பள்ளியில் இம்முறையைப் பயன்படுத்தினால், அடையக்கூடிய பயன்கள் யாவை?

 54. 12.046X1022   மூலக்கூறுகளைக் கொண்ட தாமிரத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

 55. அட்டவணையை நிரப்புக .

  மூலக்கூறு வாய்ப்பாடு பொதுப்பெயர் IUPAC பெயர்
  \(CH_3CH_2CH_2CH_2OH\)    
    டைமீத்தைல் கீட்டோன்   
      புரொப்பனேல்
  \(HCOOH\)    
      பியூட்டனோன்
 56. உந்த அழிவின்மை விதியை எளிய வரிகளில் கூறு.

 57. கொடுக்கப்பட்ட படத்தில், மின்சுற்றில் பாயும் மொத்த மின்னோட்டத்தை கணக்கிடுக. மேலும் \(1\Omega \) மின்தடையின் குறுக்கே ஏற்படும் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science Public Exam March 2019 Model Question Paper and Answers )

Write your Comment