Important Questions Part-II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 175

    Section - I

    10 x 1 = 10
  1. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.

    (a)

    நீச்சல் போட்டி

    (b)

    டென்னிஸ்

    (c)

    சைக்கிள் பந்தயம்

    (d)

    ஹாக்கி

  2. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி எதற்குப் பொருந்தும்

    (a)

    சிறிய பொருட்களுக்கு மட்டும்

    (b)

    தாவரங்களுக்கு மட்டும்

    (c)

    வடிவத்தைப் பொருத்து அல்லாமல் அனைத்துப் பொருட்களுக்கும்

    (d)

    சூரிய குடும்பத்திற்கு மட்டும்

  3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

    (a)

    விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (b)

    குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (c)

    இணைக் கற்றைகளை உருவாக்கும்

    (d)

    நிறக் கற்றைகளை உருவாக்கும்.

  4. ஒரு பொருள் 25 செ.மீ தொலைவில் ஒரு குவி லென்சின் முன் வைக்கப்படுகிறது. அதன் குவியதூரம் 10 செ.மீ எனில் பிம்பத்தின் தொலைவு

    (a)

    50

    (b)

    16.66

    (c)

    6.66

    (d)

    10

  5. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்

    (a)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    (b)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    (c)

    மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    (d)

    இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  6. பின்வருவனவற்றில் வெப்பம் பரிமாற்றப்படுவதற்கான துரித முறை

    (a)

    வெப்பக்கடத்தல்

    (b)

    வெப்பச்சலனம்

    (c)

    வெப்பக்கதிர் வீசல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  7. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

    (a)

    மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

    (b)

    மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

    (c)

    மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

    (d)

    மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

  8. மின் உருகு இழை

    (a)

    குறைந்த உருகுநிலை கொண்டது

    (b)

    உயர் மின்தடையுடையது

    (c)

    தாழ் மின்தடையுடையது

    (d)

    அ மற்றும் ஆ

  9. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

    (a)

    17 மீ 

    (b)

    20 மீ

    (c)

    25 மீ

    (d)

    50 மீ

  10. ஒலிக்கும் மணி அல்லது ட்ரம் இசைக்கருவி 

    (a)

    மின்சாரத்தை உருவாக்குகின்றன.

    (b)

    எதிரொலியை உருவாக்குகின்றன.

    (c)

    அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன.

    (d)

    ஏதுமில்லை 

  11. Section - II

    10 x 2 = 20
  12. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?

  13. இரட்டை விசைகள் அல்லது இரட்டை என்பது யாது?

  14. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

  15. நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?

  16. பாயில் விதியைக் கூறுக.

  17. திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவு யாது?

  18. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  19. ஒரு கடத்தியில் மின்னோட்டம் எவ்வாறு பாயும்?

  20. அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?

  21. அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?

  22. Section - III

    10 x 4 = 40
  23. பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.

  24. 2 கிகி நிறையுள்ள ஒரு பொருள் 40 ms-1 சீரான திசைவேகத்தில் ஓய்வில் உள்ள மற்றொரு பொருள் மீது மோதுகிறது. இருபொருள்களும் 20 ms-1 திசைவேகத்தில் சேர்ந்து நகர்கின்றன. மற்றொரு பொருளின் நிறையைக் காண்க.

  25. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

  26. தட்டக்குவி லென்சு, தட்டக்குழி லென்சு என்றால் என்ன?

  27. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

  28. 200 K வெப்பநிலையில் எஃகுத் துண்டின் நீளம் 2மீ. 250 K ல் அதன் நீளம் 0.1மீ அதிகரிக்கிறது எனில், பரும வெப்ப விரிவு குணகத்தைக் காண்க.

  29. ஓம் விதி வரையறு.

  30. வீட்டில் உபோயோகப்படுத்தும் அனைத்து மின்சாதனங்களும் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுமா?ஏன்?

  31. ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க?

  32. கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ள போது ஒரு ரயில் வண்டி 30மீவி-1 வேகத்தில் அவரை நோக்கி நெருங்குகிறது.ரயிலின் அதிர்வெண் 600Hz ஒலியின் வேகம் 340 மீ.வி-1 எனில் கேட்குநர் உணரும் அதிர்வெண் யாது?

  33. Section - IV

    10 x 7 = 70
  34. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.

  35. நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதிக்கு எடுத்துக்காட்டுடன் தருக.

  36. 10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.

  37. தூரப்பார்வை [ஹைப்பர் மெட்ரோபியா] குறைபாடு எவ்வாறு சரி செய்ய்யப்படுகிறது? படத்துடன் விவரி.

  38. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  39. வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.

  40. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

  41. பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.

  42. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  43. ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.

  44. Section - V

    5 x 7 = 35
  45. கீல் (keel) முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.

  46. ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 30o எனில் விலகு கோணம் என்ன?

  47. 70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.

  48. இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?

  49. 500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 10th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )

Write your Comment