இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
    14 x 1 = 14
  1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  2. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

    (a)

    அமெரிக்கா அளித்த உதவி

    (b)

    நெப்போலியனின் படையெடுப்புகள்

    (c)

    சைமன் பொலிவரின் பங்கேற்பு

    (d)

    பிரெஞ்சுப் புரட்சி 

  3. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

    (a)

    ரஷ்யர்கள்

    (b)

    அரேபியர்கள்

    (c)

    துருக்கியர்கள்

    (d)

    யூதர்கள்

  4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

    (a)

    ஹபீஸ் அல் -ஆஸாத்

    (b)

    யாசர் அராபத்

    (c)

    நாசர்

    (d)

    சதாம் உசேன்

  5. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

    (a)

    மகாதேவ் கோவிந்த் ரானடே

    (b)

    தேவேந்திரநாத் தாகூர்

    (c)

    ஜோதிபா புலே

    (d)

    அய்யன்காளி

  6. இந்தியாவின் தென்கோடி முனை _____.

    (a)

    அந்தமான்

    (b)

    கன்னியாகுமரி

    (c)

    இந்திராமுனை

    (d)

    காவரட்தி

  7. நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

    (a)

    கோடைக்காலம்

    (b)

    குளிர்க்காலம்

    (c)

    மழைக்காலம்

    (d)

    வடகிழக்கு பருவக்காற்று காலம்

  8. இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்_____ 

    (a)

    பஞ்சாப் 

    (b)

    மகராஷ்டிரா 

    (c)

    உத்தரப்பிரதேசம்

    (d)

    மேற்கு வங்காளம்

  9. இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்

    (a)

    கொல்கத்தா

    (b)

    மும்பை 

    (c)

    அகமதாபாத் 

    (d)

    பரோடா 

  10. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

    (a)

    சிமெண்ட் 

    (b)

    ஆபரணங்கள் 

    (c)

    தேயிலை

    (d)

    பெட்ரோலியம் 

  11. நமது அடிப்படை கடமைகளை______ இடமிருந்து பெற்றோம்.

    (a)

    அமெரிக்க அரசியலமைப்பு 

    (b)

    கனடா அரசியலமைப்பு 

    (c)

    ரஷ்யா அரசியலமைப்பு 

    (d)

    ஐரிஷ் அரசியலமைப்பு 

  12. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    மக்களவை 

    (c)

    பிரதம அமைச்சர் 

    (d)

    மாநிலங்களவை 

  13. WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 

    (a)

    159

    (b)

    164

    (c)

    148

    (d)

    128

  14. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

    (a)

    1930 ஜனவரி 26

    (b)

    1929 டிசம்பர் 26

    (c)

    1946 ஜூன் 16

    (d)

    1947 ஜனவரி 15

  15. 10 x 2 = 20
  16. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக

  17. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.

  18. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  19. ’வானிலையியல்’  வரையறு

  20. கால்நடைகள் என்றால் என்ன?

  21. தனி நபர் வருமானம் என்றால் என்ன?

  22. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

  23. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.

  24. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

  25. தொழில் முனைவு என்றால் என்ன?

  26. 10 x 5 = 50
  27. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?

  28. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

  29. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

  30. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.

  31. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

  32. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

  33. உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக எழுதுக.

  34. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்

  35. GST யின் அமைப்பை எழுதுக.

  36. தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை?

  37. 2 x 8 = 16
  38. பனிப்போர்
    அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான இரு இராணுவப்பிரிவுகளைப் பற்றிக் கூறுக.
    ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை உருவாக்கியவர் யார்? அதை முதலில் பயன்படுத்தியவர் யார்?
    இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
    ஈ) எவ்வகைப் பட்டியில் வார்சா உடன்படிக்கை கலைக்கப்பட்டது?

  39. அணிசேரா இயக்கம்
    அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
    ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
    இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
    ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்களைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - Term II Model Question Paper )

Write your Comment