New ! கணிதம் MCQ Practise Tests



நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(AUB)=0.7, P(A∩B)=0.2 மற்றும் P(B)=0.5 எனில் A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள் எனக்காட்டுக.

  2. A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகளாகவும் P(AUB)=0.6, P(A)=0.2 எனில் P(B) காண்க.

  3. P(A) =0.5, P(B) =0.8 மற்றும் P (B /A) = 0.8, எனில் P(A/B) மற்றும் P(AUB) காண்க.

  4. ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றொரு பையில் 4 வெள்ளை மற்றும் 6 கருப்பு நிறப் பந்துகள் உள்ளன. ஒவ்வொரு பையிலிருந்தும் ஒரு பந்து எடுக்கப்படுகிறது எனில்
    (i) இரண்டும் வெள்ளை நிறப்பந்துகள்
    (ii) இரண்டும் கருப்பு  நிறப்பந்துகள்
    (iii) ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்புப் பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் காண்க.

  5. ஒரு வகுப்பில் \(\frac{2}{3}\)பங்கு மாணவர்களுக்கு மீதம் மாணவியர்களும் உள்ளனர். ஒரு மாணவி முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.85 மற்றும் மாணவர் முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.70 சமவாய்ப்பு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரின் முதல் தரத்தில் தேர்ச்சி பெறுவதற்கான நிகழ்தகவு யாது? 

  6. ஒன்பது நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படும்போது குறைந்து இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. 

  7. P(A) = 0.52, P(B) = 0.43, மற்றும் P(A∩B)=0.24 எனில்
    \(P(A \cap \bar { B) } \)

  8. ஒரு பகடை இருமுறை உருட்டப்படுகிறது, 'முதல் முறை விழுவதில் 5 விழுவது' நிகழ்ச்சி A எனவும் 'இரண்டாவது முறை விழுவதில் 5 விழுவது' B எனக்கொண்டால் P(A\(\cup \)B)-ஐ காண்க.

  9. A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.5, B என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு 0.3, மற்றும் A-யும் B-யும் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சி எனில் கீழ்க்காணும் நிகழ்தகவுகளை காண்க.
    (i)P(A\(\cup \)B) (ii)P(A\(\cap \bar {B}\)) (iii)P(\(\bar {A}\cap \)B)

  10. ஒத்த இரு ஜாடிகளில் ஒன்றில் 6 கருப்பு மற்றும் 4 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. மற்றோரு ஜாடியில் 2 கருப்பு மற்றும் 2 சிவப்பு நிறப்பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு ஜாதி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு பந்து எடுக்கப்படுகிறது.
    (i) அப்பந்து கருப்பாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.
    (ii) எடுக்கப்பட்ட பந்து கருப்பு எனில் முதல் ஜாடியிலிருந்து எடுக்கப்பட்டதற்கான நிகழ்தகவு யாது?

  11. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, B மற்றும் C ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். B என்பவரை மேலாளராக நியமனம் செய்தால் அலுவலக உணவகம் மேம்படுத்துவதற்கான நிகழ்தகவு என்ன?

  12. முதல் 100 மிகை முழுக்களிலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது ஒரு பகா எண் அல்லது 8-இன் மடங்காக இருக்க நிகழ்தகவு யாது?

  13. ஒரு கிரிக்கெட் சங்கத்தில் 16உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் 5 பேர் மட்டுமே பந்து விசும் திறன் படைத்தவர்கள். இவர்களுள் 11 பேர் கொண்ட ஒரு குழுவில் குறைந்தது 3பந்து விச்சாளர்களாவது  இடம் பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.

  14. (i) ஒரு நிகழ்ச்சி A நிகழ சாதக விகிதம் 5க்கு 7எனில் P(A)-ஐ காண்க 
    (ii) P(B)=\({2\over5}\)எனில் நிகழ்ச்சி B நிகழ சாதகவிகித்தைக் காண்க 

  15. ஒரு பகடையை ஒரு முறை உருட்டும்போது ஒரு ஒற்றைபடை எண் கிடைக்கும் எனில் 5 கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction To Probability Theory Two Marks Questions )

Write your Comment