11th Second Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

    (a)

    66.25 g mol-1

    (b)

    44 g mol-1

    (c)

    24.5 g mol-1

    (d)

    662.5 g mol-1

  2. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களின் நிலைப்புத்தன்மை அதிகம். இது பின்வரும் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?

    (a)

    பரிமாற்ற ஆற்றல்

    (b)

    நிலை ஆற்றல்

    (c)

    இயக்க ஆற்றல்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  3. தவறான கூற்றை கண்டறிக

    (a)

    ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.

    (b)

    ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள்,அதிகமான எதிர்மின்சுமையைப் பெற்மையைப் பெற்றுள்ள எதிர்மின் அயனி,அதிகமான அயனி ஆரத்தினை பெறும்.

    (c)

    தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது தனிமங்களின் அணு ஆரம் அதிகரிக்கின்றது.

    (d)

    தனிமவரிசை அட்டவணையின் இரண்டாம் வரிசையில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைகிறது

  4. டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை

    (a)

    2 புரோட்டான் மட்டும்

    (b)

    ஒரு நியூட்ரான்

    (c)

    ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்

    (d)

    2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்

  5. கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.
    \({ M }^{ + }\left( g \right) \xrightarrow [ Aqueous ]{ Medium } { M }^{ + }\left( aq \right) \)

    (a)

    Na

    (b)

    Li

    (c)

    Rb

    (d)

    K

  6. 25 கிராம் நிறையுள்ள கீழ்கண்ட வாயுக்கள் 27oயில் 600mm Hg அழுத்தத்தில் எடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குறைந்த கன அளவு கொண்ட வாயு எது?

    (a)

    HBr

    (b)

    HCl

    (c)

    HF

    (d)

    HI

  7. \(\triangle H=\)

    (a)

    மாறா வெப்பம், மாறா அழுத்தத்தில் வினைவெப்பம் 

    (b)

    மாறா அழுத்தத்தில் வினையில் உட்கொள்ளப்படும் வெப்பம் 

    (c)

    மாறா அழுத்தத்தில் வினையில் வெளிப்படும் ஆற்றல் 

    (d)

    மாறா பருமனில் வினைவெப்பம் 

  8. N2(g) மற்றும் H2(g) ஆகியவற்றிலிருந்து NH3 உருவாதல் ஒரு மீள் வினையாகும்
    N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) + Heat இவ்வினையின் மீது வெப்பநிலை உயர்வினால்
    ஏற்படும் விளைவு என்ன?

    (a)

    சமநிலையில் மாற்றமில்லை

    (b)

    அம்மோனியா உருவாதலுக்கு சாதகமாக உள்ளது.

    (c)

    சமநிலை இடது பக்கத்திற்கு நகரும்.

    (d)

    வினையின் வேகம் மாறாது.

  9. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம். 

    (a)

    NH4Cl

    (b)

    NH3

    (c)

    NaCl

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  10. பின்வருவனவற்றை கவனி:
    I. கொழுப்பின் அசிட்டிக் அமிலத்தொகுப்பு 
    II. டெர்தோலாட்டின் மீத்தேன் தொகுப்பு
    இவற்றுள், கரிமச் சேர்மங்களை ஆய்வகங்களிலும் தயாரித்து அதன் பண்புகளை ஆய்ந்தறிய இயலும் என்பதை உறுதிப்படுத்திய சோதனை எது?

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் அல்ல

  11. பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?

    (a)

    sp2

    (b)

    spd2

    (c)

    sp3

    (d)

    sp2d

  12. ஈத்தேனின் மறைத்தல் மற்றும் எதிரெதிர் வச அமைப்புகளை ஒப்பிடும் போது பின்வருவனவற்றுள் சரியானக் கூற்று எது?

    (a)

    ஈத்தேனின் மறைத்தல் வச அமைப்பில் முறுக்க திரிபு காணப்படினும் எதிர் எதிர் வச அமைக்பைக் காட்டிலும் மறைத்தல் வச அமைப்பு அதித நிலைப்புத் தன்மை உடையது.

    (b)

    ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரவ ஏதுமில்லை .

    (c)

    ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பினைக் காட்டிலும் குறை வான நிலைப்புத் தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு காணப்படுகிறது.

    (d)

    ஈத்தே னின் எதிரெ திர் வச அமை ப்பானது மறைத்தல் வச அமைப்பினை க் காட்டிலும் குறை வான நிலைப்புத்தன்மை உடைய து
    ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரிபு காணப்படுவதில்லை

  13. ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான் 

    (a)

    PCI3

    (b)

    PCI5

    (c)

    SOCI3

    (d)

    மேற்கூறிய அனைத்தும்  

  14. மீஸோஸ்பியரில் காணப்படும் வெப்பநிலை எல்லை 

    (a)

    150C to -560

    (b)

    -560C -to 20

    (c)

    -20C -to -920

    (d)

    -920C -to 12000

  15. கூற்று: ஒரு நல்லியல்பு கரைசலானது ரெளல்ட் விதிக்கு கீழ்படிகிறது.
    காரணம் : ஒரு நல்லியல்பு கரைசலில்,
    கரைப்பான் – கரைப்பான் இடையீடுகளும்,
    கரைபொருள் – கரைபொருள் இடையீடுகளும்,
    கரைபொருள் – கரைப்பான் இடையீடுகளைப் போலவே உள்ளன.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமல்ல 

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

  16. 6 x 2 = 12
  17. ஒப்பு அணு நிறை வரையறு

  18. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.

  19. பின்வரும் வேதி வினைகளை பூர்த்தி செய்து பின்வருமாறு வகைப்படுத்துக்க.
    [அ] நீராற்பகுத்தல்
    [ஆ] ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
    [இ] நீரேற்ற வினைகள்
    (i) KMnO4 + H4O2
    (ii) CaO + H2O

  20. பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
    (அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
    (ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்

  21. சமநிலையில் உள்ள ஒரு வினையில், மந்த வாயுக்களை சேர்ப்பதால் நிகழும்விளைவு என்ன?

  22. எண்ம விதியைப் பற்றி எழுதுக.

  23. பென்சினின் குளோரினேற்றத்தை எழுது.        

  24. நீரில் கரைந்ரைந்துள்ள ஆக்சிஜன் நீர்சூழ் வாழ்க்கைக்கு பொறுப்பாகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு குறைவதற்கு எந்தெந்த  செயல்பாடுகள் பொறுப்பாகின்றன?

  25. கரைதிறன் மீதான அழுத்தத்தின் விளைவை விளக்குக.

  26. 6 x 3 =18
  27. வரையறு: சமமான நிறை.

  28. ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.

  29. NH3, H2O மற்றும் HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக. தங்களது வரிசைப்படுத்தலுக்கான அடிப்படையினை விளக்குக.

  30. 2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)

  31. ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.

  32. மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.

  33. 0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)

  34. குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
    அ. ஹலேஜனேற்றம் 
    ஆ. நைட்ரோ ஏற்றம் 
    இ.சல்போனேற்றம் 
    ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை 

  35. 2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.

  36. 5 x 5 = 25
  37. ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.

  38. 140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.

  39. ஹைட்ரஜனின் (A) என்ற ஐசோடோப்பானது 16ம் தொகுதி, 2வது வரிசையில் உள்ள ஈரணு மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து அணுக்கரு உலைகளில் மட்டுப்படுத்தியாகச் செயல்படும் (B) என்ற சேர்மத்தினைத் தருகிறது. (A) ஆனது (C) – C3H6 உடன் சேர்க்கை வினைக்கு உட்பட்டு (D)யைத் தருகிறது. A, B, C மற்றும் Dயைக் கண்டறிக.

  40. கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
    அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும் 
    ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
    இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் (tyres) கோடையில் குளிர்காலத்தை விடகாற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
    ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும். 

  41. ஒரு தானியங்கி மோட்டார் வாகன இயந்திரத்தில் பெட்ரோல் 8160 C வெப்பநிலையில் எரிக்கப்படுகிறது.சூழலின் வெப்பநிலை 210 C ஆக இருக்கும்போது இயந்திரத்தின் அதிகபட்ச திறனை கணக்கிடுக.

  42. ஹைட்ரஜனை தொழில் முறையில் தயாரிக்க பின்வரும் நீர்வாயு மாற்ற வினை மிக முக்கியமானதாகும்.
    CO(g) + H2O(g) ⇌ CO2(g) + H2(g)
    கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் KP = 2.7, 2L குடுவையில் 0.13 மோல் CO, 0.56 மோல் நீர் 0.78 மோல் CO2 மற்றும் 0.28 மோல் H2 ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டால், சமநிலையை அடைய வினை எந்த திசையில் நிகழும் எனக் கண்டறிக.

  43. ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.

  44. இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.

  45. வெவ்வேறு மாதிரியான பிளவு எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  46. 20% O2 மற்றும் 80% N2 கனஅளவு வீதத்தை கொண்டுள்ள காற்று, சமநிலையில் இருக்கும்போது, 298 K வெப்பநிலையில், நீரில் கரைக்கப்பட்டுள்ள O2 மற்றும் N2 ஆகியவற்றின் கனஅளவு சதவீதத்தை கணக்கிடுக. இவ்விரண்டு வாயுக்களின் ஹென்றி மாறிலிகளின் மதிப்புகள்
    KH(O2) = 4.6 x 104 atm and KH (N2) = 8.5 x 104 atm.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Chemistry Model Revision Test Question Paper 2019 )

Write your Comment