முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 31

    பகுதி I

    31 x 1 = 31
  1. எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?

    (a)

    ஒற்றைப்பதிவு முறை 

    (b)

    இரட்டைப்பதிவு முறை 

    (c)

    முழுமைபெறா 

    (d)

    முழுமைபெற்ற 

  2. இரட்டைப்பதிவு முறையை கட்டாயமாகப் பின்பற்றாத நிறுவனங்களின் கணக்கேடுகள் அந்நிறுவனத்தின் ________ மற்றும் _______ களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப பராமரிக்கப்படுகின்றன.

    (a)

    உரிமையாளர்கள், தொழிலாளர்கள் 

    (b)

    உரிமையாளர்கள், வங்கியர் 

    (c)

    தொழிலாளர்கள், கணக்காளர்கள் 

    (d)

    உரிமையாளர்கள், கணக்காளர் 

  3. கணக்குகள் இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கப்படும் போது _______ தயாரிக்கப்படுகிறது.

    (a)

    நிலையறிக்கை 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் ரூ.60,000; முதல் ரூ.45,000; அந் நிறுவனத்தின் பொறுப்புகள் _______ ஆகும்.

    (a)

    ரூ.1,05,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.45,000

    (d)

    ரூ.15,000

  5. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றை எதன்படி தயாரிக்க வேண்டும்?

    (a)

    இந்திய நிறுமச்சட்டம், 2018, பட்டியல் III ன் படி 

    (b)

    இந்திய ஒப்பந்தச்சட்டம் 1986ன் படி 

    (c)

    இந்திய பட்டயக்கணக்காளர் நிறுமச்சட்டம் 2013 ன் படி 

    (d)

    இந்திய நிறுமச்சட்டம், 20133 பட்டியல் III ன் படி 

  6. நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவது எந்த கணக்கின் கீழ் வரும்.

    (a)

    முதலின வரவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயின வரவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  7. _______ என்பது ஒவ்வொரு உறுப்பினர்களிடமிருந்தும் உறுப்பினராக சேரும்போது ஒரே ஒருமுறை வசூலிக்கப்படும் கட்டணமாகும்.

    (a)

    நுழைவுக் கட்டணம் 

    (b)

    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 

    (c)

    சந்தா 

    (d)

    உயில்கொடை நிதி 

  8. எந்த நிறுவனம் இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நாடைபெறுகிறது?

    (a)

    கூட்டாண்மை

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    கூட்டுறவுச் சங்கம்

    (d)

    இந்துக் கூட்டுக் குடும்ப வணிகம்

  9. கூட்டாண்மை உடன்பாடு இல்லாதபோது கூட்டாளிகளுக்கு

    (a)

    ஊதியம் அளிக்கப்படும்

    (b)

    ஊதியம் அளிக்கப்படமாட்டாது 

    (c)

    நிறுவனத்திற்காக உழைத்தவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும்

    (d)

    இலாபம் அளிக்கப்படமாட்டாது

  10. தனியாள் வணிகத்தில் இலாபநட்டக் கணக்கில் உள்ள இலாபம் அல்லது நட்டம், தனியாள் வணிகரின் ______ கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது.

    (a)

    சொத்து

    (b)

    முதல்

    (c)

    எடுப்பு

    (d)

    கடனாளிகள்

  11. _______ கணக்கு இலாபநட்டக் கணக்கின் நீட்டிப்பாகும்.

    (a)

    இலாபநட்டப் பகிர்வு

    (b)

    வியாபாரக்

    (c)

    முதல்

    (d)

    எடுப்பு

  12. நற்பெயர் ஒரு

    (a)

    புலனாகும் சொத்து

    (b)

    புலனாகாச்சொத்து 

    (c)

    கற்பனை சொத்து

    (d)

    அசையும் சொத்து

  13. ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தில் ______ ன் தற்போதைய ஆண்டு மதிப்பாகும்.

    (a)

    ஒரு ரூபாயின்

    (b)

    இரண்டு ரூபாயின்

    (c)

    ஐந்து ரூபாயின்

    (d)

    பாத்து ரூபாயின்

  14. கூட்டாண்மை நிறுவனத்தில் சேர்க்கப்படும் ஒரு கூட்டாளி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

    (a)

    உரிமையாளர்

    (b)

    உள்வரும் கூட்டாளி

    (c)

    விளக்கும் கூட்டாளி

    (d)

    பங்குதாரர்

  15. கூட்டாளி சேர்க்கையின் பொழுது, பழைய இலாபப் பகிர்வு விகிதத்திற்கும் இடையேயான வேறுபாடு ________ விகிதம் ஆகும்

    (a)

    புதிய இலாபப்பகிர்வு

    (b)

    பழைய இலாபப் பகிர்வு

    (c)

    தியாக

    (d)

    ஆதாய

  16. சொத்துக்களையம் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்வது எத்தனை முறைகளில் கையாளப்படுகின்றன?

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    நான்கு

    (d)

    ஐந்து

  17. கடந்த ஆண்டுகளின் இலாபங்கள் அல்லது நட்டங்கள் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தால் அது _________ எனப்படும்.

    (a)

    பகிர்ந்து தரா இலாபங்கள் அல்லது நட்டங்கள் நற்பெயர்

    (b)

    நற்பெயர்

    (c)

    பொதுக்காப்பு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  18. கூட்டாளி விலகளின்பொழுது, நற்பெயர் மதிபெற்றம் அனைத்துக் கூட்டாளிகளின் முதல் கணக்குகளில் _______ பக்கம் மாற்றப்படும்

    (a)

    பற்று

    (b)

    வரவு

    (c)

    இரண்டு பக்கங்களிலும்

    (d)

    இவை எதுவுமில்லை

  19. அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    ஒப்பிய முதல் 

    (b)

    வெளியிட்ட முதல் 

    (c)

    அங்கீகரிக்கப்பட்ட முதல் 

    (d)

    செலுத்தப்பட்ட முதல் 

  20. ______ என்பது தன்னார்வமாக செயல்படும் நபர்களின் சங்கம்.

    (a)

    தனியாள் வணிகம் 

    (b)

    கூட்டாண்மை 

    (c)

    கூட்டுறவுச் சங்கம் 

    (d)

    நிறுமம் 

  21. அழைப்பு நிலுவை வட்டி விதம் ஆண்டுக்கு _______ மேல் மிகக் கூடாது.

    (a)

    10%

    (b)

    3%

    (c)

    5%

    (d)

    2%

  22. அட்டவணை A-யின்படி, அழைப்பு நிலுவைக்கு கணக்கிடப்படும் வட்டி ________.

    (a)

    4%

    (b)

    5%

    (c)

    6%

    (d)

    10%

  23. வியாபார நிறுவனங்கள் இலாபத் தன்மை மற்றும் நிதி நிலையை அறிந்து கொள்ள ஒரு கணக்காண்டின் இறுதியில் தயாரிக்கப்படுவது எது?

    (a)

    வருமான அறிக்கை, இருப்பு நிலைக் குறிப்பு 

    (b)

    நிலை அறிக்கை, பெறுதல் மற்றும் செலுத்தல் கணக்கு 

    (c)

    இலாப நட்டக் கணக்கு 

    (d)

    வியாபாரக் கணக்கு 

  24. ________ அறிக்கைகள் என்பது நிதிநிலை தகவல்களுக்கான ஆதாரமாகும்.

    (a)

    வருமான 

    (b)

    நிதி நிலை 

    (c)

    செலவின 

    (d)

    இலாப நட்ட 

  25. _____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.

    (a)

    மாறுபடும் முதல் 

    (b)

    நிலை முதல் 

    (c)

    நடைமுறை முதல் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  26. ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுவது எது?

    (a)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    முதல் உந்து திறன் விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  27. வணிக நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் இயக்க செயல்பாட்டை _____ பகுப்பாய்வின் மூலம் அறிய முடியும்.

    (a)

    நிதிநிலை 

    (b)

    போக்கு 

    (c)

    ரொக்க ஓட்டம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  28. மொத்த விற்பனை ரூ.3,40,000 கிடைத்த மொத்த இலாபம் ரூ.1,40,000 விற்ற பொருளின் அடக்க விலை _____ ஆகும்.

    (a)

    ரூ.2,00,000

    (b)

    ரூ.4,80,000

    (c)

    ரூ.3,40,000

    (d)

    ரூ.3,50,000

  29. _______ சொத்துகள் எளிதாக ரொக்கமாக்கக்கூடியவை.

    (a)

    நடப்பு சொத்துகள் 

    (b)

    நிலையான சொத்துகள் 

    (c)

    கற்பனை சொத்துகள் 

    (d)

    அசையும் சொத்துகள் 

  30. எந்த ஆண்டு இந்திய சரக்கு மற்றும் சேவை  வரிக்கு தேவைக்கேற்ப Tally.ERP9 solutions மேம்படுத்தப்பட்டது?

    (a)

    2007

    (b)

    2009

    (c)

    2015

    (d)

    2017

  31. ________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    சான்றாவணம் 

    (d)

    இருபாய்வு 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment