பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 16

    பகுதி I

    16 x 1 = 16
  1. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

    (a)

    இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

    (b)

    ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

    (c)

    இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

    (d)

    வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

  2. பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

    (a)

    பழைய செய்தித்தாள்கள் விற்றது

    (b)

    சொத்து விற்பனை மீதான நட்டம் 

    (c)

    செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்

    (d)

    அறைகலன் விற்ற தொகை

  3. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

    (b)

    கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.

    (c)

    கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.

    (d)

    கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

  5. சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.

    (a)

    ரூ.25,000

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.10,000

    (d)

    ரூ.15,000

  6. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

    (a)

    முதல் விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    ஆதாய விகிதம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  7. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    2:1

    (d)

    1:2

  8. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  9. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  10. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.

    (a)

    பங்கொன்று ரூ.10

    (b)

    பங்கொன்று ரூ.8

    (c)

    பங்கொன்று ரூ.5

    (d)

    பங்கொன்று ரூ.2

  11. நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.

    (a)

    பணம்சாரா தகவல்கள்

    (b)

    கடந்தகால தகவல்கள்

    (c)

    குறுகிய கால தகவல்கள்

    (d)

    நீண்டகால தகவல்கள்

  12. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

    (a)

    10%

    (b)

    110%

    (c)

    90%

    (d)

    11%

  13. ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
    (i) விரைவு விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) புற அக பொறுப்புகள் விகிதம்
    (iv) நடப்பு விகிதம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (i) மற்றும் (iv)

    (c)

    (ii) மற்றும் (iii)

    (d)

    (ii) மற்றும் (iv)

  14. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்______.

    (a)

    2 மடங்கு

    (b)

    3 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    8 மடங்கு

  15. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தலைமைப் பதிவு 

    (b)

    அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

    (c)

    அறிக்கைகள் 

    (d)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது 

  16. அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்? 

    (a)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (b)

    உரிய குறிப்பேடு சான்றாவணம் 

    (c)

    கொள்முதல் சான்றாவணம் 

    (d)

    பெறுதல்கள் சான்றாவணம் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment