மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 18

    பகுதி I

    18 x 1 = 18
  1. நிலை அறிக்கை ஒரு_______.

    (a)

    வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை

    (b)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

    (c)

    ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு

    (d)

    கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு

  2. தொடக்க முதல் ரூ. 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ரூ. 6,000, அவ்வாண்டின் இலாபம் ரூ. 2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.

    (a)

    ரூ. 9,000

    (b)

    ரூ. 11,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 3,000

  3. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு______.

    (a)

    பெயரளவுக் கணக்கு

    (b)

    சொத்து கணக்கு

    (c)

    ஆள்சார் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  4. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  5. கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது______.

    (a)

    சம்பளம்

    (b)

    கழிவு

    (c)

    கடன் மீது வட்டி

    (d)

    முதல் மீது வட்டி

  6. ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது _____.

    (a)

    சராசரி இலாபம்

    (b)

    சாதாரண இலாப விகிதம்

    (c)

    எதிர்நோக்கும் இலாப விகிதம்

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  7. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு _____.

    (a)

    ரூ.40,000

    (b)

    ரூ.70,000

    (c)

    ரூ.1,00,000

    (d)

    ரூ.30,000

  8. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

    (a)

    முதல் விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    ஆதாய விகிதம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  9. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    2:1

    (d)

    1:2

  10. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  11. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்_____.

    (a)

    4:3

    (b)

    3:4

    (c)

    2:1

    (d)

    1:2

  12. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  13. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.

    (a)

    பங்கொன்று ரூ.10

    (b)

    பங்கொன்று ரூ.8

    (c)

    பங்கொன்று ரூ.5

    (d)

    பங்கொன்று ரூ.2

  14. நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது.

    (a)

    பணம்சாரா தகவல்கள்

    (b)

    கடந்தகால தகவல்கள்

    (c)

    குறுகிய கால தகவல்கள்

    (d)

    நீண்டகால தகவல்கள்

  15. ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது______.

    (a)

    முடிவு

    (b)

    விகிதம்

    (c)

    மாதிரி

    (d)

    தீர்மானம்

  16. நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.

    (a)

    1:1

    (b)

    2.5:1

    (c)

    2:1

    (d)

    1:2

  17. Tally-யில் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்) ?
    (i) ரொக்கம் 
    (ii) இலாப நட்டக் க/கு 
    (iii) முதல் க/கு 

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (i) மற்றும் (ii) இவை இரண்டும் 

    (d)

    (ii) மற்றும் (iii) இவை இரண்டும் 

  18. Tally- யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்? 

    (a)

    Gateway of Tally -> Reports -> Trial Balance

    (b)

    Gateway of Tally -> Trial Balance

    (c)

    Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment