பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 34

    பகுதி I

    34 x 1 = 34
  1. கூற்று மற்றும் காரண வினாக்கள் :
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
    கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
    காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப் பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.

  2. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் _____.

    (a)

    கோழை

    (b)

    சீம்பால்

    (c)

    லாக்டோஸ்

    (d)

    சுக்ரோஸ்

  3. கூற்று மற்றும் காரண வினாக்கள்:
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்ககாணும் வகையில் குறிப்பிடுக.
    A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
    R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    ‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை. 

  4. கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?

    (a)

    கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய் 

    (b)

    டிரிபோனிமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகிறது.

    (c)

    கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.

    (d)

    எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.

  5. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

    (a)

    Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (b)

    Y - குரோமோசோமில் ஒங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (c)

    X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (d)

    X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  6. XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்

    (a)

    வேறுபட்ட இனச்செல் ஆண்

    (b)

    வேறுபட்ட இனச்செல் பெண்

    (c)

    ஒத்த இனச்செல் ஆண்

    (d)

    ஆ மற்றும் இ

  7. இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது

    (a)

    A

    (b)

    AB

    (c)

    B

    (d)

    O

  8. டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?

    (a)

    ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது

    (b)

    ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.

    (c)

    பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதிய டி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.

    (d)

    நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.

  9. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    (a)

    பரவல் முறை தகவமைப்பு

    (b)

    குவி பரிணாமம்

    (c)

    விரி பரிணாமம்

    (d)

    மாறுபாடுகள்

  10. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

    (a)

    உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

    (b)

    திடீர்மாற்றம் இல்லாத நிலையில் 

    (c)

    வலசை போதல் இல்லாத நிலையில்

    (d)

    இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.

  11. ஹீமோசோயின் என்பது

    (a)

    ஹீமோகுளோபினின் முன்னோடி

    (b)

    ஸ்ட்ரெப்டோகாக்கஸிலிருந்து வெளியேறும் நச்சு

    (c)

    பிளாஸ்மோடியம் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு

    (d)

    ஹீமோஃபைல்ஸ் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு

  12. செல் வழி நோய்த்தடை காப்பில் ____________மற்றும் திரவ வழி நோய்த்தடை காப்பில் ____________பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன

    (a)

    B செல்கள் / T செல்கள்

    (b)

    எபிடோ ப் / எதிர்பொருள் தூண்டி

    (c)

    T செல்க ள் / B செல்க ள்

    (d)

    எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி

  13. கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம் _____.

    (a)

    உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல் 

    (b)

    உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்தல் 

    (c)

    படிவாதலை குறைத்தல்

    (d)

    படிவாதலை அதிகரித்தல்

  14. எலைசா முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது

    (a)

    திடீர் மாற்றங்களைக் கண்டறிய

    (b)

    நோய்க்கிருமிகளைக் கண்டறிய

    (c)

    விரும்பத்தக்க பண்புகளைடைய விலங்குகளைத் தேர்வு செய்ய

    (d)

    விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத்  தேர்வு செய்ய

  15. கீழ்க்கண்டவற்றுள் r–சிற்றினத்துக்கு உதாரணம்

    (a)

    மனிதன்

    (b)

    பூச்சிகள்

    (c)

    காண்டாமிருகம்

    (d)

    திமிங்கலம்

  16. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள் ______.

    (a)

    ஒத்தமைவான்கள்

    (b)

    ஒழுங்கமைவான்கள்

    (c)

    வலசைபோகின்றன

    (d)

    செயலற்ற நிலையில் உள்ளன

  17. 1992இல் நடந்த ரியோ உச்சி மாநாட்டின் "செயல்திட்டம் 21" எதனுடன் தொடர்புடையது?

    (a)

    நிலையான வளர்ச்சி

    (b)

    மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்துப் போராடுவது

    (c)

    பசுமை இல்லா வாயுக்களின் வெளிப்பாட்டை குறைக்கும் விதிமுறைகள்

    (d)

    சுத்தமான ஆற்றலுக்காக, வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை பரிமாற்றுதல்.

  18. குடிநீரில் அதிக அளவு புளுரைடு  ______ ஐ ஏற்படுத்துகிறது.

    (a)

    நுரையீரல் நோய்

    (b)

    குடல் தொற்றுகள்

    (c)

    புளுரோஸிஸ்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  19. மகரந்தப்பைசுவர் அடுக்குளை மகரந்த அறையிலிருந்து வெளிப்புறமாக வரிசைப்படுத்தவும்.

    (a)

    புறத்தோல், மைய அடுக்கு, டபீட்டம், எண்டோதீசியம்

    (b)

    டபீட்டம், மைய அடுக்கு, புறத்தோல், எண்டோதீசியம்

    (c)

    எண்டோதீசியம், புறத்தோல், மைய அடுக்கு, டபீட்டம்

    (d)

    டபீட்டம், மைய அடுக்கு, எண்டோதீசியம், புறத்தோல்

  20. முளைவேர் உறை காணப்படும் தாவரம் ____.

    (a)

    நெல்

    (b)

    பீன்ஸ்

    (c)

    பட்டாணி

    (d)

    டிரைடாக்ஸ்

  21. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

    (a)

    இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

    (b)

    F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

    (c)

    F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

    (d)

    இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

  22. சோதனைக் கலப்பின் இரு பண்புக் கலப்பில் ஈடுபடும் முதல் மகவுச்சந்ததிகளில் அதிகப் பெற்றோரிய சந்ததிகள் மறுசேர்க்கையின் மூலம் உருவாக்கப்படுவது. இது எதைக் குறிக்கிறது?

    (a)

    இரு வேறுபட்டக் குரோமோசோம்களில்  காணப்படும் இரு மரபணுக்கள்

    (b)

    குன்றல்பகுப்பின் போது பிரிவுறாக் குரோமோசோம்கள்

    (c)

    ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மரபணுக்கள்

    (d)

    இரு பண்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களால் கட்டுப்படுத்த ப்படுவது

  23. ஒரு அயல்அறுமடியம் கொண்டிருப்பது ____.

    (a)

    ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்

    (b)

    மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்

    (c)

    மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்

    (d)

    ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்

  24. கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
    காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ரான்களை அயனியாக்க  இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி.

    (b)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (c)

    கூற்று தவறு. காரணம் சரி.

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  25. pBR 322, BR என்பது ______.

    (a)

    பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு 

    (b)

    பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம் 

    (c)

    பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

    (d)

    பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ் 

  26. நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது 

    (a)

    நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

    (b)

    சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

    (c)

    நுண்வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல் 

    (d)

    நுண் மற்றும் பெரு வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழி அற்ற முறையில் பெருக்கமடையச் செய்தல் 

  27. தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது ______.

    (a)

    நிக்கோட்டினிக் அமிலம் 

    (b)

    கோபால்ட்டஸ் குளோரைடு 

    (c)

    EDTA 

    (d)

    அகார் 

  28. கீழ்கண்ட கூற்றுகளில் காணப்படும் கோடிட்ட இடங்களுக்கான சரியா விடைகளைக் கொண்டு பூர்த்தி செய்க.
    i) மண்ணில் காணப்படும் மொத்த நீர் ____.
    ii) தாவரங்களுக்குப் பயன்படாத நீர் ______.
    iii) தாவரங்களுக்குப் பயன்படும் நீர் ______.

    (a)
    ii iii
    ஹாலார்டு எக்ஹார்டு கிரிஸ்ஸார்டு
    (b)
    ii iii
    எக்ஹார்டு ஹாலார்டு கிரிஸார்டு
    (c)
    ii iii
    கிரிஸ்ஸார்டு எக்ஹார்டு ஹாலார்டு
    (d)
    ii iii
    ஹாலார்டு கிரிஸ்ஸார்டு எக்ஹார்டு
  29. ஒட்டிக்கொள்ளும் சுரப்பி தூவிகளை கொண்டுள்ள போயர்ஹாவியா மற்றும் கிளியோம் இவற்றிற்கு உதவி செய்கிறது.

    (a)

    காற்று மூலம் விதை பரவுதல் 

    (b)

    விலங்குகள் மூலம் விதை பரவுதல் 

    (c)

    தன்னிச்சையாக விதை பரவுதல் 

    (d)

    நீர் மூலம் விதை பரவுதல் 

  30. கீழ்க்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறைகள் அல்ல,

    (a)

    வடிதல் 

    (b)

    சிதைமாற்றம் 

    (c)

    வளர்மாற்றம் 

    (d)

    துணுக்காதல் 

  31. காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை ?

    (a)

    வேகமான ஊட்டசத்து சுழற்சி

    (b)

    மண் அரிப்பு

    (c)

    மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை

    (d)

    இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்

  32. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது _____.

    (a)

    நகலாக்கம்

    (b)

    கலப்பின வீரியம்

    (c)

    தேர்ந்தெடுத்தல்

    (d)

    அறிமுகப்படுத்துதல்

  33. பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்து

    பட்டியல் I பட்டியல் II
    i) தனிவாழ் உயிரி N2 அ) ஆஸ்பர் ஜில்லஸ் சிற்றினம்
    ii) கூட்டுயிரி N2 ஆ) அமானிடா சிற்றினம்
    iii) P கரைக்கும் திறனுடையது இ) அனபீனா அசோலா
    iv) P இடம் மாற்றும்
    திறனுடையது
    ஈ) அசடோ பாக்டர்
    (a)
    II  III   IV 
    இ  அ  ஆ  ஈ 
    (b)
    II  III   IV 
    ஈ   இ  அ 
    (c)
    II  III   IV 
    அ   இ  ஆ  ஈ 
    (d)
    II  III   IV 
    ஆ   அ  ஈ 
  34. கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.
    காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது

    (a)

    கூற்று சரி, காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு, காரணம் சரி

    (c)

    கூற்று, காரணம் - இரண்டும் சரி

    (d)

    கூற்று, காரணம் – இரண்டும் தவறு

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment