மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 33

    பகுதி I

    33 x 1 = 33
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

    (a)

    விதைப்பை 

    (b)

    ஆண்குறி 

    (c)

    சிறுநீர் வடிகுழல் 

    (d)

    விந்தகம் 

  3. தவறான இணையைக் கண்டுபிடி

    (a)

    இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்

    (b)

    நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை – ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்

    (c)

    லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு

    (d)

    அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி

  4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

    (a)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை.

    (c)

    கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

    (d)

    கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

  5. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IA I0 X IA IB களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை?

    (a)

    AB

    (b)

    O

    (c)

    A

    (d)

    B

  6. ________ என்பவை பல்வேறு மனித மரபுக்கடத்தல்நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில பங்குபெறுகிறது.

    (a)

    புறதோற்ற மேம்பாட்டியல்

    (b)

    இனமேம்பாட்டியல்

    (c)

    சூழ்நிலை மேம்பாட்டியல்

    (d)

    மேற்கண்ட அனைத்னைத்தும்

  7. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

    (a)

    டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.

    (b)

    டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.

    (c)

    டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இலையின் 3 முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோட்டுகளை இணைக்கும்.

    (d)

    ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.

  8. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.

    (a)

    காற்றில்

    (b)

    நிலத்தில்

    (c)

    நீரில்

    (d)

    மலைப்பகுதியில்

  9. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

    (a)

    உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

    (b)

    திடீர்மாற்றம் இல்லாத நிலையில் 

    (c)

    வலசை போதல் இல்லாத நிலையில்

    (d)

    இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.

  10. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ______ல் காணப்படுகிறது.

    (a)

    நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்

    (b)

    மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்

    (c)

    நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்

    (d)

    பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்

  11. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது ____.

    (a)

    ஒற்றை இழை ஆர்.என்.ஏ

    (b)

    இரட்டை இழை ஆர்.என்.ஏ

    (c)

    ஒற்றை இழை டி.என்.ஏ

    (d)

    இரட்டை இழை டி.என்.ஏ

  12. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாவிலிருந்து பெறப்படும் கிரைடாக்சின் என்ற நச்சு எதற்கு எதிராக செயல்படுகிறது?

    (a)

    கொசுக்கள் 

    (b)

    ஈக்கள் 

    (c)

    நெமட்டோடுகள் (நூற்புழுக்கள்)

    (d)

    காய்ப் புழுக்கள் 

  13. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் _____.

    (a)

    ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம் 

    (b)

    இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம் 

    (c)

    உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம் 

    (d)

    உட்கரு மாற்றியமைப்பு  நகலாக்கம் 

  14. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்

    (b)

    வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்

    (c)

    டி.என்.ஏ தடுப்பூசிகள்

    (d)

    வழக்கமான தடுப்பூசிகள்

  15. கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ,மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.

    (a)
     
    ஒத்தமைவான் ஒழுங்கமைவான் பகுதி ஒழுங்கமைவான்
    (b)
     
    ஒழுங்கமைவான் பகுதி ஒழுங்கமைவான் ஒத்தமைவான்
    (c)
     
    பகுதி ஒழுங்கமைவான் ஒழுங்கமைவான் ஒத்தமைவான்
    (d)
     
    ஒழுங்கமைவான் ஒத்தமைவான் பகுதி ஒழுங்கமைவான்
  16. உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    எட்வேர்டு வில்சன் 

    (b)

    வால்டர் ரோசன்

    (c)

    நார்மன் மியர்ஸ்

    (d)

    ஆலிஸ் நார்மன்

  17. நீர் நிலைகளில் உள்ள எண்ணெய் கசிவுகள் போன்ற மாசுபாடுகளை அகற்ற நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றத்தினை பயன்படுத்தும் முறை _____.

    (a)

    உயிரிய உருப்பெருக்கம்

    (b)

    உயிரியத் தீர்வு

    (c)

    உயிரிய மீத்தேனாக்கம்

    (d)

    உயிரிய சுருக்கம்

  18. மயோசோட்டிஸின் மகரந்தத்துகளின் அளவு ______.

    (a)

    10 மைக்ரோமீட்டர்

    (b)

    20 மைக்ரோமீட்டர்

    (c)

    200 மைக்ரோமீட்டர்

    (d)

    2000 மைக்ரோமீட்டர்

  19. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.

    (a)

    சூல்

    (b)

    கருப்பை

    (c)

    சூல்திசு

    (d)

    கருவூண் திசு

  20. மரபணு வகையம் AABbCCயைக் கொண்ட தாவரம் எத்தனை வகையான கேமீட்களை உருவாக்கும்?

    (a)

    மூன்று

    (b)

    நான்கு

    (c)

    ஒன்பது

    (d)

    இரண்டு

  21. பாரம்பரிய பட்டாணித் தாவரச் சோதனைகளில் மெண்டல் எதைப் பயன்படுத்தவில்லை?

    (a)

    மலரின் அமைவிடம்

    (b)

    விதையின் நிறம்

    (c)

    கனியின் நீளம்

    (d)

    விதையின் வடிவம்

  22. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றகளில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்

    (a)

    25 AB, 25 ab, 25 Ab, 25 aB

    (b)

    10 AB, 10 ab

    (c)

    45 AB, 45 ab

    (d)

    45 AB, 45 ab, 5 Ab, 5 aB

  23. பின்வரும் கூற்றை கருதுக:
    I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது.
    II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக்கடத்தியாகும் 
    III. தடைக்கட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது.
    மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    I மற்றும் II 

    (b)

    I மற்றும் III 

    (c)

    II மற்றும் III 

    (d)

    I, II மற்றும் III 

  24. Bt பருத்தியின் சில பண்புகள் ______.

    (a)

    நீண்ட நார்களும், அசுவுனி பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத் திறன்.

    (b)

    நடுத்தரமான அறுவடை, நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கான எதிர்ப்புத் தன்மை 

    (c)

    அதிக விளைச்சல் மற்றும் டிப்தீரியன் பூச்சிகளைக் கொல்லக் கூடிய படிக நச்சுப் புரத உற்பத்தி 

    (d)

    அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புதிறன் 

  25. தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது ______.

    (a)

    நிக்கோட்டினிக் அமிலம் 

    (b)

    கோபால்ட்டஸ் குளோரைடு 

    (c)

    EDTA 

    (d)

    அகார் 

  26. நிரல் I-ல் மண்ணின் அளவும், நிரல் II-ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றில் நிரல் I மற்றும் நிரல் II-ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.

    நிரல் I நிரல் II
    I) 0.2 முதல் 2.00 மி.மீ. வரை i) வண்டல் மண்
    II) 0.002 மி.மீ க்கு குறைவாக ii) களிமண்
    III) 0.002 முதல் 0.02 மி.மீ வரை  iii) மணல் 
    IV) 0.002 முதல் 0.2 மி.மீ. வரை iv) பசலை மண் 
    (a)
    I II III IV
    ii iii iv i
    (b)
    I II III IV
    iv i iii ii
    (c)
    I II III IV
    iii ii i iv
    (d)

    எதுவுமில்லை 

  27. ஒட்டிக்கொள்ளும் சுரப்பி தூவிகளை கொண்டுள்ள போயர்ஹாவியா மற்றும் கிளியோம் இவற்றிற்கு உதவி செய்கிறது.

    (a)

    காற்று மூலம் விதை பரவுதல் 

    (b)

    விலங்குகள் மூலம் விதை பரவுதல் 

    (c)

    தன்னிச்சையாக விதை பரவுதல் 

    (d)

    நீர் மூலம் விதை பரவுதல் 

  28. உணவு வலையின் முக்கியத்துவம்?

    (a)

    இது இயற்கையின் சமநிலையை தக்க வைப்பதில்லை 

    (b)

    இது ஆற்றல் பரிமாற்றங்களை வெளிப்படுத்துகிறது 

    (c)

    சிற்றினங்களிடையே நிகழும் இடைவிளைவை விளக்குகிறது 

    (d)

    ஆ மற்றும் இ

  29. தவறான இணையிணையினை கண்டறிக

    (a)

    இடவறை – சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் மற்றும் வேறெங்கும் காணப்படுவதில்லை

    (b)

    மிகு வளங்கள் – மேற்கு தொடர்ச்சிமலை

    (c)

    வெளி வாழிடப் பேணுகை – விலங்கினப் பூங்காக்கள்

    (d)

    கோயில் தோட்டங்கள் – இராஜஸ்தானின் செயின்த்ரி குன்று

    (e)

    இந்தியாவின் அன்னிய ஆக்கிரமிப்பு சிற்றினங்கள் – ஆகாயத் தாமரை

  30.  பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு 

    (a)

    கூட்டுத்தேர்வு - புறத்தோற்றப் பண்புகள்

    (b)

    தூயவழித்தேர்வு – மீண்டும் மீண்டும் நடைபெறும் தன் மகரந்தச்சேர்க்கை

    (c)

    நகல் தேர்வு - பாலினப்பெருக்கம் செய்பவை

    (d)

    இயற்கைத் தேர்வு - இயற்கையின் ஈடுபாடு

  31. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.

    (a)

    சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (b)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (c)

    சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (d)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்

  32. வேர்கடலையின் பிறப்பிடம் ______.

    (a)

    பிலிப்பைன்ஸ்

    (b)

    இந்தியா

    (c)

    வட அமெரிக்கா

    (d)

    பிரேசில்

  33. செயலாக்க மூலமருந்து டிரான்ஸ் - டெட்ராஹட்ரோகென்னாபினால் எதிலுள்ளது?

    (a)

    அபின்

    (b)

    மஞ்சள்

    (c)

    கஞ்சாச்செடி

    (d)

    நிலவேம்பு

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment