மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 40

    பகுதி I

    40 x 1 = 40
  1. ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் _____________

    (a)

    Al

    (b)

    Ni

    (c)

    Cu

    (d)

    Zn

  2. இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற 

    (b)

    கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற 

    (c)

    கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற 

    (d)

    மேற்கண்டுள்ள அனைத்தும் 

  3. சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்________.

    (a)

    வாலை வடித்தல் (Distillation)

    (b)

    புலதூய்மையாக்கல் (Zone refining)

    (c)

    துத்தநாகத்துடன் (Zinc) உலோக இடப்பெயர்ச்சி வினை 

    (d)

    நீர்மமாக்கல் (liquation)

  4. எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு ________.

    (a)

    \(\left( \frac { \Delta { S }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

    (b)

    \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) நேர்குறியுடையது 

    (c)

    \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

    (d)

    \(\left( \frac { \Delta T }{ \Delta G ^ 0 } \right) \)ஆரம்பத்தில் நேர்குறியுடையது  7000C க்கு மேல் \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

  5. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

    (a)

    B2H6

    (b)

    B3H6

    (c)

    B4H10

    (d)

    இவை எதுவுமல்ல 

  6. பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது? 

    (a)

    கார்பன் 

    (b)

    சிலிக்கன் 

    (c)

    காரீயம் (lead) 

    (d)

    ஜெர்மானியம் 

  7. பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது? 

    (a)

    கிராபைட் 

    (b)

    கிராஃபீன் 

    (c)

    ஃபுல்லரீன் 

    (d)

    உலர்பனிக்கட்டி (dry ice)

  8. அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது? 

    (a)

    உலோக போரைடுகள் 

    (b)

    உலோக ஆக்சைடுகள் 

    (c)

    உலோக கார்பனேட்கள் 

    (d)

    உலோக கார்பைடுகள் 

  9. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது _______.

    (a)

    NO மற்றும் NO2 கலவை

    (b)

    நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்

    (c)

    பெர்ரஸ் நைட்ரேட்

    (d)

    பெர்ரிக் நைட்ரேட்

  10. பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?

    (a)

    XeOF4

    (b)

    XeO3

    (c)

    XeF2

    (d)

    NeF2

  11. பின்வருவனவற்றுள் எந்த d-தொகுதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட்டுள்ள இணைதிற கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டாலையும், சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற கூட்டினையும் பெற்றுள்ளது.

    (a)

    Cr

    (b)

    Pd

    (c)

    Pt

    (d)

    இவை எதுவுமல்ல

  12. அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.

    (a)

    ஆக்சலேட்

    (b)

    கார்பன் டை ஆக்ஸைடு 

    (c)

    அசிட்டேட்  

    (d)

    அசிட்டிக் அமிலம் 

  13. பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்தத் தன்மையுடையது?

    (a)

    Eu2+

    (b)

    Yb2+

    (c)

    Ce2+

    (d)

    Sm2+

  14. 0.01 M திறனுடைய 100ml பென்டாஅக்வாகுளோரிடோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை ________

    (a)

    0.02

    (b)

    0.002

    (c)

    0.01

    (d)

    0.2

  15. பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

    (a)

    TiCl4

    (b)

    [CoCl6]4-

    (c)

    [Cu(NH3)4]2+

    (d)

    [Ni(CN)4]2-

  16. உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம் ______________

    (a)

    K4[fe(CN)6]

    (b)

    [Fe(CN)3(NH3)5]

    (c)

    [Fe(CO)5]

    (d)

    (ஆ) மற்றும் (இ) இரண்டும் 

  17. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே ____________

    (a)

    4 மற்றும் 2

    (b)

    6 மற்றும் 6

    (c)

    8 மற்றும் 4

    (d)

    4 மற்றும் 8

  18. ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம் _____________

    (a)

    488.5pm

    (b)

    848.5pm

    (c)

    884.5pm

    (d)

    484.5pm

  19. உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் ______________

    (a)

    NaCl

    (b)

    FeO

    (c)

    ZnO

    (d)

    KCl

  20. 2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு ____________

    (a)

    k= k= k3

    (b)

    k= 3k= 2k3

    (c)

    1.5k1= 3k= k3

    (d)

    2k= k= 3k3

  21. இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303x10-2 hour-1 வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)

    (a)

    0.125M

    (b)

    0.215M

    (c)

    0.25x2.303M

    (d)

    0.05M

  22. ஒரு முதல் வகை வினையானது 60 நிமிடங்களில் 75% நிறைவு பெறுகிறது. அதே வினை, அதே நிபந்தனைகளில் 50% நிறைவு பெறத் தேவையான காலம் ____________.

    (a)

    20 min 

    (b)

    30 min 

    (c)

    35 min 

    (d)

    75 min 

  23. H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள் _______________

    (a)

    முறையே OH மற்றும் H2FH+ ஆகியன

    (b)

    முறையே H3O+ மற்றும் F ஆகியன

    (c)

    முறையே OH மற்றும் F ஆகிய

    (d)

    முறையே H3O+ மற்றும் H2F+ ஆகியன

  24. \(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரை திறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)

    (a)

    10-10

    (b)

    10-12

    (c)

    10-14

    (d)

    கொடுக்கப்பட்ட தகவிலிருந்து கணக்கிட முடியாது

  25. பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது?

    (a)

    \(h=\sqrt{\frac{K_{h}}{C}}\)

    (b)

    \(h=\sqrt{\frac{K_{a}}{K_{b}}}\)

    (c)

    \(h=\sqrt{\frac{K_{h}}{K_{a}.K_{b}}}\)

    (d)

    \(h=\sqrt{\frac{K_{a}.K_{b}}{K_{h}}}\)

  26. ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது

    (a)

    1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

    (b)

    1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

    (c)

    ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்

    (d)

    \(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

  27. H2-O2 எரிபொருள் மின்கலத்தில் எதிர்மின்முனையில் நிகழும் வினை

    (a)

    \(O_{2}(g)+2H_{2}O(l)+4e^{-}\rightarrow 4OH^{-}(aq)\)

    (b)

    \(H^{+}(aq)+OH^{-}(aq)\rightarrow H_{2}O(l)\)

    (c)

    \(2H_{2}(g)+O_{2}(g)\rightarrow 2H_{2}O(g)\)

    (d)

    \(H^{+}+e^{-}\rightarrow \frac{1}{2}H_{2}\)

  28. 25oC வெப்பநிலையில் 1MY மற்றும் 1MZ- ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்த த்தில் X எனும் வாயு குமிழிகள் மூலமாக  செலுத்த ப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,____________

    (a)

    Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது

    (b)

    Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது

    (c)

    Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்

    (d)

    Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்

  29. தலைமுடி கிரீம் என்பது ஒரு _____________

    (a)

    களி

    (b)

    பால்மம்

    (c)

    திண்மக் கூழ்மம்

    (d)

    கூழ்மக் கரைசல்.

  30. ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?

    (a)

    அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.

    (b)

    அயனியின் உருவளவை மட்டும்

    (c)

    அயனியின் மின்சுமையளவை மட்டும்

    (d)

    அயனியின் மின்சுமையின் குறியை மட்டும்

  31. பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின்  நீராற்பகுக்க மூவிணைய ஆல்ஹகாலைத் தரும்?

    (a)

    பென்சால்டிஹைடு

    (b)

    புரப்பனாயிக் அமிலம்

    (c)

    மெத்தில் புரப்பியோனேட்

    (d)

    அசிட்டால்டிஹைடு

  32. எத்தனால்   \(\overset {PCl_5}{\rightarrow}\) X ஆல்ஹகால்   கலந்த   \(\overset {KOH}{\rightarrow}\) Y  \(\overset {Pcl_5 }{ \rightarrow \\ { 298 k} } \) Z  என்ற வினையில் 'Z' என்பது

    (a)

    ஈத்தேன்

    (b)

    ஈத்தாக்ஸி ஈத்தேன்

    (c)

    எத்தில்பைசல்பைட்

    (d)

    எத்தனால் 

  33. பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன்  வினைபுரிந்து தரும் நிறம் _________

    (a)

    சிவப்பு நிறம்

    (b)

    ஊதா நிறம்

    (c)

    அடர் பச்சை நிறம்

    (d)

    எவ்வித நிறமும் உருவாவதில்லை

  34. பின்வருவனவற்றுள் கொடுக்கப்ட்ட  சேர்மங்களின் அமித்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை ____________

    (a)

    FCH2COOH > CH3COOH > BrCH2COOH > ClCH2COOH

    (b)

    FCH2COOH > ClCH2COOH > BrCH2COOH > CH3COOH

    (c)

    CH3COOH > ClCH2COOH > FCH2COOH > Br-CH2COOH

    (d)

    Cl CH2COOH > CH3COOH  > BrCH2COOH > ICH2COOH

  35. பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைப்பொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ர ஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை  முறையே _____________

    (a)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனால்

    (b)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனைல்மெத்தனால்

    (c)

    பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம்பென்சோயேட்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  36. பின்வரும் நைட்ரோ சேர்மங்களில் எது நைட்ரஸ் அமிலத்துடன் வினைபுரியாது _____________

    (a)

    CH3 -CH2 -CH2 -NO2

    (b)

    (CH3)2 CH - CH2 NO2

    (c)

    (CH3)3CNO2

    (d)

  37.  வினையின் விளைபொருள் (p) என்பது ___________

    (a)

    (b)

    (c)

    (d)

  38. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .

    (a)

    NH2-CH(R)-COOH

    (b)

    NH2-CH(R)-COO-

    (c)

    H3N+-CH(R)-COOH

    (d)

    H3N+-CH(R)-COO-

  39. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச்சுவையூட்டியாகும், இது _______ லிருந்து தயாரிக்கப்படுகிறது.

    (a)

    செல்லுலோஸ்

    (b)

    டொலுயீன்

    (c)

    வளையஹெக்ஸீன்

    (d)

    ஸ்டார்ச்

  40. குளோரோசைலினால்மற்றும் டெர்பினிகால் கலவையானது _____ ஆக பயன்படுகிறது

    (a)

    புரைதடுப்பான்

    (b)

    காய்ச்சல் மருந்து

    (c)

    எதிர்உயிரி

    (d)

    வலிநிவாரணி

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment