பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 42

    பகுதி I

    42 x 1 = 42
  1. வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?

    (a)

    மேலாண்மை

    (b)

    நிர்வாகம்

    (c)

    திறமை

    (d)

    உயர்தனிச் சிறப்பு

  2. _________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.

    (a)

    உயரமான

    (b)

    குறுகிய

    (c)

    செங்குத்தான

    (d)

    கிடைமட்டம்

  3. ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும் வலைப்பின்னல் போன்ற செயல்முறைக்கு _________ என்று பெயர்.

    (a)

    ஒழுங்கமைத்தல் 

    (b)

    பணிக்கமர்த்துதல்

    (c)

    ஒருங்கிணைத்தல்

    (d)

    இயக்குவித்தல்

  4. பின்வருவனவற்றுள் எது மேலாண்மையின் துணைச் செயல்பாடுகள்?

    (a)

    புதுமைப்படுத்துதல்

    (b)

    முடிவெடுத்தல்

    (c)

    திட்டமிடுதல்

    (d)

    புதுமைப்படுத்துதல் மற்றும் முடிவெடுத்தல்

  5. சமுதாய குறிக்கோள்களுடன், அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்துவது _________.

    (a)

    விதிவிலக்கு மேலாண்மை

    (b)

    குறியிலக்கு மேலாண்மை

    (c)

    வணிக மேலாண்மை

    (d)

    இவை அனைத்தும்

  6. குறியிலக்கு மேலாண்மை _________ அளவுகோல்களை வழங்குகிறது.

    (a)

    குறிக்கோள்

    (b)

    செயல்முறை

    (c)

    குறிக்கோள் மற்றும் செயல்முறை

    (d)

    செயல்திறன்

  7. ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை

    (a)

    ரொக்கச் சந்தை

    (b)

    உடனடிச் சந்தை

    (c)

    ரொக்கம் (அ) உடனடிச் சந்தை

    (d)

    எதிர்காலச் சந்தை

  8. புதிய வெளியீடுகள் சந்தையில் கொள்முதல் நடைபெறுவது

    (a)

    மறைமுக முறை

    (b)

    மின்னணு முறை

    (c)

    நேரடி முறை

    (d)

    அஞ்சல் வழி முறை 

  9. மூலதனச் சந்தையில் கையாளப்படுவது

    (a)

    பத்திரங்கள்

    (b)

    பங்குகள்

    (c)

    பத்திரங்கள் மற்றும் பங்குகள்

    (d)

    எதுவுமில்லை

  10. காகிதமில்லா மற்றும் காகித மாற்று பங்குகளை கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது

    (a)

    இந்திய உடனடி பங்கு மாற்றகம்

    (b)

    இந்திய பங்கு வாய்ப்பு கழகம் லிமிடெட்

    (c)

    இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட்

    (d)

    தேசிய பத்திரங்கள் களஞ்சியம்

  11. கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?

    (a)

    மத்திய வங்கி

    (b)

    வணிக வங்கி

    (c)

    நிதி நிறுவனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  12. ________ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்

    (a)

    வைப்பு சான்றிதழ்

    (b)

    வணிகத் தாள்கள்

    (c)

    நிதி இரசீது

    (d)

    இவற்றில் எதுவுமில்

  13. கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரியளவு நிதியைப் பெற முடியும்?

    (a)

    பங்குகள்

    (b)

    கடனீட்டு பத்திரங்கள்

    (c)

    பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்

    (d)

    பங்குகள் மட்டும்

  14. பம்பாய் பங்குச்சந்தை முதல் காகிதமில்லா பங்கு வர்த்தனையை தொடங்கியது _______ 

    (a)

    1996 டிசம்பர் 29

    (b)

    1998 டிசம்பர் 27

    (c)

    1997 டிசம்பர் 29

    (d)

    1992 டிசம்பர் 27

  15. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்பது ________ என்பவரால் காகித வடிவிலான பங்குச் சான்றுதழை அழித்து உருவாக்கப்படுகிறது

    (a)

    நிறுவன பதிவாளர்

    (b)

    சார் பதிவாளர்

    (c)

    சட்ட பதிவாளர்

    (d)

    பதிவாளர்

  16. செபியின் உறுப்பினர்கள் _______

    (a)

    இயக்குர்

    (b)

    துணை இயக்குநர்

    (c)

    கூடுதல் இயக்குநர்

    (d)

    இவை அனைத்தும்

  17. இது மனிதவள மேலாண்மை பணிகளில் ஒன்று 

    (a)

    அமைத்தல் 

    (b)

    திரட்டுதல் 

    (c)

    தக்க வைத்தல் 

    (d)

    ஒருங்கிணைத்தல் 

  18. மாற்றத்தை நிறுவனத்தில் திறம்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு _______ ஆக செயல்பட வேண்டும்.

    (a)

    ஊழியர் 

    (b)

    இயக்குநர் 

    (c)

    முகவர் 

    (d)

    நிர்வாகி 

  19. ஆட்சேர்ப்புக்கான காரணங்கள் 

    (a)

    பணியாளர் ஓய்வு 

    (b)

    பணியாளர் இறப்பு 

    (c)

    பணியாளர் வேலை துறப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  20. இதில் எது பணியாளர் தேர்வு முறை நிலையில் ஒன்று?

    (a)

    நேர்காணல் 

    (b)

    உளவியல் தேர்வு 

    (c)

    ஆழ்ந்த நேர்காணல் 

    (d)

    இவை அனைத்தும் 

  21. வங்கியின் முதன்மை அதிகாரி தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இந்திய காவல் பணி அதிகாரியை தேர்ந்தெடுத்தல் செயல் முறை வேறுபடுவது _________ 

    (a)

    வேலை தூண்டுதல் 

    (b)

    பனி சுழற்சி 

    (c)

    பனி தன்மை 

    (d)

    பணி ஒப்பந்தம் 

  22. யாரைப் போல எண்ணி ஒரு மேலதிகாரி தன் கீழ் பணியாளருக்கு பயிற்சி அளித்தார்.

    (a)

    மேலாளர்

    (b)

    இயக்குநர்

    (c)

    இரண்டும்

    (d)

    ஒருங்கிணைப்பாளர்

  23. மூத்த நபர்களால் வழிகாட்டும் முறை

    (a)

    கருத்தரங்கு மாநாட்டு முறை

    (b)

    பங்கேற்று நடத்தல் முறை

    (c)

    செயல்விளக்க பயிற்சி முறை

    (d)

    வழிகாட்டுதல் முறை

  24. வாங்குவோர் மற்றும் விற்போர் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே சந்தையிடுகையில் ஈடுபடுவர்.

    (a)

    உள்ளூர் சந்தை

    (b)

    தேசிய சந்தை

    (c)

    உலகளாவிய சந்தை

    (d)

    களச் சந்தை

  25. _________ ஆனது அரசின் சட்ட விதிகளால் கட்டுப்படுத்தப்படுவது அல்ல.

    (a)

    ஒழுங்கு முறை சந்தை

    (b)

    ஒழுங்கு முறையற்ற சந்தை

    (c)

    முறையான சந்தை

    (d)

    முறையற்ற சந்தை

  26. சந்தையிடுகை என்பது _________ என்ன செய்கின்றாரோ அதுவேயாகும்.

    (a)

    சந்தையிடுகையாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    நுகர்வோர்

    (d)

    மேலாளர்

  27. நுகர்வோர் நலன் கருதி பண்டகம் மற்றும் பணிகளுக்கு இணையான மதிப்பை மாற்றிக் கொள்ள தக்க ஒன்றுதான்  _________.

    (a)

    விற்பனை

    (b)

    விலை

    (c)

    போக்குவரத்து

    (d)

    கட்டுமம்

  28. _________ மூலம் இறுதி நுகர்வோருக்கு மின் இணையம் வழியாக பொருள் அல்லது சேவைகளை பராமரித்தல் செய்கிறது.

    (a)

    வினைத்தள கடை

    (b)

    மெய் நிகர் கடை

    (c)

    இரண்டும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  29. A  என்பவர் ஒரு அலைபேசியை B க்கு விற்பனை செய்கிறார்.
    B என்பவர் அலைபேசியை C க்கு விற்பனை செய்கிறார்.
    A என்பவர் அதை D க்கு விற்பனை செய்கிறார். ஆனால் B மற்றும் C விற்பனை செய்ததில் கழிவு A க்கும் உண்டு. இது எந்த வகை சந்தையிடல்?

    (a)

    பல்நோக்கு அளவு சந்தையிடல்

    (b)

    உள்ளடக்க சந்தையிடல்

    (c)

    கொரில்லா சந்தையிடல்

    (d)

    வைரல் சந்தையிடல்

  30. நுகர்வோரின் தோற்றம் பெற்ற நாடு

    (a)

    பிரான்ஸ்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    அமெரிக்கா

    (d)

    இந்தியா

  31. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________

    (a)

    1896

    (b)

    1986

    (c)

    1968

    (d)

    1868

  32. பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவை கீழ்காண்பவர்களில் யாரிடம் தாக்கல் செய்யலாம்?

    (a)

    புகார் மனு தயாரிப்பாளர்

    (b)

    விற்பனையாளர்

    (c)

    பொருளை விற்ற வணிகர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  33. ஒரு வியாபாரத்தை உருவாக்குவதற்கும் மற்றும் அழிப்பதற்குமான திறமை யாரிடம் உள்ளது?

    (a)

    வணிகர்கள் 

    (b)

    விற்பாண்மையர் 

    (c)

    பொதுமக்கள் 

    (d)

    உற்பத்தியாளர் 

  34. தாராளமயமாக்கல் கொள்கை சிறு தொழிகளின் முதலீட்டை ரூபாய் _________ ஆக உயர்த்தியுள்ளது.

    (a)

    1 இலட்சம் 

    (b)

    10 இலட்சம் 

    (c)

    1 கோடி 

    (d)

    10 கோடி 

  35. கீழ்க்கண்டவற்றுள் சரக்கு என்ற சொல்லின் கீழ் வராத ஒன்றை தெரிவு செய்க.

    (a)

    பங்குகள் 

    (b)

    பயிர்கள் 

    (c)

    அறைகலன் 

    (d)

    நற்பெயர் 

  36. கடனுறுதி சீட்டின் சலுகை நாள் எத்தனை?

    (a)

    ஆறு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  37. இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ________ ஆம் ஆண்டு ஒரு அரசு சார்புடைய சங்கமாக பதிவு செய்யப்பட்டது?

    (a)

    1886

    (b)

    1776

    (c)

    1996

    (d)

    2006

  38. எவ்வித பின்புலமும் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்கள் ________ தொழில் முனைவோர் ஆவார்.

    (a)

    பாராம்பரிய 

    (b)

    நவீன 

    (c)

    முதல் தலைமுறை 

    (d)

    ஊரக 

  39. சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லாத பகுதிகளுக்கு 25 சதவீதம் மானியத்தை வழங்கும் திட்டம் ______ 

    (a)

    ஒற்றை புள்ளி பதிவு திட்டம் 

    (b)

    அடல் இன்பு வேசன் சென்டர்ஸ் 

    (c)

    திருத்தப்பட்ட சிறப்பு ஊக்க தொகுப்பு திட்டம் 

    (d)

    பால் பண்ணை தொழில் முனைவு 

  40. ஒரு தனி நிறுமம் அதிகபட்சமாக _________ உறுப்பினர்களை வைத்துக் கொள்ளலாம்.

    (a)

    25

    (b)

    50

    (c)

    100

    (d)

    200

  41. தனி நிறுமத்தில் உள்ள இயக்குனர்களின் எண்ணிக்கை

    (a)

    15

    (b)

    2

    (c)

    10

    (d)

    25

  42. தணிக்கை குழு கூட்ட வேண்டிய நிறுமத்தின் பங்கு முதல் எவ்வளவு?

    (a)

    ரூ. 1 இலட்சம் (அ) அதற்கு மேல்

    (b)

    ரூ. 10 இலட்சம் (அ) அதற்கு மேல்

    (c)

    ரூ. 1 கோடி (அ) அதற்கு மேல்

    (d)

    ரூ. 10 கோடி (அ) அதற்கு மேல்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment