மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 24

    பகுதி I

    24 x 1 = 24
  1. "மேக்ரே"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம்.கீன்ஸ்

    (c)

    ராக்னர் பிரிக்ஸ்

    (d)

    காரல் மார்க்ஸ்

  2. பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ ஆகும்

    (a)

    முதலாளித்துவ அமைப்பு

    (b)

    உலகமயத்துவ அமைப்பு

    (c)

    கலப்புப் பொருளாதாரம் அமைப்பு

    (d)

    சமத்துவ பொருளாதார அமைப்பு

  3. முதன்மைதுறை என்பது

    (a)

    தொழில்

    (b)

    வியாபாரம்

    (c)

    விவசாயம்

    (d)

    கட்டடம் கட்டுதல்

  4. மொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

    (a)

    வருமானம்

    (b)

    தேய்மானம்

    (c)

    செலவு

    (d)

    முடிவடைந்த பொருட்களின் மதிப்பு

  5. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  6. தொகுத் தேவையின் கூறு________ ஆகும்

    (a)

    தனிநபர் தேவை

    (b)

    அரசுச் செலவு

    (c)

    ஏற்றுமதி மட்டும்

    (d)

    இறக்குமதி மட்டும்

  7. இறுதிநிலை நுகர்வு நாட்டம் கூடினால்

    (a)

    நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்

    (b)

    நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம் பெயரும்

    (c)

    நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம் பெயரும்

    (d)

    சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்

  8. வருவாய் உயர்ந்தால், நுகர்வு

    (a)

    குறையும்

    (b)

    மாறாது

    (c)

    ஏறி இறங்கும்

    (d)

    உயரும்

  9. பணம் என்பது

    (a)

    உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.

    (b)

    நிலையான வாங்கும் சக்தியை கொண்டது

    (c)

    உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.

    (d)

    வளங்களை பங்கிட்டுக்கொள்ள தேவைப்படுகிறது.

  10. தேக்கவீக்கத்தில் பணவீக்க விகிதத்துடன் இணைந்திருப்பது

    (a)

    தேக்கம்

    (b)

    வேலைவாய்ப்பு

    (c)

    உற்பத்தி

    (d)

    விலை

  11. ஒரு வணிக வங்கி செய்யும் சேவை

    (a)

    வைப்புகளை ஏற்றுக் கொள்வது

    (b)

    கடன் வழங்குவது

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல

  12. நெறிமுறை தூண்டல் என்பது

    (a)

    உத்தமநிலைப் படுத்தல்

    (b)

    உச்சநிலைப்படுத்துதல்

    (c)

    தூண்டுதல் நடவடிக்கை

    (d)

    குறைவுநிலைப்படுத்துதல்

  13. கீழ்க்கண்டவற்றுள் வணிகத்தை தீர்மானிக்கும் காரணி எது?

    (a)

    ஒரு பொருளின் மேம்பாட்டு கால கட்டம்

    (b)

    உற்பத்தி காரணிகளின் ஒப்பிட்டு விலை

    (c)

    அரசாங்கம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  14. இறக்குமதி ஏற்றும்மதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி செய்யும்

    (a)

    சுங்கத் தீர்வையைக் குறைத்தல்

    (b)

    ஏற்றுமதி வரியை அதிகரித்தல்

    (c)

    ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்

    (d)

    இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்

  15. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

    வாஷிங்டன் டி.சி

    (b)

    நியூ யார்க்

    (c)

    வியன்னா

    (d)

    ஜெனிவா

  16. சார்க் உச்சி மாநாடு ______ ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறுகிறது.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  17. கீழ்வருவனவற்றுள் தனியார் நிதியின் பண்புகளில் இல்லாதது

    (a)

    வருமானம்-செலவு சமம்

    (b)

    இரகசியம்

    (c)

    வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தல்

    (d)

    விளம்பரப்படுத்துதல்

  18. மொத்தத் செலவு கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது

    (a)

    நிதிப்பற்றாக்குறை

    (b)

    வரவு செலவு திட்ட பற்றாக்குறை

    (c)

    முதன்மை பற்றாக்குறை

    (d)

    வருவாய் பற்றாக்குறை

  19.  உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?

    (a)

    உயிர் வாழ்வன

    (b)

    உயிரற்றவை

    (c)

    பருப்பொருள்

    (d)

    மேற்சொன்ன எதுவுமில்ல

  20. உலக வெப்பமயமாதல் ______ என்றும் குறிப்பிடப்படுகிறது.

    (a)

    சூழலியல் மாறுபாடு

    (b)

    பருவநிலை மாறுபாடு

    (c)

    வளிமண்டல மாறுபாடு

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல

  21. பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எது?

    (a)

    வளர்ந்த நாடுகளை பற்றியது

    (b)

    படிப்படியான மாற்றம்

    (c)

    எண்களின் அடிப்படையில் அமைந்தது.

    (d)

    விரிவான கருத்து

  22. நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர் 

    (a)

    மேம்பாட்டுத் திட்டம் 

    (b)

    மேம்பாடு இல்லாத திட்டம் 

    (c)

    முன்னோக்குத் திட்டம் 

    (d)

    முன்னோக்கமற்ற திட்டம் 

  23. புள்ளியில் எண்விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?

    (a)

    ஹோராஸ் செக்ரிஸ்ட் 

    (b)

    ஆர்.ஏ.ஃபிஷர்  

    (c)

    யா-லன்-சூ 

    (d)

    போடிங்ட்டன் 

  24. Y = 2-0.2X எனில், Y அச்சு வெட்டு 

    (a)

    -2

    (b)

    2

    (c)

    0.2X 

    (d)

    மேற்சொன்ன அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment