மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:35:00 Hrs
Total Marks : 34

    பகுதி I

    34 x 1 = 34
  1. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  2. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரவிந்த கோஷ்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    ஃ பெரோஸ் ஷா மேத்தா

    (d)

    லாலா லஜபதிராய்

  3. கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
    காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு; காரணம் சரி

  4. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    மதன்மோகன் மாளவியா

    (c)

    திலகர்

    (d)

    பி.பி. வாடியா

  5. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

    (a)

    பி.பி.வாடியா

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    லாலா லஜபதிராய்

    (d)

    சி.ஆர்.தாஸ்

  6. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் _______.

    (a)

    கேதா

    (b)

    தண்டி

    (c)

    சம்பரான்

    (d)

    பர்தோலி

  7. ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
    (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
    (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
    (3) செளரி செளரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
    (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

    (a)

    2, 1, 4, 3

    (b)

    1, 3, 2, 4

    (c)

    2, 4, 1, 3

    (d)

    3, 2, 4, 1

  8. கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
    காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

    (a)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  9. கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

    (a)

    புலின் தாஸ் 

    (b)

    சச்சின் சன்யால்

    (c)

    ஜதீந்திரநாத்  தாஸ்

    (d)

    பிரித்தி வதேதார்

  10. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?

    (a)

    எம்.என். ராய்

    (b)

    பகத் சிங்

    (c)

    எஸ்.ஏ. டாங்கே 

    (d)

    ராம் பிரசாத் பிஸ்மில்

  11. லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் _______.

    (a)

    ரஹமத்துல்லா சயானி

    (b)

    சர் சையது அகமது கான்

    (c)

    சையது அமீர் அலி

    (d)

    பஃருதீன் தயாப்ஜி

  12. எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

    (a)

    25 டிசம்பர், 1942

    (b)

    16 ஆகஸ்ட், 1946

    (c)

    21 மார்ச், 1937

    (d)

    22 டிசம்பர், 1939

  13. தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

    (a)

    மார்ச் 23, 1940

    (b)

    ஆகஸ்ட் 8, 1940

    (c)

    அக்டோபர் 17, 1940

    (d)

    ஆகஸ்ட் 9, 1942

  14. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

    (a)

    உஷா மேத்தா

    (b)

    பிரீத்தி வதேதார்

    (c)

    ஆசப் அலி

    (d)

    கேப்டன் லட்சுமி

  15. 1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி ________.

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லின்லித்கோ பிரபு

    (c)

    மௌண்ட்பேட்டன் பிரபு

    (d)

    கிளமண்ட் அட்லி

  16. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
    (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
    (ii) நேருவின் தலைமையிலான இடைக்காலஅரசாங்கம்
    (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    ii,i,iii 

    (b)

    i,ii,iii 

    (c)

    iii,ii,i 

    (d)

    ii,iii,i 

  17. பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

    (a)

    அமேதி

    (b)

    பம்பாய்

    (c)

    நாக்பூர் 

    (d)

    மகவ் 

  18. இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

    (a)

    1951

    (b)

    1952

    (c)

    1976

    (d)

    1978

  19. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்ட ம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?

    (a)

    200

    (b)

    150

    (c)

    100

    (d)

    75

  20. பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?

    (a)

    பகுத்தறிவுவாதம்

    (b)

    ஐயுறவுவாதம்

    (c)

    அரசில்லா நிலை

    (d)

    தனித்துவம் 

  21. கூற்று: துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
    காரணம்: கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு காரணம் சரி.

  22. கூற்று:  ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பொறுத்து  கொள்ளமுடியாதச்  சட்டங்கள்  நீக்கப்பட வேண்டுமெனக்கோரினர்.
    காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

    (c)

    கூற்று  சரி, காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு, காரணம் சரி.

  23. அர்ஜென்டினாவை  விடுதலையடையச்  செய்தவர் _____ .

    (a)

    சான் மார்ட்டின் 

    (b)

    டாம்  பெட்ரோ 

    (c)

    பெர்னார்டோ  ஓ  ஹிக்கின்ஸ் 

    (d)

    மரினா  மோர்லஸ் 

  24. கோட் டெ லா நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______  ஆவார் .

    (a)

    சார்லஸ் ஃபூரியர்

    (b)

    எட்டியன்-கேப்ரியல் மோராலி

    (c)

    செயின்ட் சீமோன்

    (d)

    பகுனின்

  25. கூற்று: J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார் .
    காரணம்: ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார்

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  26. இங்கிலாந்து ______ ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.

    (a)

    1833

    (b)

    1836

    (c)

    1843

    (d)

    1858

  27. பாரிசை நெருங்கிக்கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்த பிரிஞ்சு அரசு ______ பகுதிக்கு நகர்ந்து சென்றது. 

    (a)

    மார்செல்லிஸ் 

    (b)

    போர்டியாக்ஸ் 

    (c)

    லியோன்ஸ் 

    (d)

    வெர்செய்ல்ஸ் 

  28. பன்னாட்டு சங்கம் ________ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

    (a)

    1939

    (b)

    1941

    (c)

    1945

    (d)

    1946

  29. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ______ நாடு உருவாகியிருத்தது.

    (a)

    பிரான்ஸ் 

    (b)

    ஸ்பெயின் 

    (c)

    ஜெர்மனி

    (d)

    ஆஸ்திரியா

  30. கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?

    (a)

    கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப்  பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.

    (b)

    முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்பபடும்.

    (c)

    ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.

    (d)

    ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.

  31. கூற்று: பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.
    காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.

    (a)

    கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி . காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு . காரணம் சரி .

  32. மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் _______.

    (a)

    ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

    (b)

    முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது

    (c)

    ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது

    (d)

    சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது

  33. கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
    காரணம்: மற்றொரு போர் ஏற்படா வண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  34. சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.

    (a)

    நவம்பர் 17, 1991

    (b)

    டிசம்பர் 8, 1991

    (c)

    மே 1, 1991

    (d)

    அக்டோபர் 17, 1991

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment