முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 23

    பகுதி I

    23 x 1 = 23
  1. கோளக்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம் ____

    (a)

    சுழி

    (b)

    5 μCm-2

    (c)

    20 μCm-2

    (d)

    8 μCm-2

  2. டிபாய் (Debye) என்பது அவற்றின் அலகு_____

    (a)

    மின்பாயம்

    (b)

    மின்இருமுனை திருப்புத்திறன்

    (c)

    மின்னழுத்தம்

    (d)

    மின்புலச்செறிவு

  3. மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு தாங்கக்கூடிய பெரும மின்புலம்_________

    (a)

    விடுதிறன்

    (b)

    மின்காப்பு மாறிலி

    (c)

    மின் மாறுபடும் தன்மை

    (d)

    மின்காப்பு வலிமை

  4. வான்-டி-கிராப் மின்னியற்றியின் மின்காப்பு முறிவு காற்றில்_____ 

    (a)

    2 x 108 Vm-1

    (b)

    3 x 108 Vm-1

    (c)

    2 x 108 Vm-1

    (d)

    2 x 104 Vm-1

  5. மின்னோட்டத்தை உருவாக்க தேவையானது என்ன?

    (a)

    மின்னழுத்த வேறுபாடு மூலம் 

    (b)

    மின்னூட்டங்களை நகர்த்தும் ஆற்றல் மூலம் 

    (c)

    மின்புலம் 

    (d)

    மேலே குறிப்பிட்ட அனைத்தும் 

  6. ஏன் ஒரு மின்சுற்றுக்கு மின்கலத்தொகுப்பு [Battery] தேவைப்படுத்துகிறது?

    (a)

    மின்னோட்டத்தை அளவிட 

    (b)

    மின்னழுத்த வேறுபாட்டை உருவாக்க 

    (c)

    மின்னோட்டத்தை எதிர்க்க 

    (d)

    மின்னழுத்தத்தை அளவிட 

  7. மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.

    (a)

    எதிரான 

    (b)

    தலைகீழ் 

    (c)

    சமமான 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  8. பெல்டியர் விளைவு _______ மறுதலை [Converse] ஆகும்.

    (a)

    ஜூல் விளைவு 

    (b)

    ராமன் விளைவு 

    (c)

    தாம்ஸன் விளைவு 

    (d)

    சீபெக் விளைவு 

  9. புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________ 

    (a)

    BE sin I 

    (b)

    BE cos I 

    (c)

    BE tan I 

    (d)

    BE cot I 

  10. வெற்றிடத்தில் ஒப்புகை உட்புகுதிறனின் மதிப்பு _________ 

    (a)

    ஒன்று 

    (b)

    பூஜ்யம் 

    (c)

    ஒன்றுக்கு அதிகம் 

    (d)

    மாறிலி 

  11. தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் முன்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.

    (a)

    10-3

    (b)

    10-6

    (c)

    சில ஆம்பியர் 

    (d)

    10-8

  12. வோல்ட் மீட்டரின் மின்தடை ______ ஆகும்.

    (a)

    R= R+ Rh

    (b)

    R= R+ Rh

    (c)

    R= R+ Rg

    (d)

    R= R+ Rv

  13. ஒரு அயனிகளின் கற்றை 2 x 105 மீவி-1 என்ற திசைவேகத்தில் சீரான காந்தப்புலத்தில் 10 x 10-2 tesla செல்கிறது. அயனியின் மின்னூட்ட எண் 5 x 107 C/Kg எனில் அந்த வட்டப்பாதையில் ஆரம் __________.

    (a)

    0.10 மீ 

    (b)

    0.16 மீ 

    (c)

    0.20 மீ 

    (d)

    0.25 மீ 

  14. கம்பிச்சுருளுக்குள் காந்தம் இயங்கும் போது சுருளின் மின்னோட்டம் ______

    (a)

    அதிகரிக்கும் 

    (b)

    குறையும் 

    (c)

    மாறாது 

    (d)

    சுழி 

  15. மாறுதிசை மின்னோட்டம் பயன்படாதது ______

    (a)

    வெப்பமூட்டி 

    (b)

    பல்பு 

    (c)

    காந்தமாக்கல் மற்றும் மின்முலாம் பூசுதல்

    (d)

    அனைத்தும் 

  16. ஒரு LCR சுற்றில் C = 10μF மற்றும் ω = 1000 S-1 எனில் மின்னோட்டம் பெருமமாக உள்ள போது மின்தூண்டல் எண்ணின் L பெரும மதிப்பு _____ 

    (a)

    1 mH 

    (b)

    10 mH 

    (c)

    கணக்கிடமுடியாது 

    (d)

    100 mH 

  17. L = 80 μH, C = 2000 pF மற்றும் R = 50Ω f உள்ள தொடர் LCR சுற்றின் தரக்காரணி _____ 

    (a)

    40 

    (b)

    400

    (c)

    4

    (d)

    0.4

  18. ஒரு மாறுதிசை மின்னோட்ட சுற்றில் எப்போது ஒத்ததிர்வு ஏற்படும்?

    (a)

    Z = R 

    (b)

    Z = ωL - (1 / ωC)

    (c)

    L = R 

    (d)

    ஏதுமில்லை 

  19. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி _____

    (a)

    \(\oint _{ }^{ }{ \vec {E } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

    (b)

    \(\oint _{ }^{ }{ \vec { E } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (c)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }Ic\)

    (d)

    \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } ={ \mu }_{ o }(Ic+Id)\)

  20. கடத்து மின்னோட்டம் மற்றும் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் சமம் ஆகும். மின்னியக்கு விசை மூலம்_____

    (a)

    ac மட்டும் 

    (b)

    dc மட்டும்

    (c)

    ac அல்லது dc

    (d)

    ac - யும் அல்ல dc-யும் அல்ல

  21. மாறும் மின்புல மற்றும் காந்தப்புல வெக்டர்கள் மின்காந்த அலையின்_____ 

    (a)

    செங்குத்தான தளத்தில் π கட்ட வேறுபாட்டில் உருவாகும்

    (b)

    செங்குத்தான தளத்தில் π / 2 கட்ட வேறுபாட்டில் உருவாகும்

    (c)

    அனைத்து தளத்திலும் ஒரே கட்டத்தில் உருவாகும்

    (d)

    செங்குத்தான தளத்தில் ஒத்த உருவாகும்

  22. மனித உடலில் கதிர்வீசும் தன்மை அடிப்படையில் எந்த கூற்று சரி?

    (a)

    வெளிவரும் கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்

    (b)

    பகலில் மட்டுமே கதிர்வீச்சு வெளிவரும்

    (c)

    கோடையில் கதிர்வீசை வெளியிடும் பின்னர் குளிர்காலத்தில் கதிவீச்சை உட்கவரும்

    (d)

    கதிர்வீச்சு புறஊதாக்கதிர்வீச்சாக அமைவதால் அவை கண்களுக்கு புலப்படாது

  23. x - கதிரின் அலைநீளம் __________ 

    (a)

    1 மீ

    (b)

    1 செ.மீ

    (c)

    1 மைக்ரான்

    (d)

    10-10 m

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Important 1 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment