பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    பகுதி I

    30 x 1 = 30
  1. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், \(\vec { E }\) = 10 x \( \hat { i } \) நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA  என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA இன் மதிப்பு _______.

    (a)

    10 V

    (b)

    – 20 V

    (c)

    +20 V

    (d)

    -10 V

  2. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

    (a)

    மின் தேக்குத்திறன்

    (b)

    மின்துகள்

    (c)

    மின்னழுத்த வேறுபாடு

    (d)

    ஆற்றல் அடர்த்தி

  3. q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை ______.

    (a)

    முன்பை விடக் குறைவாக இருக்கும் 

    (b)

    அதேயளவு இருக்கும் 

    (c)

    முன்பை விட அதிகமாக இருக்கும் 

    (d)

    சுழி 

  4. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் -பச்சை -ஊதா -தங்கம்

    (b)

    மஞ்சள் -ஊதா -ஆரஞ்சு -வெள்ளி

    (c)

    ஊதா -மஞ்சள் -ஆரஞ்சு -வெள்ளி

    (d)

    பச்சை -ஆரஞ்சு -ஊதா -தங்கம்

  5. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.

    (a)

    14 A

    (b)

    8 A

    (c)

    10 A

    (d)

    12 A

  6. ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு ____ .

    (a)

    நேர்க்கோடு

    (b)

    பரவளையம்

    (c)

    வட்டம்

    (d)

    நீள்வட்டம்

  7. செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

    (a)

    \(\sqrt { \frac { 2{ q }^{ 3 }BV }{ m } } \)

    (b)

    \(\sqrt { \frac { { q }^{ 3 }{ B }^{ 2 }V }{ 2m } } \)

    (c)

    \(\sqrt { \frac { {2 q }^{ 3 }{ B }^{ 2 }V }{ m } } \)

    (d)

    \(\sqrt { \frac { {2q }^{ 3 }{ B }V }{ m ^ 2} } \)

  8. சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

    (a)

    வட்ட வடிவம்

    (b)

    அரைவட்ட வடிவம்

    (c)

    சதுர வடிவம்

    (d)

    இவை அனைத்தும்

  9. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

    (a)

    30˚

    (b)

    45˚

    (c)

    60˚

    (d)

    90˚

  10. q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

    (a)

    \(\frac {q }{m }\)

    (b)

    \(\frac {2q }{m }\)

    (c)

    \(\frac {q }{2m }\)

    (d)

    \(\frac {q }{4m }\)

  11. t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2 − 50t + 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது______.

    (a)

    −190 V

    (b)

    −10 V

    (c)

    10 V

    (d)

    190 V

  12. ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது_____ .

    (a)

    2 A

    (b)

    18 A

    (c)

    12 A

    (d)

    1 A

  13. ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு______ 

    (a)

    600 V

    (b)

    4000 V

    (c)

    400 V

    (d)

    1 V

  14. \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம்________.

    (a)

    [L T−1]

    (b)

    [L2 T-2]

    (c)

    [L−1 T]

    (d)

    [L-2 T2]

  15. அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்டத் துகளொன்று அதன் சராசரிப்புள்ளியைப் பொறுத்து 300 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில், அலையியற்றியால் உருவாக்கப்பட்ட மின்காந்த அலையின் அலைநீளத்தின் மதிப்பு_____.

    (a)

    1 m

    (b)

    10 m

    (c)

    100 m

    (d)

    1000 m

  16. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

    (a)

    α - கதிர்கள்

    (b)

    β-கதிர்கள்

    (c)

    \(\gamma\)-கதிர்கள்

    (d)

    இவை அனைத்தும்

  17. மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்_______ .

    (a)

    ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

    (b)

    ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

    (c)

    ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து இல்லை

    (d)

    ஒரே கட்டத்தில் இல்லை மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

  18. 10 cm நீளமுடைய தண்டு ஒன்று, 10 cm குவியத்தூரம் கொண்ட குழி ஆடியின் முதன்மை அச்சில் வைக்கப்பட்டுள்ளாது. தண்டின் ஒரு முனை குழிஆடியின் முனையிலிருந்து 20 cm தொலைவில் இருந்தால், கிடைக்கும் பிம்பத்தின் நீளம் என்ன? 

    (a)

    2.5 cm

    (b)

    5 cm

    (c)

    10 cm

    (d)

    15 cm

  19. தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm. மேலும், அதன் ஒளிவிலகல்எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்_____.

    (a)

    5 cm

    (b)

    10 cm

    (c)

    15 cm

    (d)

    20 cm

  20. யங் இரட்டைப் பிளவு ஆய்வில், பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு இருமடங்காக்கப்படுகிறது. திரையில் தோன்றும் பட்டை அகலம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், பிளவுகளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?

    (a)

    2D

    (b)

    \(\frac { D }{ 2 } \)

    (c)

    \(\sqrt { 2 } D\)

    (d)

    \(\frac { D }{ \sqrt { 2 } } \)

  21. நிகோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி________ .

    (a)

    பகுதி தளவிளைவு அடையும்

    (b)

    தளவிளைவு அடையாது

    (c)

    முழுவதும் தளவிளைவு அடையும்

    (d)

    நீள்வட்டமாகத் தளவிளைவு அடையும்

  22. λ  அலைநீளமுள்ள கதிர்வீச்சினால்  ஒரு உலோகப்  பரப்பு  ஒளியூட்டபடும் போது, அதன்  நிறுத்து  மின்னழுத்தம்  v   ஆகும். 2λ  அலைநீளமுள்ள  ஒளியினால்  அதே  பரப்பு  ஒளியூட்டப்பட்டால், நிறுத்த  மின்னழுத்தம்  \(\frac {V}{4}\) ஆகும் . எனில்  அந்த  உலோகப்பரப்பிற்கான  பயன்தொடக்க  அலைநீளம் ________.

    (a)

    (b)

    (c)

    \(\frac{5}{2}\) λ

    (d)

    3 λ

  23. சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm  எனவும், அதன்  சராசரி  திறன்  3.8 × 1026  W  எனவும்  கொள்க. சூரிய  ஒளியிலிருந்து ஒரு வினாடி நேரத்தில் மனிதனின் கண்கள் பெறக்கூடிய ∴போட்டான்களின் தோராயமான  எண்ணிக்கையானது ____

    (a)

    1045

    (b)

    1042

    (c)

    1054

    (d)

    1051

  24. ஹைட்ரஜன் அணுவில் முதல் மூன்று சுற்றுப் பாதைகளின் ஆரங்களின் விகிதம்________.

    (a)

    1:2:3

    (b)

    2:4:6

    (c)

    1:4:9

    (d)

    1:3:5

  25. \(_{ 3 }^{ 7 }{ Li }\) அணுக்கருவின் நிறையானது அதிலுள்ள நியூக்ளியானின் மொத்த நிறையை விட 0.042 u குறைவாக உள்ளது எனில், \(_{ 3 }^{ 7 }{ Li }\) அணுக்கருவின் ஒரு நியூக்கிளியானுக்கான சராசரி பிணைப்பாற்றல்______.

    (a)

    46 MeV

    (b)

    5.6 MeV

    (c)

    3.9MeV

    (d)

    23 MeV

  26. சார்பளிக்கப் படாத p-n சந்தியில், p-பகுதியில் உள்ள பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகள் (அதாவது, துளைகள்) n-பகுதிக்கு விரவல் அடைவதற்கு காரணம் _____ .

    (a)

    p-n சந்தியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு

    (b)

    n-பகுதியில் உள்ளதை விட, p-பகுதியில் உள்ள அதிக துளை செறிவு

    (c)

    n-பகுதியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் கவர்ச்சி

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  27. ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியீடானது, _____ 

    (a)

    0100

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    0011

  28. ‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின்  பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை______.

    (a)

    மருத்துவம்

    (b)

    ஜவுளி

    (c)

    விளையாட்டு

    (d)

    வாகனத் தொழிற்சாலை

  29. ஈர்ப்பு அலைகளை  கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.

    (a)

    கான்ராட்  ரோன்ட்ஜென் 

    (b)

    மேரி கியூரி

    (c)

    ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் 

    (d)

    எட்வார்டு பர்செல்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 -12th Standard Physics Practise 1 Mark Bookback Questions (New Syllabus) 2020

Write your Comment