பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    பகுதி I

    20 x 2 = 40
  1. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க கடனீந்தோர் 1,70,000
    கொள்முதல் திருப்பம் 20,000
    கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000
    இறுதிக் கடனீந்தோர் 1,90,000
  3. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  4. இலாப நோக்கற்ற அமைப்பின் வருவாயின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்

  5. அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.

  6. இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

  7. ராம் மற்றும் ஷியாம் இருவரும் கூட்டாளிகள். ராம் ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.18,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 10%. 2018, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்.

  8. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?

  9. ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  10. விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  11. ஆனந்த் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள், இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் சரண் என்பவரை 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஆனந்திடமிருந்து பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  12. அம்பிகா, தரணி மற்றும் பத்மா மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அம்மூவரும் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரம்யா என்பவரை 25% இலாபம் தருவதாக கூட்டாண்மையில் அனுமதித்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.

  13. ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  14. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  15. ஜாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.5, ஒதுக்கீட்டின் போது ரூ.3, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 செலுத்தும் வகையில் வெளியிட்டது. 9,000 பங்குகளை வாங்க பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இயக்குனர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்ப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  16. பங்கு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  17. சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
      நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
    மொத்தம் 1,75,000 3,50,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
      நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
    மொத்தம் 1,75,000 3,50,000
  18. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.

  19. புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?

  20. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment