பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 56

    பகுதி I

    28 x 2 = 56
  1. பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
    இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது 60,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 5,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க கடனீந்தோர் 1,70,000
    கொள்முதல் திருப்பம் 20,000
    கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000
    இறுதிக் கடனீந்தோர் 1,90,000
  3. பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 
    பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
    சந்தா        
    2017-2018 5,000      
    2018-2019 48,000      
    2019-2020 3,000 56,000    
             

    இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.

  4. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  5. மதிப்பூதியம் என்றால் என்ன?

  6. அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.

  7. இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

  8. வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?

  9. உயர் இலாபம் என்றால் என்ன?

  10. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  11. ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  12. அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  13. விமலா மற்றும் கமலா இருவரும் கூட்டாளிகள். 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். வினிதா என்பவர் விமலாவிடம் 1/14 பங்கும் மற்றும் கமலாவிடமிருந்து 1/14 பங்கும் பெற்று கூட்டாண்மையில் சேருகிறார். அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  14. அபர்ணா மற்றும் ப்ரியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். பிருந்தா 1/5 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேருகிறார். அவர் தமது நற்பெயர் பங்காக ரூ.10,000 கொண்டுவருகிறார். கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் முறையில் கணக்கிடப்படுகிறது. கூட்டாளிகள் தமது நற்பெயர் தொகை முழுவதையும் எடுத்துக்கொண்டனர். இதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  15. கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்

  16. ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?

  17. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2

    1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  18. ஜெயம் டயர்ஸ் நிறுமம் 15,000 சாதாரணப்பங்குகளை ரூ. 10 வீதம் பின்வருமாறு செலுத்தும்படி வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3 ஒதுக்கீட்டின் மீது ரூ.5 முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. அனைத்து தொகையும் பெறப்பட்டது. ஆனால் 100 பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரர் அழைப்பு பணத்தை செலுத்தத் தவறினார். அழைப்பு நிலுவைக் கணக்கைப் பயன்படுத்தி அழைப்பிற்கான குறிப்பேடுப் பதிவுகளைத் தரவும்.

  19. பத்திர முனைமக் கணக்கு பற்றி சிறுகுறிப்பு வரையவும்

  20. பொது வெளியீடு என்றால் என்ன?

  21. பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      அ) பங்கு முதல் 2,00,000 2,50,000
      ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000
    2. நீண்ட காலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000
    மொத்தம் 3,00,000 4,20,000
    II. சொத்துகள்    
    1. நீண்ட காலச் சொத்துகள்    
      அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000
      ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 75,000 1,50,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000
    மொத்தம் 3,00,000 4,20,000
  22. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  23. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ
    மொத்த நடப்புப் பொறுப்புகள் 1,00,000
    மொத்த நடப்புச் சொத்துகள் 2,50,000
    சரக்கிருப்பு 50,000
    முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 15,000
  24. பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.

    பயோனியர் நிறுமத்தின் 31.3.2019 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல்  
         (i) நேர்மைப் பங்குமுதல் 1,00,000
          (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 75,000
       (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 2,00,000
    மொத்தம் 4,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 2,75,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 75,000
    மொத்தம் 4,00,000
  25. புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?

  26. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  27. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

  28. டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment