மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    25 x 2 = 50
  1. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  2. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  3. முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?

  4. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  5. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.

  6. சென்னை டென்னிஸ் மன்றத்தின் விளையாட்டுப் போட்டிநிதி ஏப்ரல் 1, 2018 அன்று ரூ.24,000 வரவிருப்பு காட்டியது. அந்த ஆண்டில் அந்நிதியிலிருந்து பெற்ற வரவுகள் ரூ. 26,000. அந்த ஆண்டில் மேற்கொண்ட விளையாட்டுப்போட்டிச் செலவுகள் 33,000. இவ்விவரங்கள் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

  7. வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.

  8. வெண்ணிலா மற்றும் ஈஸ்வரி இருவரும் கூட்டாளிகள். வெண்ணிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4%. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்.

  9. மன்னன் மற்றும் ரமேஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் முறையே மன்னன் ரூ.1,50,000 மற்றும் ரமேஷ் ரூ.1,00,000 ஆகும். அவர்களின் நடப்புக் கணக்குகள் ரூ.25,000 மற்றும் ரூ.20,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிட்டு, அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  10. கெவின் மற்றும் பிரான்சிஸ் இருவரும் கூட்டாளிகள். கெவின் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.

  11. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் = ரூ.60,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000

  12. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?

  13. ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  14. பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  15. அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  16. தியாக விகிதம் என்றால் என்ன?

  17. கார்த்திக் மற்றும் கண்ணன் இருவரும் இலாபத்தை சமமாக பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். அவர்கள் கைலாஷ் என்பவரை 1/4 இலாபப் பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கைலாஷ் தனது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 7:3 என்ற விகிதத்தில் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  18. அபர்ணா மற்றும் ப்ரியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். பிருந்தா 1/5 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேருகிறார். அவர் தமது நற்பெயர் பங்காக ரூ.10,000 கொண்டுவருகிறார். கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் முறையில் கணக்கிடப்படுகிறது. கூட்டாளிகள் தமது நற்பெயர் தொகை முழுவதையும் எடுத்துக்கொண்டனர். இதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  19. ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3: 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்.

  20. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  21. அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்ததக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
    ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்டப் பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
    குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  22. பின்வரும் விவரங்களிலிருந்து மேரி வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,00,000 5,00,000
    இயக்கச் செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி (வரிக்கு முன் இலாபத்தில் %) 20 50
  23. நிதிநிலை அறிக்கைகள் யாவை?

  24. கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
    (அ) பங்குமுதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
      6% முன்னுரிமைப் பங்குமுதல் 1,00,000
    (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  
      பொதுக் காப்பு 1,25,000
      மிகுதி 75,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) 2,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை 1,50,000
      வரி ஒதுக்கு 50,000
    மொத்தம் 9,00,000
  25. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment