முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 46

    பகுதி I

    23 x 2 = 46
  1. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  3. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  4. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  5. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  6. ஹார்டி - வீன்பெர்க் சமன்பாடு (p2+2pq+q2=1) இனக்கூட்டத்தில் சமநிலை இருப்பதை எவ்வாறு விளக்குகிறது? மரபியல் சமநிலையைப் பாதிக்கும் ஏதேனும் நான்கு காரணிகளைப் பட்டியலிடுக 

  7. கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்.

    நோய்கள் நோய்க்காரணி நோய்த்தொற்று இடம் அடைகாக்கும் காலம் 
    புட்டாளம்மை      
    சின்னம்மை      
    டெங்கு காய்ச்சல்      
  8. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  9. நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உயிரிய செயல்திறனுள்ள மூலக்கூறுகள் இரண்டினையும், அவற்றின் பயன்களையும் கூறு.

  10. மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?

  11. வரையறு – சூழலியல் ஒதுக்கிடம்/சிறுவாழிடம்

  12. "அமேசான்காடுகள் பூமிக்கோளின் நுரையீரலாக கருதப்படுகிறது”-இந்த சொற்றொடரை நியாயப்படுத்து.

  13. உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி. அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

  14. ஒட்டுதல் மற்றும் பதியமிடல் வேறுபடுத்துக.

  15. பிற்கலப்பு என்றால் என்ன?

  16. PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய் து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
    i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
    ii) சரியான மரபணு வகைய கலப்பிணை வரைக .
    iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?

  17. உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியுக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?

  18. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  19. கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை ஏதேனும் ஒரு காரணம் தருக.

  20. ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.

  21. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

  22. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட்செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன?

  23. ‘கசப்புகளின் அரசன் ’ என அழைக்கப்படுவது எது? அதன் மருத்துவ முக்கியத்துவத்தை குறிப்பிடு.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment