பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 48

    பகுதி I

    24 x 2 = 48
  1. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  2. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  3. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  4. பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?

  5. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

  6. உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்?

  7. பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.

  8. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  9. உயிரிய ஆக்சிஜன் தேவை(BOD) என்றால் என்ன?

  10. எலைசா தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி – எதிர்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல் கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?

  11. அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?

  12. உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை?

  13. பனிப்புகை என்றால் என்ன? அது நமக்கு எந்த வகையில் தீங்களிக்கின்றது?

  14. வீடுகள், பள்ளி அல்லது சுற்றுலாத் தலங்களில் உன்னால் உருவாக்கப்படும் கழிவுகளைப் பட்டியலிடுக. அவற்றை மிக எளிதாகக் குறைக்க முடியுமா? எந்த வகைக் கழிவுகளை குறைப்பது மிகக் கடினம் அல்லது இயலாது?

  15. பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பிரையோஃபில்ல இலை புதிய தாவரங்களை தோற்றுவிக்கிறது எவ்வாறு?

  16. பிற்கலப்பு என்றால் என்ன?

  17. ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,
    i) நிகழ்வின் பெயர் என்ன?
    ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
    iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.

  18. தற்காலப் பயிற்சியில் உயிரி தொழில்நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?

  19. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  20. அல்பிடோ விளைவு என்றால் என்ன? அதன் விளைவுகளை எழுதவும்.

  21. சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்? 

  22. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

  23. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

  24. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment