பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 68

    பகுதி I

    34 x 2 = 68
  1. கடல் சாமந்தியின் பாலிலி இனப்பெருக்க முறையை விவரி?

  2. நெபன்கென் எங்குள்ளது? அதன் முக்கியத்துவம் கூறுக.

  3. தாமிரம் வெளிவிடும் உலகருப்பைச் சாதனங்களுக்கு எடுத்துக்காட்டு தருக.

  4. வைட்டமின் E-ன் சிறப்பு என்ன?

  5. XX-XO வகை பால்நிர்ணய உயிரிகள் யாவை?

  6. ஹீமோபிலியா இரத்தக்கசிவு நோய் என்று ஏன் அழைக்கப்படுகிறது?

  7. நியூக்ளியோசைடு எவ்வாறு உருவாகிறது?

  8. HGT (அ) கிடைமட்ட மரபணு மாற்றம் என்றால் என்ன?

  9. ஒரே உயிரினம் இரண்டு தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்களின் பண்புகளையும் ஒருங்கே பெற்றிருக்க முடியுமா? விவாதி.

  10. நவீன உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் யாவை?

  11. பிளாஸ்மோடியத்தின் உகைனெட் எந்த நிலையில் காணப்படுகிறது?

  12. மாற்றப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படுவதில் முதன்மை திசுபொருத்த எதிர்பொருள் தூண்டிகளின் பங்கு என்ன?

  13. முதல் உயிர் எதிர்ப்பொருள் கண்டறிந்தவர் யார்? உயிர் எதிர்ப்பொருள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?

  14. உயிரிய தொழில்நுட்பம் வரையறு.

  15. பாலிமரேஸ் சங்கிலி வினையின் படிநிலைகளின் பெயர்களைத் தருக.

  16. ஒப்பீட்டுப் பெருக்கம் என்றால் என்ன?

  17. ஆல்பா பல்வகைத் தன்மை - வரையறு.

  18. காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

  19. தாவர செல்லின் எந்த சிறப்புப் பண்பு தோட்டக்கலை, வனவியல், தாவரப்பெருக்கு தொழிற்சாலைகளில் பயப்படுகிறது?

  20. தாவரங்களுக்கும்,விலங்கினங்களுக்கும் இடையே ஒரு கூட்டுப்பரிணாமம் உள்ளது (Coevolution) விளக்குக?

  21. தொடர்ச்சியான வேறுபாடு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக

  22. சடுதி மாற்றம் வரையறு

  23. தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?

  24. BAC தாங்கு கடத்தியை YAC தாங்குக் கடத்தியிடம் இருந்து வேறுபடுத்துக.

  25. ஆல்காவிலிருந்து உயிரிய ஹைட்ரஜன் எவ்வாறு பெறப்படுகிறது?

  26. அகார் என்றால் என்ன?

  27. உயிரிமம் என்றால் என்ன?

  28. யுட்ரிகுலேரியா (பை தாவரம்) டையோனியா வீனஸ் பூச்சி உண்ணும் தாவரம், சாரசீனியா போன்ற பூச்சிகள் மற்றும் விலங்குகளைச் சாப்பிடுவதன் மூலம் நைட்ரஜனை பெறுகின்றன. இவற்றில் எந்த வகையான இடைச்செயல்கள் காணப்படுகின்றன?

  29. நிகர முதல்நிலை உற்பத்தித்திறனுக்கும், நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறனுக்கும் உள்ள வேறுபாடு யாது?

  30. ஆற்றல் பிரமிட்கள் எப்பொழுதும் நேரானது ஏன்?

  31. வேளாண் காடுகள் என்றால் என்ன?

  32. இரகங்களுக்கிடையே மற்றும் சிற்றினங்களுக்கிடையே கலபுறுத்தம்

  33. தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை? 

  34. எண்ணெய்களின் 2 வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment