மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 46

    பகுதி I

    23 x 2 = 46
  1. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?

  3. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக
    அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
    ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
    இ) மல்டிலோட்  375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும்.

  4. பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?

  5. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.

  6. திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.

  7. பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.

  8. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  9. உயிரிய ஆக்சிஜன் தேவை(BOD) என்றால் என்ன?

  10. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?

  11. அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?

  12. செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.

  13. உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி. அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

  14. உயர் தாவரங்களில் தழைவழி இனப்பெருக்கத்திற்கு கையாளப்படும் பாரம்பரிய முறைகளை விவரி.

  15. பிற்கலப்பு என்றால் என்ன?

  16. தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?

  17. நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?

  18. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  19. ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.

  20. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

  21. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

  22. வேதிச் சாயத்தை போடும் ஒருவருக்கு எரிச்சல் வருகிறது. நீங்கள் அதற்கு மாறாக எதை சிபாரிசு செய்வீர்கள்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment