பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 42

    பகுதி I

    21 x 2 = 42
  1. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  2. போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக. 

  3. ஹாலஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.

  4. Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?

  5. பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
    (i) Mg[Cr(NH3)(Cl)5]
    (ii) Cr(NH3)5Cl]3[CoF6]2
    (iii) [Cr(NH3)3Cl3]

  6. [Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

  7. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  8. நைட் ரிக் ஆக்ஸைடானது, ஆக்சிஜனேற்றம் அடைந்து NOஉருவாகும் வினையினை க் கருதுவோம். 2NO(g)+O2 (g) \(\rightarrow \)2NO2 (g)
    (அ) NO, O2, மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினை வேகத்தினைக் குறிப்பிடுக.
    (ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2mol L-1S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில், [NO2] ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்

  9. \(\rightarrow \)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.

  10. அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.

  11. ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் 0.10M செறிவுடை ய கரைசல் 25oC ல் 1.20% வரை பிரிகையடைகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பை காண்க .

  12. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.

  13. 0.1M HCl மற்றும் 0.1 M KCl இந்த இரண்டு கரைசல்ளில் எது அதிக \(\overset{0}{\Lambda}_{m}\) கடத்துத்திறனை கொண்டது? ஏன்?

  14. இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப்பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம் ஏன்?

  15. கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள், கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களைவிட  அதிக நிலைப்புத் தன்மை வாய்ந்தவை . ஏன்?

  16. ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  17. C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது.மேலும் (C) ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E)ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.

  18. ஃபீனைல் கீட்டோன்களைத் தயாரித்தல்?

  19. பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
    i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
    ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
    iii) 
    iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
    v) 

    vi) 
    vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)

  20. புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.

  21. தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வேதியியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment