மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 80

    பகுதி I

    40 x 2 = 80
  1. Pure செயற்கூறு என்றால் என்ன?

  2. Impure செயற்கூறு ஒரு எடுத்துக்காட்டு தருக.

  3. விகிதமுறு எண்ணின் ADT எடுத்துக்காட்டை எழுதுக.

  4. P1: = person ( ) என்ற கூற்றில் P1 மற்றும் Person எதனை குறிக்கின்றது?

  5. ஒரு பொருளின் இயக்கம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  6. வரையெல்லையின் பெயர்களை பட்டியலிடுக

  7. நிரல் நெறிமுறை தீர்வு என்றால் என்ன?

  8. Big Omega - குறிப்பு வரைக

  9. பைத்தான் IDLE திரையில் ஊடாடும் முறைமையில் இருப்பதை எவ்வாறு அறிவாய்?

  10. கீழ்க்காணும் வெளியீட்டை பெற பைத்தான் நிரலை எழுதுக.

  11. கோடிட்ட இடத்தை நிரப்புக.
    (i) பைத்தான் மொழிப்பெயர்ப்பி ________ குறிமுறையின் பகுதியாக கருதாது.
    (ii) மதிப்புகள் மற்றும் மாறிகள் செயற்குறியுடன் பயன்படுத்தும் போது ________ என்று அழைக்கப்படுகிறது.
    (iii) 100/30=_________.

  12. எண் நிலைஉருக்களின் வகைகள் யாவை?

  13. மாற்று அல்லது கிளைப்பிரிப்பு என்றால் என்ன?

  14. prlnt ( ) செயற்கூறில் பயன்படுத்தப்படும் அளபுருக்களை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  15. கீழ்காணும் நிரலின் வெளியீடு 2 4 6 8 என்று இருப்பின் ?1?, ?2? என்ற இடத்தில் வரும் கூற்றினை எழுதுக.
    for ?1? in range (2,?2?, 2):
    print (i, end =' ')

  16. for மற்றும் while மடக்கினும் continue கூற்றின் செயல்பாட்டின் தொடரியலை எழுதுக.

  17. பைத்தானில், பின்னலான தொகுதியை எவ்வாறு உள்தள்ளல் வேண்டும்?

  18. மாறும் நீள செயலுருபின் பொதுவடிவத்தை எழுதுக.

  19. ஒரே பெயரைக் கொண்ட குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடனுன் விளக்குக.

  20. தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  21. பின்வரும் சரவடிவமைப்பு செயற்குறிகளுக்கான பயன் யாது?
    (i) %c
    (ii) %d or %i
    (iii) %s

  22. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    (i) print (len ("corporation"))
    (ii) print ("School" .capitalize 0)
    (iii) print ("welcome". centre(15,'*'))

  23. பைத்தான் List யை உருவாக்குவதற்கான தொடரியல் மற்றும் எ.கா.தருக.

  24. for மடக்கை பயன்படுத்தி list-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒவ்வொன்றாக அணுகுவதற்கான தொடரியலை எழுதுக.

  25. Listலிருந்து உறுப்புகளை நீக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  26. POP ( ),Clear ( ) மற்றும் remove ( ) செயற்கூறுகளுக்கான தொடரியலை எழுதுக.

  27. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    List = [36,12,12]
    (i) print (list.count (12))
    (ii) print (list.index (12))
    (iii) print (list.reverse (c))

  28. Tuples ஐ உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  29. முழு Tuples-ஐ எவ்வாறு நீக்குவாய். எ.கா.தருக.

  30. பகா எண்களைக் கொண்ட ஒரு Set,இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].

  31. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.

  32. DBMS-ன் கூறுகளை எழுதுக.

  33. DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.

  34. RDBMS குறிப்பு வரைக

  35. பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி பற்றி எழுதுக

  36. அட்டவணையில் NULL மதிப்புடைய புலத்தை எவ்வாறு தேடலாம்?

  37. CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?

  38. தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?

  39. மதிப்பீட்டு சார்புகள் யாவை?

  40. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020

Write your Comment