பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 34

    பகுதி I

    17 x 2 = 34
  1. கூலூம் விதியின் வெக்டர் வடிவத்தை எழுதி அதிலுள்ள ஒவ்வொரு குறியீடும் எதைச் சுட்டுகின்றது என்பதைக் கூறுக.

  2. ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?

  3. ஒரு மின்சுற்றில் திறனுக்கான சமன்பாடு P = VI என்பதை வருவி.

  4. பயட் –சாவர்ட் விதியைக் கூறு

  5. சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது? அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?

  6. ஏற்று மற்றும் இறக்கு மின்மாற்றிகள் என்றால் என்ன?

  7. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  8. ஒளியியல் பாதை என்றால் என்ன? d தடிமனும் n ஒளிவிலகலும் கொண்ட ஊடகத்தின் ஒளியியல் பாதைக்கான சமன்பாட்டைப் பெறுக. 

  9. ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் லென்ஸ்களுக்கான தொகுபயன் குவியத்தூரத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.

  10. ராலே நிபந்தனை என்றால் என்ன?

  11. நிறமாலைமானியின் பயன்கள் யாவை?

  12. மட்டைப்பந்தின் அலைப் பண்பினை ஏன் நம்மால் காண முடிவதில்லை?

  13. ஐசோபார்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.

  14. நியூட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவை எந்த துகள்களினால் ஆனவை?

  15. ஒரு குறைகடத்தி பொருளில் எலக்ட்ரான்துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  16. பரப்புகை இழப்புகளுக்குப் பொறுப்பான காரணிகளைக் கூறுக.

  17. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Practise 2 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment