All Chapter 1 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 40
    Answer All The Following Question:
    40 x 1 = 40
  1. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது______.

    (a)

    தொடக்க முதல் கண்டறிய

    (b)

    இறுதி முதல் கண்டறிய

    (c)

    அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

    (d)

    அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

  2. தொடக்க முதல் ரூ. 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ரூ. 6,000, அவ்வாண்டின் இலாபம் ரூ. 2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.

    (a)

    ரூ. 9,000

    (b)

    ரூ. 11,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 3,000

  3. எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?

    (a)

    ஒற்றைப்பதிவு முறை 

    (b)

    இரட்டைப்பதிவு முறை 

    (c)

    முழுமைபெறா 

    (d)

    முழுமைபெற்ற 

  4. முழுமை பெறாத பதிவேடுகளைப் பயன்படுத்தும் நிறுவனம் ________ .

    (a)

    சிறு வியாபாரிகள் 

    (b)

    நிறுமங்கள் 

    (c)

    அரசு 

    (d)

    கூட்டுறவுச் சங்கங்கள் 

  5. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது______.

    (a)

    அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

    (b)

    அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

    (c)

    அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

    (d)

    அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

  6. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ 50,000

    (b)

    ரூ 50,200

    (c)

    ரூ 49,000

    (d)

    ரூ 49,800

  7. நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவது எந்த கணக்கின் கீழ் வரும்.

    (a)

    முதலின வரவு 

    (b)

    முதலினச் செலவு 

    (c)

    வருவாயின வரவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  8. இலாபநட்டக் கணக்கு தயாரிப்பு போன்றது எது?

    (a)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு 

    (b)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 

    (c)

    வியாபாரக் கணக்கு 

    (d)

    இருப்புநிலைக் குறிப்பு 

  9. கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது______.

    (a)

    சமமான விகிதத்தில்

    (b)

    முதல் விகிதத்தில்

    (c)

    இரண்டும் (அ) மற்றும் (ஆ)

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  10. பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

    (a)

    எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (b)

    முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

    (c)

    கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (d)

    இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

  11. ஒவ்வொரு கூட்டாளிக்கும் எத்தனை கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும்?

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  12. _______ முறையில், ஒவ்வொரு கூட்டாளிக்கும் முதல் கணக்கு மட்டும் பராமரிக்கப்படுகிறது.

    (a)

    மாறுபடும் முதல்

    (b)

    நிலை முதல்

    (c)

    சராசரி முதல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  13. கீழ் வருவனவற்றில் எது சரியானது?

    (a)

    உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    உயர் இலாபம் = சராசரி இலாபம் – சாதாரண இலாபம்

    (d)

    உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்

  14. சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.

    (a)

    சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

    (d)

    கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

  15. ஒரு தொழிலுக்கு நன்மையை தரக்கூடிய அத்தொழிலின் புகழ் அல்லது நன்மதிப்பு ________ ஆகும்

    (a)

    நற்பெயர்

    (b)

    காப்புரிமை

    (c)

    பொதுநிதி

    (d)

    இலாபநட்டம்

  16. வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள _______ ஆகும்

    (a)

    கூட்டு இலாபம்

    (b)

    சராசரி இலாபம்

    (c)

    சாதாரண இலாபம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  17. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு_____.

    (a)

    சொத்து க/கு

    (b)

    பெயரளவு க/கு

    (c)

    ஆள்சார் க/கு

    (d)

    ஆள்சாரா க/கு

  18. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    2:1

    (d)

    1:2

  19. கூட்டாண்மை மாற்றியமைக்கையில் பழைய கூட்டாளிகளின் _________ மாற்றப்பட வேண்டும்

    (a)

    இலாப நட்டப் பகிர்வு விகிதம்

    (b)

    முதல் விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  20. நற்பெயர் என்பது பழைய கூட்டாளிகளின் ________ கால முயற்சிகளின் பலன் ஆகும்

    (a)

    கடந்த

    (b)

    நிகழ்

    (c)

    வருங்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  21. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு_____.

    (a)

    A-ன் முதல் கணக்கு

    (b)

    A-ன் கடன் கணக்கு

    (c)

    A –ன் நிறைவேற்றாளர் கணக்கு

    (d)

    A –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு

  22. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்_____.

    (a)

    4:3

    (b)

    3:4

    (c)

    2:1

    (d)

    1:2

  23. விலகும் கூட்டாளிக்குரிய தொகை உடனே செலுத்தப்படும் அல்லது அவருக்குச் சேர வேண்டிய தொகை அவர் நிறுவனத்திற்குக் _______ கொடுத்ததாகக் கொள்ளப்படும்.

    (a)

    கடன்

    (b)

    தள்ளுபடி

    (c)

    வட்டி

    (d)

    இவை அனைத்தும்

  24. தொடரும் கூட்டளிகள் வெளிச்செல்லும் கூட்டாளிகளுக்குத் தர வேண்டிய ஈட்டுத் தொகையை நிர்ணயிக்க ________  கணக்கிடப்படுகிறது.

    (a)

    தியாக விகிதம்

    (b)

    ஆதாய விகிதம்

    (c)

    இலாபப் பகிர்வு விகிதம்

    (d)

    முதல் விகிதம்

  25. முன்னுரிமைப் பங்கு என்பது
    (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
    (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

    (a)

    (i) மட்டும் சரியானது

    (b)

    (ii) மட்டும் சரியானது

    (c)

    (i) மற்றும் (ii) சரியானது

    (d)

    (i) மற்றும் (ii) தவறான

  26. ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது_____.

    (a)

    பொதுக்காப்பு கணக்கிற்கு

    (b)

    முதலினக் காப்பு கணக்கிற்கு

    (c)

    பத்திர முனைமக் கணக்கிற்கு

    (d)

    உபரி கணக்கிற்கு

  27. பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    பங்குகள் 

    (b)

    பங்கு முதல் 

    (c)

    பங்கு விண்ணப்பம் 

    (d)

    பங்கு ஒதுக்கீடு 

  28. ஒறுபிழப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.900 ஒறுபிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த வகையில் தள்ளுபடி ரூ.400 எனில், முதலின காப்பு ரூ._______ ஆகும்.

    (a)

    ரூ.400

    (b)

    ரூ.500

    (c)

    ரூ.600

    (d)

    ரூ.900

  29. நிதி என்னும் சொல் குறிப்பிடுவது_____.

    (a)

    நடப்புப் பொறுப்புகள்

    (b)

    நடைமுறை முதல்

    (c)

    நிலைச் சொத்துகள்

    (d)

    நீண்டகாலச் சொத்துகள்

  30. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ரூ.80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ரூ.88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

    (a)

    10%

    (b)

    110%

    (c)

    90%

    (d)

    11%

  31. பொதுவான அடிப்படையிலான பல்வேறு விவரங்களின் தொடர்பினைக் காட்டுவது எது?

    (a)

    ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

    (b)

    பொது அளவு அறிக்கைகள் 

    (c)

    போக்குப் பகுப்பாய்வு 

    (d)

    நிதி ஓட்டப் பகுப்பாய்வு 

  32. ______ வணிக நிறுவனத்தின் செயல்பாடுகளையும், நிதிநிலைகளையும் புரிந்து கொள்வதற்கு வழி செய்கிறது.

    (a)

     நிதிநிலை பகுப்பாய்வு 

    (b)

    நிதிநிலை தொகுப்பாய்வு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  33. பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் ______.

    (a)

    உரிமையாளர் விகிதம்

    (b)

    முதல் உந்துதிறன் விகிதம்

    (c)

    புற அக பொறுப்பு விகிதம்

    (d)

    நடப்பு விகிதம்

  34. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்______.

    (a)

    2 மடங்கு

    (b)

    3 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    8 மடங்கு

  35. ______ என்பது நீண்டகாலக் கடன் தீர்க்கும், செயல்திறன் மற்றும் மூலதனக் கட்டமைப்பின் ஒரு அளவிடாகும்.

    (a)

    முதல் உந்துதிறன் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    நிகர இலாப விகிதம் 

    (d)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

  36. விகிதங்கள் _______ முன்கணிப்புக்கு உதவுகின்றன.

    (a)

    கணிதவியல் 

    (b)

    நிதியியல் 

    (c)

    பொருளியியல் 

    (d)

    அறிவியல் 

  37. Tally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

    (a)

    அனாமத்து க/கு 

    (b)

    கொடுபட வேண்டிய செலவு க/கு 

    (c)

    விற்பனை க/கு 

    (d)

    முதலீடுகள் க/கு 

  38. சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்? 

    (a)

    நேரடி வருமானங்கள் 

    (b)

    நேரடி செலவினங்கள் 

    (c)

    மறைமுக வருமானங்கள் 

    (d)

    மறைமுக செலவினங்கள் 

  39. _________ விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க கணக்கியல் முறை வழிவகை செய்கிறது.

    (a)

    தரவுநிலை மற்றும் தகவல்களை 

    (b)

    அறிக்கைகளை 

    (c)

    ஊதியப் பட்டியலை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  40. ________ சான்றாவணம் ரொக்க மற்றும் சரக்கு கடன் சரக்கு கொள்முதல் பதிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    சான்றாவணம் 

    (d)

    இருபாய்வு 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment