All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 105
    Answer All The Following Question: 
    35 x 3 = 105
  1. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,50,000
    2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 40,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 10,000
    விற்பனைத் திருப்பம் 40,000
    2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 1,30,000
    ரொக்க விற்பனை 2,00,000
  2. நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.

  3. திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம் ரூ 
    தொடக்க  இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000
    முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000
    மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள்  7,000
    நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000
    தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000
  4. பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்

  5. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  6. குறிப்பு வரைக 
    1) சந்தா 
    2) நன்கொடைகள் 

  7. தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:   நிலைச் சொத்துகள் 30,000
    சுபா 15,000 நடப்புச் சொத்துகள் 20,000
    சுதா 20,000    
    நடப்புப் பொறுப்புகள் 15,000    
      50,000   50,000

    அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.

  8. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12 % கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 6,000
    ஜுன் 1 4,000
    செப்டம்பர் 5,000
    டிசம்பர் 1 2,000

    பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  9. குறிப்பு வரைக:
    (i) கூட்டாளிகளின் முதல் கணக்கு
    (ii) கூட்டாளிகளின் நடப்பு கணக்கு

  10. முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  11. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014:  ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  12. ஸ்ரீதேவி நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து, 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 4 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 – ன் இலாபங்கள் முறையே ரூ.1,75,000, ரூ.1,50,000, மற்றும் ரூ.2,00,000
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.45,000 சேர்ந்துள்ளது.
    (இ) 2017ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.30,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.

  13. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  14. கூட்டு சராசரி முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  15. அஞ்சலி மற்றும் நித்யா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்துவருகின்றனர். அவர்கள் பிரமிளா என்பவரை 1.1.2018 அன்று கூட்டாளியாகச் சேர்த்தனர். அந்நாளில் அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் பகிர்ந்து தரா நட்டம் ரூ.40,000 ஆக இருந்தது. சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை பகிர்வதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  16. சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
    (i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
    (ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
    (iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

  17. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  18. ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும் 
    ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
    iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  19. ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
    2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
    (அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    (ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  20. நற்பெயர் சர்க்கட்டப்படுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக

  21. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  22. அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.

  23. சிறுகுறிப்பு வரைக.
    (அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
    (ஆ) காப்புமுதல்

  24. நிறுமத்தின் பண்புகளை எழுதுக.

  25. குறிப்பு வரைக:
    1) தனியார் ஒதுக்கீடு 
    2) உரிமை வெளியீடு 
    3) மேலூதிய பங்கு வெளியீடு 

  26. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 3,00,000
    இதர வருமானம் 25,000 75,000
    செலவுகள் 2,50,000 1,50,000
    வருமான வரி % 40 40
  27. நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.

  28. நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).

  29. நிறுமங்களின் நிதிநிலை அறிக்கைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் யாவை?

  30. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  31. சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  32. பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.

  33. நீர்மைத் தன்மை விகிதங்கள் குறிப்பு வரைக.

  34. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

  35. Tally.ERP 9-ல் இலாப நட்டக் கணக்கை எவ்வாறு பார்வையிடுவது என்பதை விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment