All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 88
    Answer All following Question:
    44 x 2 = 88
  1. தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை? 

  2. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  3. வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.

  4. உலோகத்தைத் தூய்மையாக்கும் உருக்கிப் பிரித்தல் முறை பற்றி எழுது.

  5. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  6. ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  7. அலுமினியம் குளோரைடுடன் NaOH ன் வினை யாது?

  8. படிகாரம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  9. ஏன் ஃ புளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலைலையினைப் பெற்றுள்ளது விளக்குக.

  10. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  11. சேமிக்கப்பட்ட நைட்ரிக் அமிலம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. ஏன்?

  12. ஆய்வகத்தில் ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  13. லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.

  14. பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
    அ) MnO42-+H+\(\rightarrow\)?
    ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
    இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
    ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
    உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
    ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?

  15. Pt(II) சேர்மங்களை காட்டிலும் Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையவை ஏன்?

  16. ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?

  17. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
    i) Na2[Ni(EDTA)]
    II) [Ag(CN)2)
    iii) [Co9en)3]2(SO4)3
    iv) [Co(ONO)(NH3)5]2+
    v) [Pt(NH3)2Cl(NO2)]

  18. டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.

  19. முதன்மை இணைதிறன் என்றால் என்ன?

  20. பல முனை ஈனிகள் என்றால் என்ன?

  21. அயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.   

  22. எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.

  23. முதல்நிலை அலகுக்கூடுகள் என்றால் என்ன?

  24. அழுத்த மின்சாரம் என்றால் என்ன?

  25. பின்வரும் வினைகளில், ஒவ்வொரு வினைபடு பொருள்களைப் பொருத்து வினை வேகங்ககளைக்  குறிப்பிடுக. வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
    அ) \(\\ 5{ Br }^{ - }(aq)+Br{ O }_{ 3 }^{ - }(aq)+{ 6H }^{ + }(aq)\longrightarrow 3{ Br }_{ 2 }(l)+3{ H }_{ 2 }O(l)\)
    சோதனை மூலம் கண்டறியப்பட்ட வேகவிதி 
    வினைவேகம் = K[Br-][BrO3-][H+]2
    ஆ) CH3CHO(g)\(\overset { \Delta }{ \longrightarrow } \)CH4(g)+CO(g) சோதனை மூலம் கணடறியப்பட வேகவிதி 
    Rate = K[CH3CHO]\(\frac {3}{2}\)

  26. வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.

  27. வினை வேகம் -வரையறு.

  28. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

  29. வலிமை மிகு அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரத்திலிருந்து உருவாகும் உப்பின் நீராற்பகுத்தல் மாறிலி மற்றும் நீராற்பகுத்தல் வீதம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளை தருவி.

  30. \(2 \times 10^{-3}\) M, H3O+ அயனிச் செறிவைக் கொண்டுள்ள ஒரு பழரசத்தில் OH அயனிச் செறிவை கணக்கிடுக. கரைசலின் தன்மையை கண்டறிக.

  31. நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?

  32. ஒரு மின்கடத்துக் கலனிலுள்ள இரண்டு பிளாட்டின மின்முனைகளுக்கு இடைப்பட்ட தூரம் 1.5 செ.மீ. ஒவ்வொரு மின்முனையும் குறுக்குப் பரப்பும் 4.5 ச.செ.மீ என்க. 0.5 N மின்பகுளிக் கரைசலுக்கு மின்கலத்தை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மின்தடை மதிப்பு 15 Ω எனில், கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பை காண்க.

  33. இயற்புறப்பரப்பு கவர்தலின் சிறப்புப் பண்புகள் இரண்டை தருக.

  34. CuCl2 முன்னிலையில் காற்றைக் கொண்டு  HCl ஐ ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தல்.

  35. ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  36. t – பியூட்டைல் ஆல்கஹாலை அமிலம் கலந்த டைகுரோமேட்டை பயன்படுத்தி கார்பனைல் சேர்மமாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய இயலுமா?

  37. ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக ?

  38. HCl முன்னிலையில், அசிட்டால்டிஹைடை , இரண்டு சமானங்கள் மெத்தனால் உடன் வினைப்படுத்தும்போது 1,1, - டைமீத்தாக்ஸி ஈத்தேன்  எவ்வாறு  உருவாகிறது?

  39. நைட்ரோ பென்சீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்
    i. 1,3,5 - ட்ரை நைட்ரோபென்சீன்
    ii. ஆர்த்தோ மற்றும் பாரா நைட்ரோ பீனால்
    iii. m – நைட்ரோ அனிலீன்
    iv. அசாக்சி பென்சீன்
    v. ஹைட்ரசோ பென்சீன்
    vi. N – பினைல்ஹைட்ராக்சிலமீன்
    vii. அனிலீன்

  40. பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
    i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
    ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
    iii) 
    iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
    v) 

    vi) 
    vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)

  41. பின்வரும் குறைபாட்டு  நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
    i) ரிக்கட்ஸ்
    ii) ஸ்கர்வி

  42. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக

  43. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.

  44. தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Chemistry All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment