All Chapter 5 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150
    Answer The Following Question:
    30 x 5 = 150
  1. E = 2 x 103NC-1 வலிமையுடைய மின்புலம் ஒன்றில் மூடப்பட்ட பரப்புடைய முக்கோணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    (அ) அதில் நெடுக்கைத் (vertical) திசையில் அமைந்த செவ்வகப் பரப்பு
    (ஆ) சாய்வான பரப்பு மற்றும்
    (இ) மொத்த பரப்பு ஆகியவற்றைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக.

  2. h = 1 mm இடைவெளி கொண்ட 5 V மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் தட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு எலக்ட்ரானும், ஒரு புரோட்டானும் விழுகின்றன

    (அ) எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் பறக்கும் நேரத்தைக் கணக்கிடுக.
    (ஆ) நியூட்ரான் ஒன்று விழுந்தால் அதன் பறக்கும் நேரம் எவ்வளவு?
    (இ) இம்மூன்றில் எது முதலில் அடித்தட்டை அடையும்? (mp = 1.6 × 10-27kg, me = 9.1 × 10-31kg மற்றும் g = 10 m s-2)

  3. இரு புள்ளி மின்னூட்டங்களின் கூடுதல் 6 μC வெற்றிடத்தில் 40 cm இடைவெளியில் அவை வைக்கப்படும் போது 0.9 N, விசையுடன் ஒன்றை ஒன்று கவர்கிறது எனில் அம்மின்னூட்டங்களைக் கணக்கிடுக.

  4. 60 cm பக்கங்கள் கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிகளில் +1 μC, +3μC மற்றும் -5 μC மின்னூட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இம்மின்னூட்டங்களின் அமைப்பில் மின்னழுத்த ஆற்றலைக் கணக்கிடுக~ = +1 x 10 C, qB = +3 x 10 C

  5. படத்தில் உள்ள வீட்ஸ்டோன் சமனச் சுற்று சமநிலையில் இருக்கும் நிலையில் x ன் மதிப்பு என்ன?
    P = 500 Ω, Q = 800 Ω, R = x + 400, S = 1000 Ω

  6. ஒரு மின்னழுத்தமானி அமைப்பில், 1.25 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலம் தரும் சமன்செய் நீளம் 35 cm நீளத்தில் ஏற்படுகிறது. இந்த மின்கலம் மாற்றப்பட்டு மற்றொரு மின்கலம் இணைக்கப்படும்போது, சமன்செய் நீளம் 63 cm க்கு நகர்கிறது. எனில் இரண்டாவது மின்கலத்தின் மின்னியக்கு விசை என்ன?

  7. அ) மின்திறன் வரையறு.
    ஆ) 80 ᘯ மின்தடையுள்ள மின்சலவைப்பெட்டியானது 200V மின்னழுத்ததில் 2 மணி நேரம் செயல்பட்டால், பயன்படுத்தப்பட்ட மின்னாற்றலைக் கணக்கிடுக.

  8. மின் தடையாக்கிகள் தொடரிணைப்பிலும் பக்க இணைப்பிலும் உள்ள போது தொகுபயன் மின்தடைகள் 10 ᘯ மற்றும் 2.4ᘯ எனில், தனித்தனியான மின்தடைகள் என்ன?

  9. 0.8 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் சட்ட காந்தமானது வைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தம் காந்தப்புலத்துடன் 30˚ கோணத்தை ஏற்படுத்தும்படி ஒருங்கமைந்து, 0.2 Nm திருப்புவிசையை உணர்கிறதெனில் பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
    (i) சட்ட காந்தத்தின் காந்தத்திருப்புத்திறன்
    (ii) மிகவும் உறுதியான ஒருங்கமைப்பில் (Most stable configuration) இருந்து மிகவும் உறுதியற்ற (Most unstable configuration) ஒருங்கமைப்பிற்கு சட்ட காந்தத்தை நகர்த்துவதற்கு அளிக்கப்படும் விசையினால் செய்யப்பட்ட வேலை மற்றும் செலுத்தப்படும் காந்தப்புலத்தால் செய்யப்படும் வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக

  10. 1.5 A மின்னோட்டம் பாயும் சதுர வடிவ கடத்தியின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க. சதுரத்தின் ஒவ்வொரு பக்கங்களின் நீளமும் 50 cm ஆகும்.

  11. சீரான காந்தப்புலத்திலுள்ள மின்துகளின் இயக்கத்தை விவரி?

  12. N சுற்றுகள் கொண்ட ஒரு கம்பிச்சுருளை இறுக சுட்டி ஒரு சுருளை உண்டாக்கி அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆரத்தை a மற்றும் b எனக் கொள்க. அந்த சுருளில் I என்ற மின்னோட்டம் பாயும் போது அதன் நடுவிலிருந்து உருவாகும் காந்தப்புலத்தை கணக்கிடு.

  13. 2m நீளம், 0.04 m விட்டம் மற்றும் 4000 சுற்றுகள் கொண்ட காற்று – உள்ளக வரிச்சுருளின் தன் மின்தூண்டல் எண்ணைக் கணக்கிடுக

  14. ஒரு செமீ நீளத்தில் 400 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருள் 2A மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு மற்றும் 100 சுற்றுகள் கொண்ட கம்பிச்சுருள் ஒன்று வரிச்சுருளின் உள்ளே பொது அச்சுள்ள (co-axial) வகையில் வைக்கப்படுகிறது. வரிச்சுருளின் காந்தப்புலத்தில் கம்பிச்சுருள் உள்ளவாறு வைக்கப்படுகிறது. 0.04 விநாடியில் வரிச்சுருளில் செல்லும் மின்னோட்டத்தின் திசை திருப்பப்பட்டால், கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க.

  15. 240v, 50Hz AC மூலத்துடன் 0.50H மின்தூண்டல் எண் உள்ள கம்பிச்சுருளும் 100Ω மின்தடையும் இணைக்கப்பட்டுள்ளன.
    a) சுற்றில் பாயும் பெரும மின்னோட்டம் என்ன?
    b) மின்னோட்ட பெருமத்திற்கும் மின்னழுத்த பெருமத்திற்கான கால இடைவெளி என்ன?
    L = 0.50H
    R = 100Ω
    V = 240v
    r = 50Hz

  16. ஒரு ஜெட் விமானம் மேற்கு நோக்கி 1800 km/h வேகத்தில் செல்கிறது. விமானத்தின் இறக்கைகளுக்கு இடையே 25 m நீளத்தில் மின்னழுத்தங்களின் வேறுபாடு என்ன? அந்த இடத்தில் புவிக்காந்தப்புலம் 5 x 10-4 T மற்றும் கோணம் (dip angle) 300 என்க.

  17. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

  18. இலேசான பிரித்து வைக்கப்பட்டுள்ள இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றைக் கருதுக. தகடுகளின் ஆரம் R எனவும் இரண்டு தகடுகளையும் இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் 5A எனவும் கொண்டு, தகடுகளின் வழியே ஓரலகு நேரத்தில் மாற்றமடையும் மின்புலபாயத்தை நேரடியாகக் கணக்கிட்டு, அதன்மூலம் இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளுக்கு நடுவே உள்ள சிறிய இடைவெடைவெளியில் தகடுகளின் வழியே பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

  19. நேர்குறி z - அச்சில் சமதள மின்காந்த அலை ஒன்றின் திசைவேகம் c எனில்
    (i) பாரடே விதியின் அடிப்படையில் E = cB என்பதையும்
    (ii) மாற்றியமைக்க பெற்ற ஆம்பியர் சுற்று விதியை \(c=\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o }{ \varepsilon }_{ o } } } \) எனவும் தருவி

  20. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

  21. இரண்டு போலராய்டுகளின் பரவு அச்சுகள் ஒன்றுக்கொன்று 300 கோணத்தில் சாய்ந்துள்ள நிலையில், I செறிவு கொண்ட தளவிளைவு அற்ற ஒளி முதல் போலாராய்டின் மீது விழுகின்றது. இரண்டாவது போலராய்டில் இருந்து வெளியேறும் ஒளியின் செறிவினைக் காண்க.

  22. குவிலென்ஸின் குவியத்தொலைவினைப் போன்று 4 மடங்கு தொலைவில் அதாவது, D தொலைவில் பொருளும் திரையும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இணை குவிய முறையின்படி (Conjugate foci method) பொருளுக்கும் திரைக்கு நடுவே இரண்டு நிலைகளில் குவிலென்ஸை வைத்து பிம்பத்தை உருவாக்கலாம். இவ்விரண்டு நிலைகளுக்கு இடையே உள்ள தொலைவை f எனக் கொண்டு, குவிலென்சின் குவியத்தூரத்திற்கான சமன்பாட்டை வருவி.

  23. 81 V மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படும் எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளத்தின் மதிப்பு என்ன? இந்த அலைநீளம் மின்காந்த நிறமாலையில் எந்தப் பகுதியில் அமையும்?

  24. பொருள் ஒன்றில் இருந்து 3310 \(\mathring { A }\) அலைநீளம் கொண்ட ஃபோட்டான் வெளியேற்றும் எலக்ட்ரானின் ஆற்றல் 3 x 10-19 J ஆகும். மேலும் அதே பொருளிலிருந்து 5000 \(\mathring { A }\) அலைநீளம் கொண்ட ஃபோட்டான் வெளியேற்றும் எலக்ட்ரானின் ஆற்றல் 0.972 x 10-19 J எனில், பிளாங்க் மாறிலி மற்றும் பொருளின் பயன்தொடக்க அலைநீளம் ஆகியவற்றைக் கணக்கிடுக.

  25. பின்வரும்  தகவல்களை பயன்படுத்தி  \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவின்  பிணைப்பு ஆற்றலைக் கணக்கிடுக: ஹீலியம் அணுவின் அணு நிறை M4(He) = 4.00260 u மற்றும் ஹைட்ரஜன் அணுவின் நிறை mH = 1.00785 u 

  26. கீழடி என்ற சிறிய கிராமம் தமிழ்நாட்டிலுள்ள மிகவும் முக்கியமான அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிகளில் (படம்) ஒன்றாகும். இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. (தங்க நாணயங்கள், மண்கலன்கள், மணிகள், இரும்புக் கருவிகள், அணிகலன்கள் மற்றும் மரக்கரித்துண்டு உள்ளிட்ட) பல தொல் கைவினைப் பொருள்கள்
    கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வைகை ஆற்றங்கரைகளில் பண்டைய நாகரிகம் செழித்திருந்தது என்பதற்கான தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது. இப்பொருள்களின் காலத்தைக் கணிப்பதற்கு, (படத்தில் கொடுக்கப்பட்டுள்ள) 200 g கரியானது கார்பன் காலக்கணிப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் \(_{ 6 }^{ 14 }{ C }\) இன் செயல்பாடு 38 சிதைவுகள்/s எனில், அக்கரியின் வயதைக் கணக்கிடுக.

  27. படத்தில் காட்டப்பட்டுள்ள மின்சுற்றில் உள்ளீடு மின்னழுத்தம் V= 20 V, VBE = 0 V மற்றும் VCE  = 0 V எனில் IB , I மற்றும் β வின் மதிப்புகள் யாவை?
     

  28. பின்வரும் பூலியன் சமன்பாட்டை எளிமைப்படுத்துக.
    AC + ABC = AC அதன் சுற்று விளக்கப்படம் தருக.

  29. ஏதேனும் இரு வகையான ரோபோக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்குக.

  30. மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையின் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றிய கருத்தைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment