All Chapter 3 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 96
    Answer All The Following Question:
    32 x 3 = 96
  1. மின்னூட்டம் பெற்ற முடிவிலா நீளமுள்ள கம்பியினால் ஏற்படும் மின்புலத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.

  2. ஒரு கடத்தியில் மின்துகள்களின் பரவலைப் பற்றி விரிவாக எழுதுக. மின்னல் கடத்தியின் தத்துவத்தை விளக்குக.

  3. மின்இருமுனை ஒன்றின் மின்னழுத்தத்திற்கான கோவையின் முக்கிய கருத்துக்களை எழுதுக.

  4. கடத்தியின் உட்புறத்திலிருக்கும் அனைத்து புள்ளிகளிலும் மின்புலம் சுழியாகும். இக்கூற்று திண்மக் கடத்தி மற்றும் உள்ளீடற்ற கூடு வகைக் கடத்தி இரண்டிற்கும் பொருந்தும். மெய்ப்பிக்கவும்

  5. ஒரு தாமிரக் கம்பியில் 1 நிமிடத்திற்கு 120 C மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் பாய்ந்தால், கம்பி வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பை காண்க.

  6. வோல்ட்மீட்டரை பயன்படுத்தி மின்கலத்தின் அக மின்தடையை காண்பதை விளக்குக.

  7. எப்படி மின்கலத்தின் ஸ்விட்சை (Switch) அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்கிறது?

  8. ஜீல் விதிக்கான கோவையினைப் பெறுக.

  9. பயட் -சாவர்ட் விதி உதவியுடன் மின்னோட்டம் பாயும் முடிவிலா நீளம் கொண்ட நேர்க்கடத்தியால் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக.

  10. சட்ட காந்தமொன்றின் அச்சுக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

  11. கூலும் விதி மற்றும் பயோட் - சவர்ட் விதிகளுக்கிடையே வேறுபாடுகள் 

  12. கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறன் பற்றி வரையறு.

  13. மின்தூண்டல் எண் L கொண்ட ஒரு மின்தூண்டி i என்ற மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது. அதில் மின்னோட்டத்தை நிறுவ சேமிக்கப்பட்ட ஆற்றல் யாது?

  14. LC அலைவுகளின்போது மொத்த ஆற்றல் மாறாது எனக் காட்டுக.

  15. சுழல் மின்னோட்டத்தின் குறைபாடுகள் யாவை? எவ்வாறு தவிர்க்கலாம்?

  16. மூன்று கட்ட மின்னாக்கிகளின் நன்மைகள் யாவை?

  17. சிறு குறிப்பு வரைக
    (அ) மைக்ரோ அலை
    (ஆ) X-கதிர்
    (இ) ரேடியோ அலைகள்
    (ஈ) கண்ணுறு நிறமாலை

  18. வெளியிடு நிறமாலையின் வகைகளை விளக்கவும்.

  19. எவ்வாறு நீங்கள் மின்காந்த அலையானது ஆற்றல் மற்றும் உந்தத்தினை கடத்தும் என்பதை உறுதிப்படுத்துவீர்கள்?

  20. பூமியில் வளிமண்டலம் இல்லாமல் போனால் அவற்றின் பரப்பு வெப்பநிலை இப்போது உள்ள வெப்ப நிலையை விட குறையுமா அல்லது அதிகரிக்குமா?

  21. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளிப்பொருள் O வின் பிம்பம் எங்குத் தோன்றும் எனக் குறிப்பிட்டுக்காட்டுக. படத்தில் C என்பது ஊடகங்களைப் பிரிக்கும் தளத்தின் வளைவு ஆரமாகும்.

  22. ஹைகென்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் எதிரொளிப்பு விதிகளை நிரூபி.

  23. டி ப்ராய் கருதுகோளினைக் கூறுக.

  24. 2200 Å அலை நீளம் கொண்ட ஒளியானது Cu மீது படும்பபோது, ஒளிஎலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன எனில்
    (i) பயன் தொடக்க அலைநீளம் மற்றும்
    (ii) நிறுத்து மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணக்கிடவும். (Cu – இன் வெளியேற்று ஆற்றல் \({ \phi }_{ 0 }\) = 4.65 eV)

  25. எலக்ட்ரானின் மின்னூட்ட எண்ணைக் கண்டறிய உதவும் J.J. தாம்சன் சோதனையை விவரி.

  26. படத்தின் உதவியுடன் அணுக்கரு உலை வேலை செய்யும் விதத்தை விளக்கவும்.

  27. சூரியமின்கலம் வேலை செய்யும் தத்துவத்தை விவரி. அதன் பயன்பாடுகளைக் குறிப்பிடுக.

  28. டீமார்கனின் முதல் தேற்றம் மற்றும் இரண்டாவது தேற்றங்களை கூறி நிரூபிக்கவும்.

  29. சுரங்கம் மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடுகளைத் தருக.

  30. பல்வேறு வகைப்பட்ட தகவல் தொடர்புகளில் ஒளி இழை தகவல் தொடர்பு சிறந்ததாக விளங்குகிறது. நிரூபி.

  31. எந்திரவியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக?

  32. துணை  அணுத்துகள்கள் என்பவை யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று  மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment