All Chapter 2 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 64
    Answer The Following Question:
    32 x 2 = 64
  1. மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது நிறுவுக.

  2. சம மின்னழுத்தப்பரப்பின் பண்புகள் யாவை?

  3. மின்தேக்கிகளின் பயன்பாடுகளை எழுதுக

  4. ஒரு இணைத்தட்டு மின்தேக்கியானது, குறிப்பிட்ட மின்னழுத்ததில் வைக்கப்படுகிறது. தகடுகளுக்குக்கிடையே 3 mm தடிமன் கொண்ட ஒரு பாளம் புகுத்தப்படுகிறது. தகடுகளை இடையே உள்ள மின்னழுத்தத்தை மாற்றாமல் வைக்க, தகடுகளின் இடைத்தொலைவு 2.4 mm அதிகமாக்கப்படுகிறது. பாளத்தின் மின்காப்பு மாறிலியைக் கணக்கிடுக

  5. வெப்பநிலை மின்தடை எண் வரையறு.

  6. சீபெக் விளைவின் பயன்பாடுகள் யாவை?

  7. ஒரு ஆம்பியரை வரையறு.

  8. வெப்ப மின்னிரட்டையில் தோன்றும் மின்னியக்கு விசையானது எந்த காரணிகளைச் சார்ந்திருக்கும்?

  9. டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ ஆகியவற்றின் காந்தவியலை ஒப்பிடுக.

  10. காந்தத் தயக்கம் என்றால் என்ன ?

  11. மின்னோட்ட வளையத்தின் காந்த இருமுனை திருப்புத் திறன் வரையறு.

  12. நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.

  13. பிளமிங் வலக்கை விதியைக் கூறுக

  14. சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது? அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?

  15. காந்தப்பாயத்தைப் பொறுத்து தன் மின்தூண்டல் எண்ணை வரையறு?

  16. மின்னியக்கு விசையைப் பொறுத்து தன்மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.

  17. மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.

  18. பிரான்ஹோபர் வரிகள் என்றால் என்ன? சூரியனிலுள்ள தனிமங்களைக் கண்டறிவதில் அவை எவ்வாறு உதவுகின்றன?

  19. UV - கதிரின் பயன்கள் யாவை?

  20. மின்காந்த அலை ஒன்றின் மின்புலச் சமன்பாடு \({ E }_{ y }=30sin[2\times { 10 }^{ 11 }t+300\pi x]{ Vm }^{ -1 }\)
    (a) அலைநீளம்
    (b) காந்தப்புலச் சமன்பாடு ஆகியவற்றை கூறு

  21. முழுஅக எதிரொளிப்பு பண்பின் அடிப்படையில் முப்பட்டகங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி குறிப்பு வரைக.

  22. ஒளியின் மின்காந்த அலைக்கொள்கை என்றால் என்ன?

  23. ஓர் உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத் தருக.

  24. படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?

  25. தனிமத்தின் அணுக்கருவின் குறியீட்டு முறையை எழுதுக. அதில் ஒவ்வொரு உறுப்பும் எதைக் குறிக்கின்றன?

  26. ஆல்பா சிதைவில் நிலைத்தன்மையற்ற ஒரு அணுக்கரு ஏன் \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவை உமிழ்கிறது? நான்கு தனித்தனி நியூக்ளியான்களை அது ஏன் உமிழ்வதில்லை?

  27. ஒரு முழு அலைதிருத்தியின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு அலைவடிவங்களை வரைக.

  28. சரிவு முறிவு மற்றும் செனார் முறிவு ஆகியவற்றை வேறுபடுத்துக?

  29. RADAR என்பது எதனைக் குறிக்கிறது?

  30. இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்துதல் (Internet of Things, IoT) என்றால் என்ன?

  31. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

  32. நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது ?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment