12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது______.

    (a)

    மொத்தக் கடனாளிகள் கணக்கு

    (b)

    மொத்தக் கடனீந்தோர் கணக்கு

    (c)

    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

  2. ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    நிலையறிக்கை 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    குறிப்பேடுகள் 

  3. கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க _______ தயாரிக்க முடியும்.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    நிலையறிக்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. முழுமை பெறாத பதிவேடுகளைப் பயன்படுத்தும் நிறுவனம் ________ .

    (a)

    சிறு வியாபாரிகள் 

    (b)

    நிறுமங்கள் 

    (c)

    அரசு 

    (d)

    கூட்டுறவுச் சங்கங்கள் 

  5. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.

    (a)

    வருவாயினத் தன்மை மட்டும் உடையது

    (b)

    முதலினத் தன்மை மட்டும் உடையது

    (c)

    வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  6. கீழ்கொடுக்கப்பட்டவற்றுள் திரும்பத் திரும்ப நிகழா தன்மை கொண்டது எது?

    (a)

    சந்தா 

    (b)

    முதலீடு மீதான வட்டி 

    (c)

    உயில்கொடை நிதி 

    (d)

    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 

  7. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ______ கணக்கின் தன்மையைக் கொண்டதாகும்.

    (a)

    ரொக்கக் 

    (b)

    சொத்துக் 

    (c)

    பொறுப்புக் 

    (d)

    இவை அனைத்தும் 

  8. பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

    (a)

    அலுவலகச் செலவுகள்

    (b)

    பணியாளர் ஊதியம்

    (c)

    கூட்டாளியின் ஊதியம்

    (d)

    வங்கிக்கடன் மீதான வட்டி

  9. கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை

    (a)

    25

    (b)

    50

    (c)

    10

    (d)

    20

  10. தனியாள் வணிகத்தில் இலாபநட்டக் கணக்கில் உள்ள இலாபம் அல்லது நட்டம், தனியாள் வணிகரின் ______ கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படுகிறது.

    (a)

    சொத்து

    (b)

    முதல்

    (c)

    எடுப்பு

    (d)

    கடனாளிகள்

  11. சட்டப்படியான தொழில் செய்வதற்கு மட்டுமே _________ உருவாக்கப்படும்.

    (a)

    கூட்டாண்மை

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    கூட்டுறவுச் சங்கம்

    (d)

    இந்து கூட்டுக்குடும்ப வணிகம்

  12. உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

    (a)

    பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்

    (b)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகள்

    (c)

    சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்

    (d)

    நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

  13. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு _____.

    (a)

    ரூ.40,000

    (b)

    ரூ.70,000

    (c)

    ரூ.1,00,000

    (d)

    ரூ.30,000

  14. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.2,00,000: சொத்துகள் ரூ.3.00.000 மற்றும் பொறுப்புகள் ரூ.1,20,000 மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

    (a)

    ரூ.45,000

    (b)

    ரூ.60,000

    (c)

    ரூ.70,000

    (d)

    ரூ.20,000

  15. மூலதனமாக்கல் முறையில் நற்பெயர் என்பது, வியாபாரத்தில் பயன்படுத்தப்பட்ட முதலை விட ஆகும்.

    (a)

    கூட்டு இலாபம்

    (b)

    சராசரி இலாபம்

    (c)

    மொத்த இலாபம் 

    (d)

    நிகர இலாபம்

  16. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

    (a)

    முதல் விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    ஆதாய விகிதம்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  17. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.

    (a)

    1:3

    (b)

    3:1

    (c)

    5:3

    (d)

    3:5

  18. கூட்டாளி சேர்க்கையின் பொழுது, நற்பெயர் தோற்றுவிக்கப்படுகையில் பற்று செய்யப்படும் கணக்கு

    (a)

    கூட்டாளிகளின் முதல் கணக்குகள்

    (b)

    நற்பெயர் கணக்கு

    (c)

    மனுமதிப்பீட்டு கணக்கு

    (d)

    இலாபநட்ட கணக்கு

  19. ஒரு புதிய கூட்டாளியைச் சேர்ப்பது என்பது, சட்டப்படி பழைய கூட்டாண்மை _________ ஆகும்.

    (a)

    கலைப்பு

    (b)

    முறிவு

    (c)

    இரண்டும்

    (d)

    இவை எதுவுமில்லை

  20. புதிய கூட்டாளி சேர்க்கையில் சொத்தின் மதிபெற்றம் பற்று செய்யப்படும் கணக்கு ________

    (a)

    சொத்துக் கணக்கு

    (b)

    இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு

    (c)

    பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகள்

    (d)

    புதிய கூட்டாளிகளின் நடப்பு கணக்குகள்

  21. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  22. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ. 1,000

    (b)

    ரூ. 3,000

    (c)

    ரூ.12,000

    (d)

    ரூ.36,000

  23. நிறுவனத்தின் சொத்துக்களில் அவருக்குரிய பங்கில் அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு ஆண்டுக்கு எத்தனை சதவீதம் வட்டி பெறலாம்?

    (a)

    5%

    (b)

    6%

    (c)

    8%

    (d)

    10%

  24. தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______  கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.

    (a)

    முதல்

    (b)

    கடன்

    (c)

    நடப்பு

    (d)

    மறுமதிப்பீடு

  25. A, B, C, ஆகிய கூட்டாளிகளின் இலாப்பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். B கூட்டாண்மையிலிருந்து விலகினால், புதிய இலாபப் பகிர்வு விகிதம் _______.

    (a)

    1 : 3

    (b)

    3 : 2

    (c)

    3 : 1

    (d)

    1 : 1

  26. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  27. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.

    (a)

    பங்கொன்று ரூ.10

    (b)

    பங்கொன்று ரூ.8

    (c)

    பங்கொன்று ரூ.5

    (d)

    பங்கொன்று ரூ.2

  28. செபியின் வழிகாட்டுதலின்படி, குறைந்த அளவு பங்கு விண்ணப்பத் தொகை, வெளியீட்டு விலையில் எத்தனை சதவீதத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது?

    (a)

    10

    (b)

    15

    (c)

    25

    (d)

    5

  29. வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஒப்பப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது ______ எனப்படும்.

    (a)

    குறை ஒப்பம் 

    (b)

    மிகை ஒப்பம் 

    (c)

    அழைப்பு முன்பணம் 

    (d)

    இவை அனைத்தும் 

  30. மறு வெளியீட்டு இலாபம் மாற்றப்படுவது ______ கணக்கு.

    (a)

    முதலினக் காப்பு 

    (b)

    பத்திமுனைமக் கணக்கு 

    (c)

    பங்கு ஒறுப்பிழப்பு 

    (d)

    முகமதிப்பு 

  31. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

    (a)

    ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

    (c)

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

    (d)

    குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

  32. ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ரூ.1,25,000 லிருந்து ரூ.1,50,000க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

    (a)

    +20%

    (b)

    +120%

    (c)

    -120%

    (d)

    -20%

  33. தொழிலின் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனைப் பற்றிய தகவல்களை நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக யார் பெற்றுக் கொள்ள முடிகிறது.

    (a)

    கடனாளிகள் 

    (b)

    கடனீந்தோர் 

    (c)

    வங்கியர் 

    (d)

    மேலாளர் 

  34. ________ ஒரு கணக்காண்டின் வியாபார நடவடிக்கைகளின் நிகர முடிவினைக் காட்டும்.

    (a)

    வருமான அறிக்கை 

    (b)

    நிதிநிலை அறிக்கை 

    (c)

    முதல் அறிக்கை 

    (d)

    இலாப நட்ட அறிக்கை 

  35. ______ என்பது இயக்கத்தின் போக்கினை குறிப்பதாகும்.

    (a)

    பகுப்பாய்வு 

    (b)

    நிதி 

    (c)

    ரொக்கம் 

    (d)

    போக்கு 

  36. சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது______.

    (a)

    காப்புகள்

    (b)

    புலனாகும் சொத்துகள்

    (c)

    நிதி

    (d)

    விரைவு சொத்துகள்

  37. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

    (a)

    நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்

    (b)

    மொத்த இலாப விகிதம் – சதவீதம்

    (c)

    நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்

    (d)

    புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

  38. விகிதங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  39. ஒரு குறிப்பிட்ட கணக்காண்டில், விற்பனை மூலம் பெறும் வருவாய்க்கும் நிலைச் சொத்துக்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிப்பது எது?

    (a)

    சரக்கிருப்பு சுழற்சி விகிதம் 

    (b)

    நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் 

    (c)

    இயக்க இலாப விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  40. விகிதங்கள் கணக்கியல் தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் போது,அவை ________ என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    விகிதம் 

    (b)

    கணக்கியல் விகிதங்கள் 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  41. ______ என்பது நீண்ட காலத்தில் தன் பொறுப்புகளை எதிர்கொள்ளும் நிறுவனத்தின் திறன் ஆகும்.

    (a)

    நீர்மைத் தன்மை விகிதங்கள் 

    (b)

    நீண்டகால கடன் தீர்க்கும் விகிதங்கள் 

    (c)

    சுழற்சி விகிதங்கள் 

    (d)

    இலாபத் தன்மை விகிதங்கள் 

  42. மொத்த விற்பனை ரூ.3,40,000 கிடைத்த மொத்த இலாபம் ரூ.1,40,000 விற்ற பொருளின் அடக்க விலை _____ ஆகும்.

    (a)

    ரூ.2,00,000

    (b)

    ரூ.4,80,000

    (c)

    ரூ.3,40,000

    (d)

    ரூ.3,50,000

  43. விற்பனை மூலம் பெற்ற வருவாய் என்பது ______ ஆகும்.

    (a)

    நிகர கொள்முதல் 

    (b)

    நிகர விற்பனை 

    (c)

    நிகர இலாபம் 

    (d)

    மொத்த இலாபம் 

  44. _______ விகிதம் வணிக இயக்கங்களின் செயல்திறன் குறித்த ஒரு சோதனை ஆகும்.

    (a)

    இயக்க இலாப விகிதம் 

    (b)

    மொத்த இலாப விகிதம் 

    (c)

    நிகர இலாப விகிதம் 

    (d)

    இயக்க அடக்க விலை 

  45. குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?

    (a)

    சரக்கிருப்பு சான்றாவணங்கள் 

    (b)

    கணக்கியல் சான்றாவணங்கள் 

    (c)

    நிறுவன தகவல் 

    (d)

    கணக்கு தகவல் 

  46. அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்? 

    (a)

    பெறுதல்கள் சான்றாவணம் 

    (b)

    உரிய குறிப்பேடு சான்றாவணம் 

    (c)

    கொள்முதல் சான்றாவணம் 

    (d)

    பெறுதல்கள் சான்றாவணம் 

  47. வழக்கமான கணக்கியல் அறிக்கைகைகள் தவிர பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் அறிக்கை.

    (a)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (b)

    இலாப அறிக்கை 

    (c)

    குறிப்பிட்ட நோக்க அறிக்கை 

    (d)

    ரொக்க ஓட்ட அறிக்கை 

  48. எந்த ஆண்டு இந்திய சரக்கு மற்றும் சேவை  வரிக்கு தேவைக்கேற்ப Tally.ERP9 solutions மேம்படுத்தப்பட்டது?

    (a)

    2007

    (b)

    2009

    (c)

    2015

    (d)

    2017

  49. _____ மென் பொருள் விரிவான வணிக மேலாண்மைக்கு தீர்வு அளிக்கிறது.

    (a)

    Tally 6.0

    (b)

    Tally 8.0

    (c)

    Tally.ERP 9

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  50. _____ சான்றாவணம் பதிவுகள் மூலமே பதியப்பட வேண்டும்.

    (a)

    பதிவேடுகள் 

    (b)

    நடவடிக்கைகள் 

    (c)

    கணக்கோடுகள் 

    (d)

    அறிக்கைகள் 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment