12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

    (a)

    CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம் 

    (b)

    சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு  \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது. 

    (c)

    சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.  

    (d)

    உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 

  2. இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற 

    (b)

    கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற 

    (c)

    கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற 

    (d)

    மேற்கண்டுள்ள அனைத்தும் 

  3. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்? 

    (a)

    Fe

    (b)

    Cu

    (c)

    Mg

    (d)

    Zn

  4. மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தூயகாப்பர் 

    (b)

    தூய்மையற்ற காப்பர் 

    (c)

    கார்பன் தண்டு 

    (d)

    பிளாட்டினம் மின்வாய் 

  5. எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது? 

    (a)

    கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது  நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.

    (b)

    CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.

    (c)

    CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.

    (d)

    உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது  அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது

  6. டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.

    (a)

    ஆறு 

    (b)

    இரண்டு 

    (c)

    நான்கு 

    (d)

    மூன்று 

  7. சிலிக்கோன்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் அலகு ________.

    (a)

    SiO2

    (b)

    \(-\overset { \overset { R }{ | } }{ \underset { \underset { R }{ | } }{ Si } } -o-\)

    (c)

    \(R-o-\overset { | }{ \underset { \underset { R }{ | } }{ si } } -o\)

    (d)

    \(R-o-\overset { | }{ \underset { \underset { R }{ | } }{ si } } -o\)

  8. AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HFல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது

    (a)

    K3[AlF3H3]

    (b)

    K3[AlF6]

    (c)

    AlH3

    (d)

    K[AlF3H]

  9. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.

    (a)

    Al < Ga < In < Tl

    (b)

    Tl < In < Ga < Al

    (c)

    In < Tl < Ga < Al

    (d)

    Ga < In < Al < Tl

  10. தனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு _______.

    (a)

    1s2 2s2 2p4

    (b)

    1s2 2s2 2p3

    (c)

    1s2 2s2 2p63s2 3p2

    (d)

    1s2 2s2 2p63s2 3p3

  11. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  12. சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?

    (a)

    S4O62-

    (b)

    S2O62-

    (c)

    SO42-

    (d)

    SO32-

  13. 3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி \(\left( \frac { { M }^{ 2+ } }{ M } \right) \) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது ?

    (a)

    Ti 

    (b)

    Cu 

    (c)

    Mn 

    (d)

    Zn 

  14. துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலோகக்கலவை ________

    (a)

    மோனல் உலோகம் 

    (b)

    வெண்கலம் 

    (c)

    மணி உலோகம் 

    (d)

    பித்தளை 

  15. கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________

    (a)

    BrO3- MnO2

    (b)

    Br2,MnO42-

    (c)

    Br2,MnO2

    (d)

    BrO-MnO42-

  16. பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?

    (a)

    +4

    (b)

    +2

    (c)

    +5

    (d)

    +3

  17. [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______

    (a)

    3

    (b)

    6

    (c)

    -3

    (d)

    9

  18. K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் ____________

    (a)

    பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)

    (b)

    பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)

    (c)

    பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)

    (d)

    பொட்டாசியம் ட்ரைஆக்லேட்டோ அலுமினேட் (III)

  19. பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?

    (a)

    [Cu(NH3)4][ptCl4] மற்றும் [pt(NH3)4][CuCl4]

    (b)

    [Co(NH3)5(NO3)]SO4 மற்றும் [Co(NH3)5(ONO)]

    (c)

    [Co(NH3)4(NCS)2]ct மற்றும் [Co(NH3)4(SCN)2]Cl

    (d)

    (ஆ) மற்றும் (இ) இரண்டும் 

  20. சரியானக் கூற்றைத் தேர்வு செய்க

    (a)

    எண்முகி அணைவுகளைவிட தளசதுர அணைவுகள் அதிக நிலைப்புத்தன்மையுடையவை

    (b)

    [Cu(Cl)4]2-ன் சுழற்ச்சியை மட்டும் பொருத்து காந்த திருப்புத்திறனின் மதிப்பு 1.732 BM மேலும் இது தள சதுர வடிவமைப்புடையது.

    (c)

     [FeF6]4-ன் படிகப்புல பிளப்பு ஆற்றல் மதிப்பு \(\left( { \Delta }_{ 0 } \right) \)ஆனது  \([Fe(CN)6]{ { 4 }^{ - } }\)ஐ விட அதிகம் 

    (d)

    [V(H2O)6]2+ ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் மதிப்பானது [Ti(H2O)6]2+ ன் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றலை விட அதிகம் 

  21. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் ____________

    (a)

    1:1

    (b)

    1:2

    (c)

    2:11

    (d)

    1:4

  22. வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.___________

    (a)

    8

    (b)

    6

    (c)

    1

    (d)

    4

  23. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________

    (a)

    F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்

    (b)

    புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.

    (c)

    Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.

    (d)

    மேற்கண்டுள்ள அனைத்தும்.

  24. கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக்கச் திண்மத்தின் அடர்த்தி குறைகிறது.
    காரணம்: பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் பதிகத்தை விட்டு வெளியேறுகின்றன.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  25. \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம் __________

    (a)

    10s 

    (b)

    5min 

    (c)

    20min 

    (d)

    கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.

  26. வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R=8.314 JK-1mol-1)

    (a)

    234.65 KJ mol-1 K-1

    (b)

    434.65 KJ mol-1K-1

    (c)

    434.65 J mol-1K-1

    (d)

    334.65 J mol-1K-1

  27. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.

    (a)

    \(\left( \frac { 1 }{ 2 } \right) g\)

    (b)

    \(\left( \frac { 1 }{ 4 } \right) g\)

    (c)

    \(\left( \frac { 1 }{ 8 } \right) g\)

    (d)

    \(\left( \frac { 1 }{ 16 } \right) g\)

  28. பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?

    (a)

    BF3

    (b)

    PF3

    (c)

    CO

    (d)

    F

  29. \(\Delta G^{0}\)=57.34 kJ mol-1, எனும் கிபஸ் கட்டிலா ஆற்றல் மதிப்பை பயன்படுத்தி \(X_{2}Y(s)\rightleftharpoons 2X^{+}\) நீர்க்கரைசல் + Y2- (aq) என்ற வினைக்கு, 300 K வெப்ப நிலையில், நீரில் X2Y இன் கரை திறன் பெருக்க மதிப்பை கணக்கிடுக. 300 K (R = 8.3 J K-1 Mol-1)

    (a)

    10-10

    (b)

    10-12

    (c)

    10-14

    (d)

    கொடுக்கப்பட்ட தகவிலிருந்து கணக்கிட முடியாது

  30. ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல் ___________

    (a)

    சிறிதளவு அமிலத்தன்மை கொண்டது

    (b)

    அதிக அமிலத்தன்மை கொண்டது

    (c)

    நடுநிலைத் தன்மை கொண்டது

    (d)

    காரத் தன்மை கொண்டது

  31. கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள்  பின்வருமாறு செயல்புரிகின்றன.
    \(Zn(s)+Ag_{2}O(s)+H_{2}O(l)\rightleftharpoons 2Ag(s)+Zn^{2+}(aq)+2OH^{-}(aq) E^{0}=0.76V\)
    \(Ag_{2}O+H_{2}O(l)+2e^{-}\rightarrow 2Ag(s)+2OH^{-}(aq) E^{0}=0.34V\) எனில் மின்கல மின்னழுத்தம் _________

    (a)

    0.84 V

    (b)

    1.34 V

    (c)

    1.10 V

    (d)

    0.42 V

  32. லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________

    (a)

    எதிர்மின்முனை யில் PbSO4  ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது

    (b)

    நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது

    (c)

    நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது

    (d)

    எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது

  33. 25oC வெப்பநிலையில் 1MY மற்றும் 1MZ- ஆகியவற்றை கொண்டுள்ள கரைசலின் வழியே 1 atm அழுத்த த்தில் X எனும் வாயு குமிழிகள் மூலமாக  செலுத்த ப்படுகிறது. அவற்றின் ஒடுக்க மின்னழுத்தங்கள் Z>Y>X எனில்,____________

    (a)

    Y ஆனது X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது

    (b)

    Y ஆனது Z ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும் ஆனால் X ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யாது

    (c)

    Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஆக்ஸிஜனேற்றம் செய்யும்

    (d)

    Y ஆனது X மற்றும் Z இரண்டையும் ஒடுக்குமடையச் செய்யும்

  34. கூற்று :  Al3+  அயனியின் வீழ்படிவாக்கும் திறன் Naஅயனியை விட அதிகம்.
    காரணம் : சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ள போது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  35. ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது  தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________

    (a)

    ΔH அதிகரிக்கிறது

    (b)

    ΔS அதிகரிக்கிறது

    (c)

    ΔG அதிகரிக்கிறது

    (d)

    ΔS குறைகிறது

  36. கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது.
    காரணம் : பீனாக்ஸைடு அயனியானது உடனிசைவால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கான சரியான விளக்க மல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  37. HO CH2 CH2 – OH ஐ பெர் அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது  உருவாவது ___________

    (a)

    மெத்தனாயிக்  அமிலம்

    (b)

    கிளையாக்சால்

    (c)

    மெத்தனால் 

    (d)

    CO2

  38. அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?

    (a)

    கருகவர் பதிலீட்டு வினை

    (b)

    எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை

    (c)

    எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை

    (d)

    கருகவர் சேர்ப்பு வினை

  39. எத்தனாயிக் அமிலம் \(\overset{P/Br_2}\longrightarrow\) . 2 – புரோமோஎத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ______ என்றழைக்கப்படுகிறது

    (a)

    பிங்கல்ஸ்டீன் வினை

    (b)

    ஹேலோ ஃபார்ம் வினை

    (c)

    ஹெல் – வோல்ஹரர்ட்– ஜெலின்ஸ்கி வினை

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  40. பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைப்பொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ர ஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை  முறையே _____________

    (a)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனால்

    (b)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனைல்மெத்தனால்

    (c)

    பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம்பென்சோயேட்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  41.  'A’ என்பது ____________

    (a)

    H3PO2 and H2O

    (b)

    H+/ H2O

    (c)

    HgSO4 / H2SO4

    (d)

    Cu2Cl2

  42. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த சரியான பெயர் வரிசை முறையே ____________

    (a)

    L-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்

    (b)

    D-த்ரியோஸ், D-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , L-எரித்ரோஸ்

    (c)

    L-எரித்ரோஸ் , L-த்ரியோஸ் , D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்

    (d)

    D-எரித்ரோஸ் , D-த்ரியோஸ்,  L-எரித்ரோஸ், L-த்ரியோஸ்

  43. புரதங்களில், பல்வேறு அமினோ அமிலங்கள் ______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.

    (a)

    பெப்டைடு பிணை ப்பு

    (b)

    கொடை பிணைப்பு

    (c)

    α - கிளைக்கோசிடிக் பிணைப்பு

    (d)

    β - கிளைக்கோசிடிக் பிணைப்பு

  44. வைட்டமின்கள் B2 ஆனது _______________ எனவும் அறியப்படுகிறது.

    (a)

    ரிபோஃபிளாவின்

    (b)

    தையமின்

    (c)

    நிகோடினமைடு

    (d)

    பிரிடாக்ஸின்

  45. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது?

    (a)

    பாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வசஅமைப்பு

    (b)

    நீர்வெறுக்கும் இடையீடுகள்

    (c)

    α- அமினோ அமிலங்களின் வரிசை

    (d)

    α- சுருள் முதுகெலும்பு

  46. பின்வருவனவற்றுள் எவை எபிமர்கள் ஆகும்?

    (a)

    D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-காலக்டோஸ்

    (b)

    D(+)-குளுக்கோஸ் மற்றும் D(+)-மான்னோஸ்

    (c)

    (அ) மற்றும் (ஆ) இரண்டுமல்ல

    (d)

    (அ) மற்றும் (ஆ) இரண்டும்

  47. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?

    (a)

    ஸ்ட்ரெப்டோமைசின்

    (b)

    குளோரோமைசிடின்

    (c)

    ஆஸ்பிரின்

    (d)

    பெனிசிலின்

  48. ஆஸ்பிரின் என்பது ____________

    (a)

    அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

    (b)

    பென்சாயில் சாலிசிலிக் அமிலம்

    (c)

    குளோரோபென்சாயிக் அமிலம்

    (d)

    ஆந்த்ரனிலிக் அமிலம்

  49. பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?

    (a)

    (b)

    \(CH_2=CH -C \equiv CH\) 

    (c)

    CH2 =CH −CH=CH2

    (d)

  50. பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?

    (a)

    ஆர்லான்

    (b)

    PVC

    (c)

    டெஃப்லான்

    (d)

    PHBV

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment