12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I 

    50 x 1 = 50
  1. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1825

    (b)

    1835

    (c)

    1845

    (d)

    1855

  2. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.

    (a)

    சுரேந்திரநாத் பானர்ஜி

    (b)

    பத்ருதீன் தியாப்ஜி

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    W.C. பானர்ஜி

  4. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

    (a)

    1, 2

    (b)

    1, 3

    (c)

    இவற்றுள் எதுவுமில்லை

    (d)

    இவை அனைத்தும்

  5. ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை முதலில் எந்த நாட்டின் இருந்து தொடங்கப்பட்டது?

    (a)

    இங்கிலாந்து

    (b)

    இந்தியா

    (c)

    இலங்கை

    (d)

    ஜப்பான்

  6. இந்தியாவில் ஆங்கிலம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?

    (a)

    1935

    (b)

    1980

    (c)

    1835

    (d)

    1947

  7. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    (a)

    பங்கிம் சந்திர சாட்டர்ஜி - ஆனந்த மடம்

    (b)

    G. சுப்ரமணியம் - விடிவெள்ளிக் கழகம்

    (c)

    மிண்டோ பிரபு - பல்கலைக்கழகச் சட்டம், 1904

    (d)

    தீவிர தேசியவாத மையம் - சென்னை

  8. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்  _______.

    (a)

    புலின் பிஹாரி தாஸ்

    (b)

    ஹோமச்சந்திர கானுங்கோ

    (c)

    ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்

    (d)

    குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

  9. ஒருவரது சொந்த நாடு என்பதின் பொருள் எதைக் குறிப்பது

    (a)

    சமத்துவம்

    (b)

    சுதந்திரம்

    (c)

    சுதேசி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  10. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
    பொருத்துக.
     

    1 ஆஷ் படுகொலை    I  நிவேதிதா
    2 குருமணி   II  வாஞ்சிநாதன்
    3 வ .உ.சி  III சுப்ரமணிய பாரதி
    4 சுதேச மித்திரன்  IV S .S  கலியா

     

    (a)

    I ,II ,III ,IV

    (b)

    IV ,II , I ,III

    (c)

    II ,I ,IV ,III

    (d)

    III , II ,IV ,I

  11. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

    (a)

    திலகர்

    (b)

    அன்னிபெசன்ட் 

    (c)

    பி.பி. வாடியா

    (d)

    எச்.எஸ். ஆல்காட்

  12. “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் _______.

    (a)

    லாலா லஜபதிராய்

    (b)

    வேலண்டைன் சிரோலி

    (c)

    திலகர்

    (d)

    அன்னிபெசண்ட்

  13. முதல் உலகப்போரில் துருக்கி தோற்றதும் அதன் பின் கையெழுத்தான உடன்படிக்கையின் பெயர் என்ன?

    (a)

    செவ்ரெஸ் உடன்படிக்கை 

    (b)

    நியூலி உடன்படிக்கை 

    (c)

    பாரிஸ் உடன்படிக்கை 

    (d)

    இவற்றில் எதுவும்இல்லை 

  14. நியூ இந்தியா என்ற பத்திரிக்கை எவ்வாறு வெளிவந்தது?

    (a)

    வார பத்திரிக்கை 

    (b)

    மாத பத்திரிக்கை 

    (c)

    ஆண்டுக்கு ஒரு முறை 

    (d)

    தினசரி 

  15. பின்வரும் கூற்றுக்களில் தவறானதை தேர்ந்தெடு?

    (a)

    1.காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கபடுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்றுதிரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைந்தன.

    (b)

    2.காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டங்களில் முதன்முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.

    (c)

    3.இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்தியடிகளின் போராட்டங்களை பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர்.

    (d)

    4.மதராஸில் அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் தோல்வி அடைந்தது.

  16. சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

    (a)

    சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.

    (b)

    சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.

    (c)

    அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை

    (d)

    அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.

  17. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

    (a)

    டிசம்பர் 31, 1929

    (b)

    மார்ச் 12, 1930

    (c)

    ஜனவரி 26, 1930

    (d)

    ஜனவரி 26, 1931

  18. பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

    (a)

    பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்

    (b)

    தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்

    (c)

    சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்

    (d)

    சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்

  19. கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
    காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

    (a)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  20. கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

    (a)

    ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்அசோசியேஷன்

    (b)

    வங்காள சபை 

    (c)

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    (d)

    இந்தியக் குடியரசு இராணுவம்

  21. பின்வருவனவற்றைப் பொருத்துக.

    (அ) கான்பூர் சதி வழக்கு - 1.அடிப்படைஉரிமைகள்
    (ஆ) மீரட் சதி வழக்கு - 2. சூரியா சென்
    (இ) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை  - 3. 1929
    (ஈ) இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு   4. 1924
    (a)
    1 2 3 4
    (b)
    2 3 4 1
    (c)
    4 1 2
    (d)
    3 2 1
  22. முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?

    (a)

    மதராஸ் – அரக்கோணம்

    (b)

    பம்பாய் - பூனா 

    (c)

    பம்பாய் - தானே 

    (d)

    கொல்கத்தா - ஹீக்ளி 

  23. கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு________.

    (a)

    1855

    (b)

    1866

    (c)

    1877

    (d)

    1888

  24. நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
    1.அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
    2.ஆரிய சமாஜம்
    3.அனைத்திந்திய இந்து மகா சபை
    4.பஞ்சாப் இந்து சபை

    (a)

    1, 2, 3, 4

    (b)

    2, 1, 4, 3

    (c)

    2, 4, 3, 1

    (d)

    4, 3, 2, 1

  25. எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

    (a)

    25 டிசம்பர், 1942

    (b)

    16 ஆகஸ்ட், 1946

    (c)

    21 மார்ச், 1937

    (d)

    22 டிசம்பர், 1939

  26. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) அமெரிக்கக் குடியரசுத் தலைவர்  - 1.டோஜா  
    (ஆ) சீனக் குடியரசுத் தலைவர் - 2. வின்ஸ்டன் சர்ச்சில்
    (இ) பிரிட்டிஷ் பிரதமர் - 3. ஷியாங் கே ஷேக்
    (ஈ) ஜப்பான் பிரதமர் - 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    1 4 3 2
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    1 3 2 4
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    4 3 2 1
    (d)
    அ  ஆ  இ  ஈ 
    4 2 3 1
  27. 1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மௌலானா அபுல்கலாம் ஆசாம்.

    (c)

    ராஜேந்திர பிரசாத்

    (d)

    வல்லபாய் படேல் 

  28. சரியான வரிசையில் அமைத்து விடையைத்தேர்வு செய்க.
    (i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
    (ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
    (iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
    (iv) இராஜாஜி திட்டம்

    (a)

    ii, i, iii, iv

    (b)

    i, iv, iii, ii

    (c)

    iii, iv, i,ii

    (d)

    iii, iv, ii, i

  29. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

    (அ ) ஜேவிபி குழு - 1. 1928
    (ஆ) சர் சிரில் ராட் கிளிஃ ப்  - 2.மாநில மறுசீரமைப்புஆணையம்
    (இ) பசல் அலி - 3. 1948
    (ஈ) நேரு குழு - 4.எல்லை வரையறை ஆணையம்
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    1 2 3 4
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    3 4 2 1
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    3 4 2 1
    (d)
    அ  ஆ  இ   ஈ 
    4 3 2 1
  30. பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

    (a)

    அமேதி

    (b)

    பம்பாய்

    (c)

    நாக்பூர் 

    (d)

    மகவ் 

  31. கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாண்பாடுகளையும் கொண்டிருந்தது.
    காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு காரணம் சரி.

  32. நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

    (a)

    1961

    (b)

    1972

    (c)

    1976

    (d)

    1978

  33. கூற்று: காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
    காரணம்: நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  34. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?

    (a)

    அரிஸ்டாட்டில்

    (b)

    பிளாட்டோ 

    (c)

    ரோஜர் பேக்கன்

    (d)

    லாண்ட்ஸ்டெய்னர்

  35. ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?

    (a)

    பெட்ரோ காப்ரல்

    (b)

    கொலம்பஸ்

    (c)

    ஹெர்னன் கார்ட்ஸ்

    (d)

    ஜேம்ஸ் குக்

  36. கூற்று:  ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பொறுத்து  கொள்ளமுடியாதச்  சட்டங்கள்  நீக்கப்பட வேண்டுமெனக்கோரினர்.
    காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

    (c)

    கூற்று  சரி, காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு, காரணம் சரி.

  37.  ______  தொடக்கத்தில்  செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.

    (a)

    மெக்சிகோ

    (b)

    பனாமா

    (c)

    ஹைட்டி

    (d)

    ஹவானா

  38. மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______  ஆண்டில் வெளியிட்டனர் .

    (a)

    1842

    (b)

    1848

    (c)

    1867

    (d)

    1871

  39. _______  இடையே ஏழு வாரப் போர் நடந்தது.

    (a)

    டென்மார்க் , பிரஷ்யா

    (b)

    பியட்மாண் ட்-சார்டினியா , ஆஸ்திரியா

    (c)

    பிரான்ஸ், பிரஷ்யா

    (d)

    ஆஸ்திரியா , பிரஷ்யா

  40. இங்கிலாந்து ______ ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.

    (a)

    1833

    (b)

    1836

    (c)

    1843

    (d)

    1858

  41. கூற்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகைஉற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன. 
    காரணம்: மிகைஉற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.   

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது 

    (b)

    கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  42. கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை?

    (a)

    பல்கேரிய 

    (b)

    ஆஸ்திரிய-ஹங்கேரி 

    (c)

    துருக்கி 

    (d)

    மான்டிநீக்ரோ 

  43. பாரிசை நெருங்கிக்கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்த பிரிஞ்சு அரசு ______ பகுதிக்கு நகர்ந்து சென்றது. 

    (a)

    மார்செல்லிஸ் 

    (b)

    போர்டியாக்ஸ் 

    (c)

    லியோன்ஸ் 

    (d)

    வெர்செய்ல்ஸ் 

  44. கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை
    காரணம்: நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  45. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ______ நாடு உருவாகியிருத்தது.

    (a)

    பிரான்ஸ் 

    (b)

    ஸ்பெயின் 

    (c)

    ஜெர்மனி

    (d)

    ஆஸ்திரியா

  46. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளின்படி ஜனவரி 1935இல் _______ பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முடிவானது.

    (a)

    சூடட்டன்லாந்து 

    (b)

    ரைன்லாந்து 

    (c)

    சார் 

    (d)

    அல்சேஸ் 

  47. அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆக்ஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் _______ ஆவார்.

    (a)

    மெக்ஆர்தர்

    (b)

    ஜசன்ஹோவர் 

    (c)

    ஜெனரல் டி  கால் 

    (d)

    ஜார்ஜ் மார்ஷல்

  48. ஸ்பானிய-அமெரிக்கப் போர் ______ சர்ச்சையை முன்னிறுத்தி 1898 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

    (a)

    கியூபா

    (b)

    பிலிப்பைன்ஸ் 

    (c)

    போர்டோ ரிக்கோ

    (d)

    படாவியா

  49. மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் _______.

    (a)

    ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

    (b)

    முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது

    (c)

    ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது

    (d)

    சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது

  50. ட்ரூமன் கோட்பாடு ________  பரிந்துரைத்தது.

    (a)

    கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி

    (b)

    காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது 

    (c)

    கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது

    (d)

    அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment