12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் -2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I


    50 x 1 = 50
  1. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண் மதிப்பு ______.

    (a)

    4 mC

    (b)

    8 mC

    (c)

    5 mC

    (d)

    7 mC

  2. மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

    (a)

    D < C < B < A

    (b)

    A < B = C < D

    (c)

    C < A = B < D

    (d)

    D > C > B > A

  3. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், \(\vec { E }\) = 10 x \( \hat { i } \) நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA  என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA இன் மதிப்பு _______.

    (a)

    10 V

    (b)

    – 20 V

    (c)

    +20 V

    (d)

    -10 V

  4. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு _____.

    (a)

    3 × 10-2 C

    (b)

    4 × 10-2 C

    (c)

    1 × 10-2 C

    (d)

    2 × 10-2 C

  5. எலக்ட்ரான் ஒன்றின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசையினை சமன் செய்ய தேவையான முன்புல மதிப்பு C நிறை மற்றும் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு முறையே 9.1 x 10-31 kg and 1.6 x 10-19______

    (a)

    -5.6 x 10-11 N/C

    (b)

    -4.8 x 10-15 N/C

    (c)

    -1.6 x 10-19 N/C

    (d)

    -3.2 x 10-19 N/C

  6. ABC என்ற சமபக்க முக்கோணம் ஒன்றின் மூளைகளில் +q என்ற மின்னூட்டம் வைக்கப்பட்டால் முக்கோணத்தின் மையத்தில் மின்புலம்______

    (a)

    \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)

    (b)

    \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { r }^{ 2 } } \)

    (c)

    \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { 3q }{ { r }^{ 2 } } \)

    (d)

    சுழி

  7. ஒரு பொருளானது நேர்மின்னூட்டம் பெற்றிருக்குமேயானால் அது குறிப்பது____

    (a)

    இவை நேர்மின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கும்

    (b)

    அவை இருமின்னூட்ட தன்மையும் பெற்றிருக்கும், ஆனால் நேர் மின்னூட்ட தன்மை அதிகமாக இருக்கும்

    (c)

    அவை சமமான மின்னூட்ட தன்மை கொண்டிருக்கும். ஆனால் நேர் மின்னூட்டம் வெளிப்புறத்தில் அமையும்

    (d)

    எதிர் மின்னூட்டம் சிறிய அளவில் விலகி இருக்கும் 

  8. உராய்வு ஒன்றின் காரணமாக பொருள் ஒன்று நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் பெற்றால் அவற்றில் இடம் பெயரும் எலக்ட்ரான்கள்_________

    (a)

    இணைதிறன் எலக்ட்ரான்கள்

    (b)

    உள்கூட்டின் இடம்பெயரும் எலக்ட்ரான்

    (c)

    a) மற்றும் b)

    (d)

    இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

  9. α - துகள் ஒன்றினை உள்ளடக்கிய மூடிய பரப்பின் மின்புலப்பாயம்______

    (a)

    \(\frac { 2e }{ { \varepsilon }_{ o } } \)

    (b)

    \(\frac { 2e }{ { \varepsilon }_{ o } } \)

    (c)

    \({ e\varepsilon }_{ o }\)

    (d)

    \(\frac { { e\varepsilon }_{ o } }{ 4 } \)

  10. Q கூலும் மின்னூட்டத்தினை X cm, தொலைவு நகர்த்த செய்யும் வேலை WJ எனில் மின்னழுத்த வேறுபாடு_____

    (a)

    \(\frac { W }{ Q } V\)

    (b)

    QWV

    (c)

    \(\frac { Q }{ W } V\)

    (d)

    \(\frac { { Q }^{ 2 } }{ W } V\)

  11. மின்தேக்கி ஒன்றின் ஆற்றல்________ 

    (a)

    நிலை மின்னாற்றல்

    (b)

    காந்த ஆற்றல்

    (c)

    ஒலி ஆற்றல்

    (d)

    வெப்ப ஆற்றல்

  12. புறக்கணிக்கத்தக்க அலுமினிய படலத்தால் ஆன மெல்லிய தகடு ஒன்றினை இணைத்தட்டு மின்தேக்கியில் நடுவே கொண்டு வருவதால் அவற்றின் மின்தேக்குத்திறன்_____ 

    (a)

    குறையும்

    (b)

    மாறாது

    (c)

    முடிவிலா மதிப்பை பெறும்

    (d)

    உயரும்

  13. விசைக்கும், மின்னூட்டங்களின் இடைவெளி தொலைவுக்கும் உள்ள தொடர்பை எந்த வரைபடம் சரியாக குறிக்கிறது?

    (a)

    (b)

    (c)

    (d)

  14. ஒவ்வொன்றும் +q மதிப்புடைய மூன்று மின்னூட்டங்கள் a நீளமுடைய ஒரு சமபக்க முக்கோணத்தின் மூலைகளில் உள்ளன. அவற்றின் சுற்றளவில் மின்புலம் _______ 

    (a)

    \(\cfrac { q }{ 4\pi { \varepsilon }_{ 0 }\alpha } \)

    (b)

    \(\cfrac { q }{ 4\pi { \varepsilon }_{ 0 }{ \alpha }^{ 2 } } \)

    (c)

    \(\cfrac { q }{ { a }^{ 2 } } \)

    (d)

    சுழி 

  15. பின்வரும் மின்சுற்றில் A மற்றும் Bக்கு இடைவெளியில் உள்ள பயனுறு மின்தேக்குத்திறன் ______ 

    (a)

    3/4C 

    (b)

    4/3C 

    (c)

    1/3C 

    (d)

    1/4C 

  16. பின்வரும் அமைப்பில் உள்ள மின்தேக்கிகளின் பயனுறு மின் தேக்குத்திறன் ______ 

    (a)

    \(2\mu F\)

    (b)

    \(4\mu F\)

    (c)

    \(8\mu F\)

    (d)

    \(6\mu F\)

  17. \(6\mu F\) மின்தேக்குத்திறன் உள்ள இரு மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ள போது, பயனுறு மின்தேக்குத்திறன் ______ 

    (a)

    \(3\mu F\)

    (b)

    \(12\mu F\)

    (c)

    \(6\mu f\)

    (d)

    \(24\mu F\)

  18. 0.5 மீ2குறுக்கு வெட்டு பரப்பும், 10 சுற்றுகளும் கொண்ட சுருள் ஒன்று அதன் தளம் 100N/C மதிப்புடைய சீரான மின்புலத்திற்கு இணையாக உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளது எனில், பரப்பின் வழியே பாயும் மின்பாயம் _____

    (a)

    100Vm 

    (b)

    500Vm 

    (c)

    20Vm 

    (d)

    சுழி 

  19. ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்______ .

    (a)

    400 W

    (b)

    2 W

    (c)

    480 W

    (d)

    240 W

  20. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

    (a)

    100 k Ω

    (b)

    10 k Ω

    (c)

    1k Ω

    (d)

    1000 k Ω

  21. ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது____ .

    (a)

    இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

    (b)

    இரண்டின் மின்தடையும் குறையும்

    (c)

    தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்

    (d)

    தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்

  22. மின்னணுவியலில் அதிகமாக பொதுவான பயன்படுத்தப்படும் கடத்தி எது?

    (a)

    தாமிரம் 

    (b)

    அலுமினியம் 

    (c)

    தங்கம் 

    (d)

    வெள்ளி 

  23. ஒரு குறுக்குச் சுற்று (short circuit) என்பது ________ 

    (a)

    மின்தடை இல்லை 

    (b)

    மின்கடத்துத் திறன் [conductance] இல்லை 

    (c)

    குறைவான மின்னோட்டம் 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  24. வீட்ஸ்டோன் சுற்றின் சமநிலைக்கான நிபந்தனை ஆகும்_____

    (a)

    \(\frac { P }{ Q } =\frac { S }{ R } \)

    (b)

    \(\frac { P }{ Q } =RS\)

    (c)

    \(\frac { P }{ Q } =\frac { R }{ S } \)

    (d)

    \(\frac { Q }{P } =\frac { R }{ S } \)

  25. மின்னோட்டம் ஒரு ______ அளவாகும்.

    (a)

    வெக்டர் 

    (b)

    ஸ்கேலார் 

    (c)

    இயற்பியல் 

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை 

  26. பின்வரும் I-V வரை கோடுகளில் எது டையோடிற்கான வரைகோடாகும்?

    (a)

    (b)

    (c)

    (d)

  27. இரு கம்பியின் நீளம் சமம், ஒன்றின் பரப்பு மற்றதின் பரப்பை போல் 9 மடங்கு.மெல்லிய கம்பியின் மின்தடை \(300\Omega \) எனில் தடித்த கம்பியின் மின்தடை ______

    (a)

    \(66.6\Omega \)

    (b)

    \(33.3\Omega \)

    (c)

    \(100\Omega \)

    (d)

    \(600\Omega \)

  28. வீட்ஸ்டோன் மின்சுற்று மற்ற கருவிகளைவிட நுட்பமானது ஏனென்றால் அது ____

    (a)

    கிர்க்காஃப் விதியின் அடிப்படையில் இயங்கும்  

    (b)

    சுழிவிலக்க முறையில் இயங்கும் 

    (c)

    நான்கு மின்தடைகள் கொண்டது 

    (d)

    ஓம்விதியின் அடிப்படையில் இயங்கும் 

  29. எதன் மின்தடை எண் அதிகம்?

    (a)

    தாமிரம் 

    (b)

    அலுமினியம் 

    (c)

    இரும்பு 

    (d)

    வெள்ளி 

  30. பாதரசத்தின் மின்தடை _____ வெப்பநிலையில் சுழியாகும்.

    (a)

    \(0^{ 0 }C\)

    (b)

    \(-4.2K\)

    (c)

    \(0K\)

    (d)

    \(4.2K\)

  31. \(2\Omega \) மின்தடையுடைய இருமின்தடைகள் பக்க இணைப்பில் உள்ளபோது பயனுறு மின்தடை ______

    (a)

    \(2\Omega \)

    (b)

    \(\\ 1\Omega \)

    (c)

    \(4\Omega \)

    (d)

    \(0.5\Omega \)

  32. சமநீளம் கொண்ட இருகம்பிகளில், ஒன்றின் தடிமன் மற்றதைப்போல் இருமடங்கு எனில், அவற்றின் மின்தடைகளின் தகவு _____

    (a)

    1:2

    (b)

    1:4

    (c)

    1:8

    (d)

    1:16

  33. மின்தடையின் பரிமாணம் ____

    (a)

    \({ ML }^{ 2 }{ T }^{ -3 }{ A }^{ -2 }\)

    (b)

    \({ ML }^{ 3 }{ T }^{ -1 }{ A }^{ -1 }\)

    (c)

    \({ ML }^{ 2 }{ T }^{ -2 }{ A }^{ -3 }\)

    (d)

    \({ ML }^{ 2 }{ T }^{ -1 }{ A }^{ -1 }\)

  34. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A மற்றும் B க்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடு 

    (a)

    3V 

    (b)

    +3V 

    (c)

    +6V 

    (d)

    +9V 

  35. N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக \(\frac {R }{2}\) தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் ______

    (a)

    \(\frac { 8{ N\mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

    (b)

    \(\frac { 8N{ \mu }_{ 0 }I }{ { 5 }^{ 3/2 }R } \)

    (c)

    \(\frac { { 8N\mu }_{ 0 }I }{ 5R } \)

    (d)

    \(\frac { 4N{ \mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)

  36. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

    (a)

    30˚

    (b)

    45˚

    (c)

    60˚

    (d)

    90˚

  37. R ஆரமும், σ பரப்பு மின்னூட்ட அடர்த்தியும் கொண்ட மின்காப்புப்பெற்ற தட்டு அதன் பரப்பின் மீது அதிகப்படியான மின்னூட்டங்களைப் பெற்றுள்ளது. தட்டின் பரப்பிற்கு செங்குத்தாக உள்ள அச்சைப்பொறுத்து ω என்ற கோணதிசைவேகத்துடன் இது சுற்றுகிறது. சுழலும் அச்சுக்கு செங்குத்தான திசையில் செயல்படும் B வலிமை கொண்ட காந்தப்புலத்திற்கு நடுவே இத்தகடு சுழன்றால், அதன் மீது செயல்படும் திருப்புத்திறனின் எண்மதிப்பு என்ன?

    (a)

    \(\frac {1}{4}\)σωπBR

    (b)

    \(\frac {1}{4}\)σωπBR2

    (c)

    \(\frac {1}{4}\)σωπBR3

    (d)

    \(\frac {1}{4}\)σωπBR4

  38. t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2 − 50t + 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது______.

    (a)

    −190 V

    (b)

    −10 V

    (c)

    10 V

    (d)

    190 V

  39. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும்  மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மறுபாடானது ______.
     

    (a)

    (b)

    (c)

    (d)

  40. ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi t +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)_____ .

    (a)

    \(\frac 14\)

    (b)

    \(\frac {\sqrt 3}4\)

    (c)

    \(\frac 12\)

    (d)

    \(\frac 18\)

  41. \(\vec v = v\vec i\)என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y - அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _________ இருக்கும்.

    (a)

    –y திசையில்

    (b)

    –x திசையில்

    (c)

    +z திசையில்

    (d)

    –z திசையில்

  42. குவியத்தூரம் f கொண்ட குவிஆடியின் முன்பாகப் பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பம் கிடைக்க வேண்டுமெனில், குவிஆடியிலிருந்து பொருளை வைக்க வேண்டிய பெரும மற்றும் சிறுமத் தொலைவுகள் யாவை?

    (a)

    2f மற்றும் c

    (b)

    c மற்றும் ∞

    (c)

    f மற்றும் O

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  43. 330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55ev வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது (h = 6.6 × 10-34Js எனக் கொள்க)_____.

    (a)

    < 2.75 ×10-9

    (b)

    ≥ 2.75 × 10-9

    (c)

    ≤ 2.75 × 10-12 m 

    (d)

    < 2.75 × 10-10 m 

  44. Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 விலிருந்து n = 1 க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்______.

    (a)

    1:2:3

    (b)

    1:4:9

    (c)

    3:2:1

    (d)

    4:9:36

  45. கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B-இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்: _____.

    (a)

    A மற்றும் Bன் தொடக்கச் சிதைவு வீதம் சமம்

    (b)

    A மற்றும் B ன் சிதைவு வீதம் எப்போதும் சமம்

    (c)

    A வைவிட B வேகமாக சிதைவடையும்

    (d)

    B யை விட A வேகமாக சிதைவடையும்

  46. பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்.

    (a)

    (b)

    (c)

    (d)

  47. கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது?

    (a)

    மயிலிறகு 

    (b)

    மயில் அழகு 

    (c)

    மணல் துகள் 

    (d)

    திமிங்கலத்தின் தோல் 

  48. மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கைப் பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது.

    (a)

    தாமரை இலை 

    (b)

    மார்ஃபோ பட்டாம்பூச்சி  

    (c)

    கிளிமீன் 

    (d)

    மயிலிறகு 

  49. ஈர்ப்பு அலைகளை  கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.

    (a)

    கான்ராட்  ரோன்ட்ஜென் 

    (b)

    மேரி கியூரி

    (c)

    ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் 

    (d)

    எட்வார்டு பர்செல்

  50. நிகோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி________ .

    (a)

    பகுதி தளவிளைவு அடையும்

    (b)

    தளவிளைவு அடையாது

    (c)

    முழுவதும் தளவிளைவு அடையும்

    (d)

    நீள்வட்டமாகத் தளவிளைவு அடையும்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் -2021(பொதுத்தேர்வு)-12th Standard Tamil Medium Physics Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment