12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் -2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி-I

    50 x 1 = 50
  1. மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

    (a)

    D < C < B < A

    (b)

    A < B = C < D

    (c)

    C < A = B < D

    (d)

    D > C > B > A

  2. R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  3. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

    (a)

    மின் தேக்குத்திறன்

    (b)

    மின்துகள்

    (c)

    மின்னழுத்த வேறுபாடு

    (d)

    ஆற்றல் அடர்த்தி

  4. மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

    (a)

    1μF

    (b)

    2 μF

    (c)

    3 μF

    (d)

    \(\cfrac { 1 }{ 4 } \mu F\)

  5. மின்னூட்டம் என்பது திடப்பொருள் ஒன்றின் நிறை சார்ந்த தன்மையினால் உருவாக்கும் பண்பு ________

    (a)

    மின்விளைவு மட்டும்

    (b)

    காந்த விளைவு மட்டும்

    (c)

    a) மற்றும் b)

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  6. ஒரு பொருளானது நேர்மின்னூட்டம் பெற்றிருக்குமேயானால் அது குறிப்பது____

    (a)

    இவை நேர்மின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கும்

    (b)

    அவை இருமின்னூட்ட தன்மையும் பெற்றிருக்கும், ஆனால் நேர் மின்னூட்ட தன்மை அதிகமாக இருக்கும்

    (c)

    அவை சமமான மின்னூட்ட தன்மை கொண்டிருக்கும். ஆனால் நேர் மின்னூட்டம் வெளிப்புறத்தில் அமையும்

    (d)

    எதிர் மின்னூட்டம் சிறிய அளவில் விலகி இருக்கும் 

  7. மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு தாங்கக்கூடிய பெரும மின்புலம்_________

    (a)

    விடுதிறன்

    (b)

    மின்காப்பு மாறிலி

    (c)

    மின் மாறுபடும் தன்மை

    (d)

    மின்காப்பு வலிமை

  8. மின்தேக்கியின் நடுவே காற்றினை மாற்றி K மின்காப்பு மாறிலி கொண்ட மின்காப்பு பொருளை நுழைக்கும் பொழுது அவற்றின் தேங்கும் திறன்_____ 

    (a)

    K மடங்கு குறையும்

    (b)

    K மடங்கு அதிகரிக்கும்

    (c)

    K2 மடங்கு அதிகரிக்கும்

    (d)

    மாறாது

  9. எந்தச் சோடி இயற்பியல் அளவுகள் சரியானவை?

    (a)

    மின்விசை மற்றும் மின்னாற்றல் 

    (b)

    மின்புலம் மற்றும் மின்னூட்டம் 

    (c)

    மின்னழுத்தம் மற்றும் வேலை 

    (d)

    மின்னழுத்தம் மற்றும் திருப்புத்திறன் 

  10. \(10\mu F\) மின்தேக்கி 200 V மின் மூலத்தினால் முழுமையாக மின்னேற்றம் பெற்றது எனில், மின்தேக்கியில் சேமிக்கப்பட்ட மின் ஆற்றல் ______ 

    (a)

    103

    (b)

    100 J 

    (c)

    10-4

    (d)

    10-3

  11. ஒரு பாட்டரியின் முனைகளில் மின்னழுத்த வேறுபாடு, அதன் மின் இயக்கு விசையை விட அதிகம் எனில், அது _____ மின் இணைப்பில் இருக்கும்.

    (a)

    அதிக, தொடர் 

    (b)

    அதிக, பக்க 

    (c)

    குறைந்த, பக்க 

    (d)

    குறைந்த, தொடர் 

  12. மின்னூட்டமுள்ள உலோகப்பந்து எந்தப் புள்ளிகளில் சுழி மின்புலத்தை உருவாக்கும்?

    (a)

    கோளத்தின் வெளியே 

    (b)

    கோளத்தின் உள்ளே 

    (c)

    கோளத்தின் பரப்பில் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  13. முடிவில்லா தொலைவில் நிலைமின்னியல் அழுத்தம் ______ 

    (a)

    முடிவிலி 

    (b)

    பெருமம் 

    (c)

    சிறுமம் 

    (d)

    சுழி 

  14. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் - பச்சை - ஊதா - தங்கம்

    (b)

    மஞ்சள் - ஊதா - ஆரஞ்சு - வெள்ளி

    (c)

    ஊதா - மஞ்சள் - ஆரஞ்சு - வெள்ளி

    (d)

    பச்சை - ஆரஞ்சு - ஊதா - தங்கம்

  15. பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

    (a)

    100 k Ω

    (b)

    10 k Ω

    (c)

    1k Ω

    (d)

    1000 k Ω

  16. 230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1, அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் P2 எனில் \(\frac { { P }_{ 2 } }{ { P }_{ 1 } } \) எனும் விகிதம்______ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  17. ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது____ .

    (a)

    இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

    (b)

    இரண்டின் மின்தடையும் குறையும்

    (c)

    தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்

    (d)

    தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்

  18. ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு ____ .

    (a)

    நேர்க்கோடு

    (b)

    பரவளையம்

    (c)

    வட்டம்

    (d)

    நீள்வட்டம்

  19. மின்தடையானது பொருள்களின் _______ எதிர்ப்பை அளவிடும்.

    (a)

    மின்னழுத்த வேறுபாடு 

    (b)

    மின்னோட்டம் 

    (c)

    மின் விசை 

    (d)

    இயக்கத்தில் உள்ள புரோட்டான்கள் 

  20. மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.

    (a)

    எதிரான 

    (b)

    தலைகீழ் 

    (c)

    சமமான 

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை 

  21. மின்னோட்டம் ஒரு ______ அளவாகும்.

    (a)

    வெக்டர் 

    (b)

    ஸ்கேலார் 

    (c)

    இயற்பியல் 

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை 

  22. \(\xi \) மின் இயக்கு விசை கொண்ட n மின்கலன்கள் பக்க இணைப்பில் உள்ளபோது பயனுறு மின்னியக்கு விசை ______

    (a)

    \(n\varepsilon \)

    (b)

    \({ n }^{ 2 }\varepsilon \)

    (c)

    \(\cfrac { \varepsilon }{ n } \)

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை 

  23. கடத்தி ஒன்றின் மின்தடை எண் எதனைச் சார்ந்து இருக்கும் என்பது பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரி.
    (i) கம்பிப் பொருள் 
    (ii) கம்பியின் நீளம் 
    (iii) கம்பியின் வெப்பநிலை 
    (iv) கம்பியின் விட்டம் 

    (a)

    (i)&(ii)

    (b)

    (ii)&(iii)

    (c)

    i &iii 

    (d)

    i &iv 

  24. \({ \rho }_{ 1 },\rho _{ 2 }\) மற்றும் \({ \rho }_{ 3 }\) மின்கடத்துத்திறன் கொண்ட மின்கடத்திகள் தொடரிணைப்பில் உள்ளபோது அதன் பயனுறு திறன் ____

    (a)

    \( { \rho }_{ 1 }+{ \rho }_{ 2 }+{ \rho }_{ 3 }\)

    (b)

    \(\cfrac { { \rho }_{ 1 }{ \rho }_{ 2 }{ \rho }_{ 3 } }{ { \rho }_{ 1 }+{ \rho }_{ 2 }+{ \rho }_{ 3 } } \)

    (c)

    \(\cfrac { { \rho }_{ 1 }{ \rho }_{ 2 }+{ \rho }_{ 3 }{ \rho }_{ 1 }+{ \rho }_{ 2 }{ \rho }_{ 3 } }{ { \rho }_{ 1 }{ \rho }_{ 2 }{ \rho }_{ 3 } } \)

    (d)

    \(\cfrac { { \rho }_{ 1 }{ \rho }_{ 2 }{ \rho }_{ 3 } }{ { \rho }_{ 1 }{ \rho }_{ 2 }+{ \rho }_{ 2 }{ \rho }_{ 3 }+{ \rho }_{ 3 }{ \rho }_{ 1 } } \)

  25. மீக்கடத்திகள் ________

    (a)

    மின்தடை சுழி 

    (b)

    மின்னோட்டம் பெருமம் 

    (c)

    சுழி இழப்பு 

    (d)

    அனைத்தும் 

  26. கருத்து : ஒரு சாதாரண பேட்டரி மின்சுற்றில் குறைவான மின்னழுத்தம் உடைய புள்ளி நேர்மின்வாய் முனையாகும்.
    காரணம் : மின்னோட்டம் உயர்வான மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தப்புள்ளி நோக்கி செல்வதுபோல் மின்சுற்றில் மின்னோட்டம் எதிர்மின் வாயிலிருந்து நேர்மின்வாய் நோக்கி செல்லும்.
    கருத்து சரி விளக்கம் சரி
    கருத்து தவறு விளக்கம் தவறு  
    கருத்து சரி விளக்கம் சரி 
    கருத்து தவறு   விளக்கம் சரி

    (a)

    கருத்து சரி விளக்கம் சரி 

    (b)

    கருத்து தவறு விளக்கம் தவறு 

    (c)

    கருத்து சரி விளக்கம் சாரி 

    (d)

    கருத்து சரி விளக்கம் சரி 

  27. ஜூல் வெப்ப விளைவில், உருவான வெப்பம் ________

    (a)

    \(H=VIt\)

    (b)

    \(H={ I }^{ 2 }Rt\)

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    ஏதுமில்லை 

  28. \(V=230sin(314t)\) மாறுதிசை மூலத்தின் RMS மின்னழுத்த வேறுபாடு மற்றும் அதிர்வெண் _____

    (a)

    \(162.6,50Hz\)

    (b)

    \(230V,50Hz\)

    (c)

    \(230V,60Hz\)

    (d)

    \(162.6V,25H\)

  29. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு_____.

    (a)

    \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

    (b)

    \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

    (c)

    \(\sqrt { 2 } \beta Il\)

    (d)

    \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

  30. l நீளமும் Pm திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு ______.

    (a)

    Pm

    (b)

    \(\frac {3}{π}\)Pm

    (c)

    \(\frac {2}{π}\)Pm

    (d)

    \(\frac12\)Pm

  31. \(\vec { { p }_{ m } } =\left(-0.5\hat { i } +0.4\hat { j } \right) \) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec B\) = \(0.2\ \hat {i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு _____.

    (a)

    -0.1 J

    (b)

    -0.8 J

    (c)

    0.1 J

    (d)

    0.8 J

  32. q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

    (a)

    \(\frac {q }{m }\)

    (b)

    \(\frac {2q }{m }\)

    (c)

    \(\frac {q }{2m }\)

    (d)

    \(\frac {q }{4m }\)

  33. t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2 − 50t + 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது______.

    (a)

    −190 V

    (b)

    −10 V

    (c)

    10 V

    (d)

    190 V

  34. மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண் _______.

    (a)

    0.2 H

    (b)

    0.4 H

    (c)

    0.8 H

    (d)

    0.1 H

  35. ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு______ 

    (a)

    600 V

    (b)

    4000 V

    (c)

    400 V

    (d)

    1 V

  36. ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .

    (a)

    0.76 W

    (b)

    0.89 W

    (c)

    0.46 W

    (d)

    0.67 W

  37. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

    (a)

    மைக்ரோ அலை

    (b)

    காமாக்கதிர் வீச்சு

    (c)

    X -கதிர்கள்

    (d)

    அகச்சிவப்புக்கதிர்கள்

  38. மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?

    (a)

    குறுக்கலை

    (b)

    இயந்திர அலைகள்

    (c)

    நெட்டலை

    (d)

    முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன

  39. பிரான்ஹோபர் வரிகள் எவ்வகை நிறமாலைக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    வரி வெளியிடு

    (b)

    வரி உட்கவர்

    (c)

    பட்டை வெளியிடு 

    (d)

    பட்டை உட்கவர்

  40. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

    (a)

    ஒளி எதிரொளிப்பு

    (b)

    முழு அ்க எதிரொளிப்பு

    (c)

    ஒளி விலகல்

    (d)

    தளவிளைவு

  41. தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm. மேலும், அதன் ஒளிவிலகல்எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்_____.

    (a)

    5 cm

    (b)

    10 cm

    (c)

    15 cm

    (d)

    20 cm

  42. ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்த λ மற்றும் \(\frac {λ}{2}\) அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால்  ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல்  நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின், உலகோப் பரப்பின்  வெளியேற்று ஆற்றலானது _____

    (a)

    \(\frac{h}{λc}\)

    (b)

    \(\frac{2hc}{λ}\)

    (c)

    \(\frac{hc}{3λ}\)

    (d)

    \(\frac{hc}{2λ}\)

  43. ஒளிமின் உமிழ்வு நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட உலோகத்தின் பயன்தொடக்க அதிர்வெண்ணை விட 4 மடங்கு  அதிர்வெண் கொண்ட கதிர்வீச்சு அந்த உலோகப்பரப்பில் படும்போது, வெளிப்படும் எலக்ட்ரானின் பெரும  திசைவேகமானது _____

    (a)

    \(\sqrt \frac {hν_ {0}}{m }\)

    (b)

    \(\sqrt \frac {6hν_ {0}}{m }\)

    (c)

    \(2\sqrt \frac {hν_ {0}}{m }\)

    (d)

    \(\sqrt \frac {hν_ {0}}{2m }\)

  44. வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது ________ உமிழ்வு  எனப்படும்

    (a)

    ஒளி மின் 

    (b)

    புல 

    (c)

    வெப்ப அயனி

    (d)

    இரண்டாம்  நிலை 

  45. Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 விலிருந்து n = 1 க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்______.

    (a)

    1:2:3

    (b)

    1:4:9

    (c)

    3:2:1

    (d)

    4:9:36

  46. ஒரு புரோட்டான் மற்றும் ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் V = V0In\((\frac{r}{r_0})\) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. (இங்கு r0 ஒரு மாறிலி) மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால், முதன்மை குவாண்டம் எண் nஐப் பொறுத்து nவது சுற்றுப்பாதை (rn) இன் மாறுபாட்டின் தன்மை______.

    (a)

    \({ r }_{ n }∝\frac { 1 }{ n } \)

    (b)

    rn ∝ n

    (c)

    \({ r }_{ n }∝\frac { 1 }{ n^2 } \)

    (d)

    rn ∝ n2

  47. கதிரியக்கத் தனிமம் A இன் அரை ஆயுட்காலம் மற்றொரு கதிரியக்கத் தனிமம் B-இன் சராசரி ஆயுட்காலத்திற்கு சமமாகும். தொடக்கத்தில் அவ்விரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்: _____.

    (a)

    A மற்றும் Bன் தொடக்கச் சிதைவு வீதம் சமம்

    (b)

    A மற்றும் B ன் சிதைவு வீதம் எப்போதும் சமம்

    (c)

    A வைவிட B வேகமாக சிதைவடையும்

    (d)

    B யை விட A வேகமாக சிதைவடையும்

  48. சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

    (a)

    விரவல்

    (b)

    மறு இணைப்பு 

    (c)

    ஒளி வோல்டா செயல்பாடு

    (d)

    ஊர்தியின் பாய்வு

  49. ‘ஸ்கி மெழுகு’ என்பது நானோ பொருளின்  பயன்பாடு ஆகும். அது பயன்படும் துறை______.

    (a)

    மருத்துவம்

    (b)

    ஜவுளி

    (c)

    விளையாட்டு

    (d)

    வாகனத் தொழிற்சாலை

  50. கண்ணாடி தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால், கண்ணாடியின் ஒளிவிலகல் எவ்வளவு?

    (a)

    \(\sqrt { 3 } \)

    (b)

    \(\frac { 3 }{ 2 } \)

    (c)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (d)

    2

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் -2021(பொதுத்தேர்வு)

Write your Comment