பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 102

    பகுதி I

    34 x 3 = 102
  1. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  2. டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் 1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    ரொக்கம் 43,000 29,000
    சரக்கிருப்பு 1,20,000 1,30,000
    பற்பல கடனாளிகள் 84,000 1,10,000
    பற்பல கடனீந்தோர் 1,05,000 1,02,000
    கடன் 25,000 20,000
    வணிக வளாகம் 2,50,000 2,50,000
    அறைகலன் 33,000 45,000

    அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ரூ. 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ரூ. 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.

  3. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
    2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
    அவ்வாண்டின் இலாபம் 8,000
    அவ்வாண்டில் எடுப்புகள் ?
  4. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 2,50,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 15,000
    2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 உள் திருப்பம் 50,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 7,25,000 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 2,40,000
    வாராக்கடன் 30,000 ரொக்க விற்பனை 3,15,000
  5. கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்

    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   அறைகலன் வாங்கியது 10,000
    கைரொக்கம் 11,000 வாடகை  2,800
    பங்காதாயம் பெற்றது 27,600 செயலர் மதிப்பூதியம் 15,000
    பழைய செய்தித்தாள் விற்றது 3,000 தபால் செலவுகள்  1,700
    உறுப்பினர் சந்தா 31,000 பொதுச் செலவுகள் 4,350
    பாதுகாப்பு பெட்டக வாடகை 8,000 அச்சு மற்றும் எழுதுபொருள்கள்  45,000
    முதலீடுகள் மீதான வட்டி 1,250 தணிக்கைக் கட்டணம் 5,000
    அறைகலன் விற்றது 5,000 இறுதி இருப்பு  
    (ஏட்டு மதிப்பு ரூ4,400)   கைரொக்கம்  3,000
      86,850   86,850
  6. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்றால் என்ன?

  7. கீழ்க்காணும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு மற்றும் கூடுதல் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்படவேண்டிய சந்தாத் தொகையினைக் கணக்கிடவும்.

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ
    சந்தா        
    2017 28,000      
    2018 1,72,000      
    2019 12,000 2,12,000    
             

    கூடுதல் தகவல்கள்: 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ8,000.

  8. பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும் 

      ரூ
    1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு 16,000
    அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் 84,000
    31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள்  10,000
  9. தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:   நிலைச் சொத்துகள் 30,000
    சுபா 15,000 நடப்புச் சொத்துகள் 20,000
    சுதா 20,000    
    நடப்புப் பொறுப்புகள் 15,000    
      50,000   50,000

    அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.

  10. அருள் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 3,000
    ஜுன் 1 3,000
    செப்டம்பர் 1 3,000
    டிசம்பர் 1 3,000

    எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

  11. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.

  12. இராஜன் மற்றும் தேவன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்..

    2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     பல்வகைச் சொத்துகள் 2,20,000
    இராஜன் 1,00,000      
    தேவன் 80,000 1,80,000    
    இலாபநட்டப் பகிர்வு கணக்கு   40,000    
        2,20,000   2,20,000

     2018, ஏப்ரல் 1 அன்று இராஜன் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000 மற்றும் 2018, செப்டம்பர் 1 அன்று தேவன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.30,000. அவ்வாண்டின் எடுப்புகள் முறையே இராஜன் ரூ.20,000, தேவன் ரூ.10,000 ஆகும். அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.70,000.

  13. கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
    (i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
    (ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
    (iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்

  14. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014:  ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  15. புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.

    விவரம் 2015 2016 2017 2018
    இலாபம் (ரூ) 20,000 22,000 24,000 28,000
    நிறை 1 2 3 4

    நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  16. உயர் இலாப முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  17. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
    (ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
    (iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
    (iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  18. இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
    (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
    (ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
    (இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.

  19. சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
    (i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
    (ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது

  20. ஹரி, மாதவன் மற்றும் கேசவன் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2017, ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4:3:2:1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
    (அ) வளாகத்தின் மதிப்பு ரூ.60,000 அதிகரிக்கப்பட்டது
    (ஆ) சரக்கிருப்பு மீது ரூ.5,000, அறைகலன் மீது ரூ.2,000, இயந்திரம் மீது ரூ.2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
    (இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ.500 உருவாக்கப்பட வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும்.

  21. வருண் மற்றும் பாரத் இருவரும் கூட்டாளிகள். அவர்களின் இலாப நட்டம் விகிதம் 5:4 ஆகும். அவர்கள் தாமு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். தாமு செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.15,000 என மதிப்பிடப்பட்டது. அதில், அவர் ரூ.10,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  22. ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும் 
    ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
    iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  23. இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    (ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    (இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது

  24. வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?

  25. வினோத், கார்த்தி மற்றும் பிரணவ் என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று பிரணவ் என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.
    (i) நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பை ரூ.18,000 அதிகரிக்க வேண்டும்.
    (ii) இயந்திரத்தின் மதிப்பை ரூ.15,000 குறைக்க வேண்டும்.
    (iii) கொடுபட வேண்டியச் செலவுகளுக்கு ரூ.8,000 ஒதுக்கு உருவாக்கவேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  26. இராணி, ஜெயா மற்றும் ரதி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று ரதி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு:
    2014: ரூ.10,000; 2015: ரூ.20,000; 2016: ரூ.18,000 மற்றும் 2017: ரூ.32,000 2018 ஆம் ஆண்டில் கூட்டாளி விலகல் நாள் வரையிலான இலாபத்தில் ரதிக்குரிய இலாபப் பங்கினை கீழ்க்கண்ட நிலைகளில் தயாரிக்கவும்.
    (i) இலாபம் முந்தைய ஆண்டுகளின் இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
    (ii) இலாபம் கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
    மேலும் மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  27. மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  28. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  29. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 3,00,000
    இதர வருமானம் 25,000 75,000
    செலவுகள் 2,50,000 1,50,000
    வருமான வரி % 40 40
  30. நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்

  31. சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000
    அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000
    அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000
    அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000
    உள்தூக்குக்கூலி 10,000
  32. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  33. சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  34. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Model 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment