மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 114

    பகுதி I

    38 x 3 = 114
  1. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  2. 2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்கம் 5,000 கடனாளிகள் 16,000
    சரக்கிருப்பு 18,000 கடனீந்தோர் 9,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 7,000 வங்கி ரொக்கம் 24,000
    அறைகலன் 3,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
    நிலம் மற்றும் கட்டடங்கள் 30,000    

    அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.

  3. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,50,000
    2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 40,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 10,000
    விற்பனைத் திருப்பம் 40,000
    2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 1,30,000
    ரொக்க விற்பனை 2,00,000
  4. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

    விவரம் ரூ.
    31.3.2018 அன்று இறுதி முதல் 80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 15,000
    01.4.2017 அன்று தொடக்க முதல் ?
    31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000
  5. 2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வங்கி மேல்வரைப்பற்று 50,000 சரக்கிருப்பு 1,60,000
    கடனாளிகள் 1,80,000 கடனீந்தோர் 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,40,000
    கணினி 30,000 கைரொக்கம் 60,000
    இயந்திரம் 3,00,000    

    அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  6. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 2,50,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 15,000
    2018, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 உள் திருப்பம் 50,000
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 7,25,000 2019, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 2,40,000
    வாராக்கடன் 30,000 ரொக்க விற்பனை 3,15,000
  7. நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.

  8. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சங்கம் பெற்ற சந்தா ரூ.25,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  9. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்

  10. பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ ரூ  செலுத்தல்கள் ரூ
    சந்தா         
    2017-2018 10,000      
    2018-2019 50,00      
    2019-2020 5,000 65,000    
             

    மன்றத்தில் உள்ள 200 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தாவாக ரூ.400 செலுத்துகின்றனர்.2017-2018 ஆம் ஆண்டில் இன்னும் பெற வேண்டிய சந்தா ரூ.2000

  11.  காரைக்குடி விளையாட்டு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வருவன எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்

    விவரம் ரூ
    2018, ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப்போட்டி நிதி 90,000
    2018, ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டுப்ப்போட்டி நிதி முதலீடு 90,000
    தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு மீதான வட்டி பெற்றது 9,000
    தொடர் விளையாட்டுப்போட்டி நிதிக்கான நன்கொடை 10,000
    தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 60,000
  12. தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:   நிலைச் சொத்துகள் 30,000
    சுபா 15,000 நடப்புச் சொத்துகள் 20,000
    சுதா 20,000    
    நடப்புப் பொறுப்புகள் 15,000    
      50,000   50,000

    அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.

  13. அருண் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% விதிக்க வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 6,000
    ஜுன் 1 4,000
    செப்டம்பர் 1 5,000
    டிசம்பர் 1 2,000

    எடுப்புகள் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்

  14. கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.

  15. 2018, ஜனவரி 1 அன்று பேகம் மற்றும் பாத்திமா என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.40,000 இருப்பினைக் காட்டியது. 2018, அக்டோபர் 1 அன்று பேகம் கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார் மற்றும் 2018, மே 1 அன்று பாத்திமா கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.9,000. டிசம்பர் 31, 2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடவும்.

  16. அகமது மற்றும் பஷீர் வழங்கிய முதல் முறையே ரூ.60,000 மற்றும் ரூ.40,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 2:1. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன் இலாபம் ரூ.5,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
    (i) முதல்மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
    (ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி, முதல்மீது வட்டி ஆண்டுக்கு 4% அனுமதிக்கப்படும்போது
    (iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி முதல்மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்கும்போது

  17. ஜனனி, கமலி மற்றும் லட்சுமி மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி, கமலிக்கு மாத ஊதியம் ரூ.10,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் லட்சுமிக்கு கழிவு ஆண்டுக்கு ரூ.40,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  18. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014:  ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  19. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  20. உயர் இலாப முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  21. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
    (ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
    (iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
    (iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  22. இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
    (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
    (ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
    (இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.

  23. சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
    (i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
    (ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது

  24. அருள் மற்றும் அனிதா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 4:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 31.3.2018 அன்று புதிய கூட்டாளியாக அஜய் என்பவர் சேர்த்துகொள்ளப்பட்டார். சேர்க்கையின்போது, நிறுவன ஏடுகளில் பொதுக்காப்பு ரூ.42,000 எனக் காட்டியது. பொதுக்காப்பினை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  25. சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
    (i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
    (ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
    (iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

  26. வருண் மற்றும் பாரத் இருவரும் கூட்டாளிகள். அவர்களின் இலாப நட்டம் விகிதம் 5:4 ஆகும். அவர்கள் தாமு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். தாமு செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.15,000 என மதிப்பிடப்பட்டது. அதில், அவர் ரூ.10,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  27. ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும் 
    ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
    iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  28. இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    (ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    (இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது

  29. ரோஜா, நீலா மற்றும் கனகா என்ற கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல் 1 அன்று ரோஜா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டன.
    (i) கட்டடத்தின் மதிப்பில் ரூ.30,000 அதிகரிக்க வேண்டும்.
    (ii) சரக்கிருப்பு மதிப்பில் ரூ. 5,000 மற்றும் அறைகலன் மதிப்பில்  ரூ.12,000 குறைக்க வேண்டும்.
    (iiii) கொடுபடா பொறுப்புகளுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  30. கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச்   செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
    (ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது

  31. ஜெமினி வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 மதிப்புள்ள ரூ. 7 அழைக்கப்பட்ட 20 சாதாரண பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. மகேஷ் என்பவர் அப்பங்குகளுக்கான விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீடு பணம் ரூ.5 செலுத்தி இருந்தார். அவற்றில் 15 பங்குகள் பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் பெற்றுக் கொண்டு ரூ.7 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக நரேஷ் என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. பங்கு ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  32. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  33. பின்வரும் விவரங்களிலிருந்து மணி மற்றும் கனி நிறுமங்களின் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

    விவரம் மணி நிறுமம் கனி நிறுமம்
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000
    இதர வருமானம் 30,000 25,000
    செலவுகள் 1,10,000 1,25,000
  34. சர்மிளா வரையறு நிறுமம் மற்றும் சங்கீதா வரையறு நிறுமத்தின் 2109, மார்ச் 31 ஆம் நாளைய பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    விவரம் சர்மிளா நிறுமம் சங்கீதா நிறுமம்
    ரூ. ரூ.
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 5,00,000 11,00,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 4,00,000 7,00,000
      நடப்புப் பொறுப்புகள் 1,00,000 2,00,000
    மொத்தம் 10,00,000 20,00,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 6,50,000 18,00,000
      நடப்புச் சொத்துகள் 3,50,000 2,00,000
    மொத்தம் 10,00,000 20,00,000
  35. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்

  36. சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000
    அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000
    அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000
    அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000
    உள்தூக்குக்கூலி 10,000
  37. ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
    அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
    அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000.

  38. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Sample 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment