முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 78

    பகுதி I

    26 x 3 = 78
  1. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?

  2. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

  3. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.

  4. இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?

  5. வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.

  6. தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.

  7. இயற்கைத் தேர்வு செயல்படுதலை,கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?

  8. மனித இனத்தின் பரிணாமத் தோற்றத்தின் நிலைகளை கீழ்நோக்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
    ஆஸ்ட்ரலோபித்திகஸ் → ஹோமோ எரக்டஸ்  → ஹோமோ சேப்பியன்ஸ் → ராமாபித்திகஸ்  → ஹோமோ ஹாபிலிஸ்.

  9. இறப்பு வீதத்தை பிறப்பு வீதத்திலிருந்து வேறுபடுத்துக.

  10. இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.

  11. டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?

  12. உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.

  13. இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.

  14. வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  15. காடுகளை பாதுகாப்பதில் பெண்களின் பங்கினை விவாதி.

  16. மெல்லிட்டோஃபில்லி என்றால் என்ன?

  17. ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

  18. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

  19. உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

  20. வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைபடுத்துவாய்? அதனை விளக்குக.

  21. ஓம்புயிரிகளில் வெற்றிகரமாக ஒட்டுண்ணி வாழ்க்கையினை மேற்கொள்ள உதவும் இரண்டு தகவமைப்பு பண்புகளை வரிசைப்படுத்துக.

  22. மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?

  23. ஒரு குறிப்பிட்ட சூழல்மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  24. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?

  25. பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?

  26. மஞ்சளின் பயன்களை பட்டியிலிடுக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Important 3 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment