முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 175

    பகுதி I

    35 x 5 = 175
  1. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  2. பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  3. மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    விவரம் ரூ. விவரம் ரூ.
    இருப்பு கீ/கொ 1,20,000 கொள்முதல் 1,50,000
    விற்பனை 3,60,000 கடனீந்தோர் 2,50,000
    கடனாளிகள் 3,40,000 கூலி 70,000
        பற்பலச் செலவுகள் 1,27,000
        இருப்பு கீ/இ 2,23,000
      8,20,000   8,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் 1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 1,10,000 1,80,000
    பற்பல கடனாளிகள் 1,30,000 ?
    பற்பல கடனீந்தோர் 1,60,000 90,000
    அறைகலனும் பொருத்துகைகளும் 80,000 80,000
    கூடுதல் தகவல்கள்: ரூ.
    கடன் கொள்முதல் 1,80,000
    கடன் விற்பனை 2,90,000
    தொடக்க முதல் 2,80,000

    அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  4. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    இயந்திரம் 60,000 60,000
    வங்கி ரொக்கம் 25,000 33,000
    பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
    சரக்கிருப்பு 45,000 22,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
    வங்கிக் கடன் 45,000 45,000
    பற்பல கடனீந்தோர் 25,000 21,000

    கூடுதல் தகவல்கள்:

      ரூ.   ரூ.
    ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
    ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
    கூலி 6,000 சம்பளம் 23,500
    விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
    எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

    சரிக்கட்டுதல்கள்:
    இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  5. நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் 31.03.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 31.03.2017 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
    ப நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் ஏடுகளில் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ
    இருப்பு கீ/கொ      அறைகலன்   7,000
    ரொக்கம் 1,000   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது   800
    வங்கி 10,000 11,000 சிறப்பு விருந்துக்கான செலவுகள்   1,500
    சந்தா   5,000 மின்கட்டணம்   900
    உயில்கொடை    6,000 இருப்பு கீ/இ    
    சிறப்பு விருந்து     கைரொக்கம்  1,800  
    கட்டண வசூல்   2,000 வங்கி ரொக்கம்  12,000 13,800
        24,000     24,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) 2016, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் இருந்த அறைகலன் ரூ12,000.அறைகலன் மீதான தேய்மானம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
    (ii) 2016-2017-ல் பெற வேண்டிய சந்தா ரூ. 600.
    (iii) 31.3.2017 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு ரூ.100
    (iv) 2016, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதி ரூ.23,000

  6. டில்லி இலக்கிய மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு பின்வருமாறு.

    ப டில்லி இலக்கிய மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   வாடகையும் வீதமும் 21,000
    கைரொக்கம் 3,200 விரிவுரை கட்டணம் 4,500
    நுழைவுக் கட்டணம் 2,300 பல்வகைச் செலவுகள் 7,200
    சந்தா 46,000 நிலை வைப்பு 40,000
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 2,500 இருப்பு கீ/இ  
    நிலை வைப்பின் மீதான வட்டி பெற்றது 500 கைரொக்கம் 4,300
    அறைகலன் விற்றது (1.4.2018) 22,500    
    (ஏட்டு மதிப்பு Rs. 25,000)      
      77,000   77,000

    கூடுதல் தகவல்கள்:
    (அ) ஆண்டு தொடக்கத்தில் மன்றத்தில் இருந்த நூல்கள் மதிப்பு ரூ.20,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ. 40,000.
    (ஆ) நடப்பாண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.1,000.
    சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  7. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து மதுரை அன்னை தெரசா மகளிர் மன்றத்தின் 2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ விவரம்  ரூ 
    ரொக்க இருப்பு (1.1.2018) 2,000 தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது  1,500
    வங்கி இருப்பு (1.1.2018 3,000 சந்தா பெற்றது 8,500
    பழைய செய்தித்தாள்கள்  விற்றது 500 அறைகலன் வாங்கியது 6,000
    எழுதுபொருள்கள் வாங்கியது 6,000 செய்தித்தாள்கள் வாங்கியது 700
    தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 அறைகலன் மீதான தேய்மானம் 900
    நுழைவுக்கட்டணம் பெற்றது 3,000 ரொக்க இருப்பு (31.12.2018) 2,500
    பல்வகைச் செலவுகள் 6,000 போக்குவரத்துச் செலவுகள் 1,000
    உதவித்தொகை அளித்தது 2,000 அறைகலன் விற்றது 4,000
    முதலீடுகள் மீதான வட்டி 2,000    
  8. கீழ்க்காணும் கும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்

    பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள்  ரூ  ரூ 
    இருப்பு கீ/கொ     மைதான வாடகை செலுத்தியது   12,000
    கைரொக்கம்  23,000   அச்சுக் கட்டணம்   5,000
    வங்கிரொக்கம்  12,000 35,000 வங்கிக் கட்டணம்    1,000
    அரங்க வாடகை பெற்றது   6,000 கட்டடம் மீதான காப்பீடு   2,000
          தொடர் விளையாட்டுப் போட்டிச்    
    சந்தா பெற்றது   9,000 செலவுகள்   16,000
    ஆயுள் உறுப்பினர் கட்டணம்    7,000 தணிக்கைக் கட்டணம்   3,000
    பாதுகாப்பு பெட்டக
    வாடகைப் பெற்றது
      2,000 விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது   4,000
          இருப்பு கீ/இ    
          கைரொக்கம்  2,000  
          வங்கி ரொக்கம்  14,000 16,000
        59,000     59,000
  9. நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ ரூ
    இருப்பு கீ/கொ   இருப்பு கீ/கொ    
    கைரொக்கம்  2,400 வங்கி மேல்வரைப்பற்று    1,000
    சந்தா 8,700 தபால் செலவுகள்    200
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 5,000 அறிவியல் உபகரணங்கள் வாங்கியது   10,000
    கண்காட்சி நிதி வரவுகள் 7,000 ஆய்வகச் செலவுகள்   2,400
    அறிவியல் உபகரணங்கள் விற்றது 6,000 செயலாளருக்கான மதிப்பூதியம்   5,000
    (ஏட்டு மதிப்பு ரூ.5,000)   தணிக்கைக் கட்டணம்   3,600
    இதர வரவுகள் 500 பொதுச் செலவுகள்   1,800
        கண்காட்சி செலவுகள்   5,000
        இருப்பு கீ/இ    
        கையிருப்பு ரொக்கம் 200  
        வங்கி ரொக்கம் 400 600
      29,600     29,600

    கூடுதல் தகவல்கள்:
    (i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
    (ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
    (iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
    (iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
    2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  10. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தி ரூ. சுமதி ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 1,00,000 80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 5,000 3,000
    2018, ஜுன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 10,000 20,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 20,000 13,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    2018 – ல் இலாபப் பங்கு 10,000 8,000
    முதல் மீது வட்டி 6,300 5,400
    ஊதியம் 9,000 -
    கழிவு - 1,200
  11. பின்வரும் தகவல்களிலிருந்து, பத்மினி, மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் பத்மினி ரூ. பத்மா ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 5,00,000 4,00,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 70,000 40,000
    எடுப்புகள் மீது வட்டி 2,000 1,000
    2018 – ல் இலாபப் பங்கு 52,000 40,000
    முதல் மீது வட்டி 30,000 24,000
    ஊதியம் 45,000 -
    கழிவு - 21,000
  12. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
    (ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
    (இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
    (ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000

  13. ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலம் 60,000
    ஆனந்த் 50,000   சரக்கிருப்பு 40,000
    பாலு 30,000 80,000 கடனாளிகள் 20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம் 10,000
    இலாப நட்ட க/கு   30,000    
        1,30,000   1,30,000

    2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
    (அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
    (இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
    மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

  14. 2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 50,000
    ரேகா 50,000   சரக்கிருப்பு 8,000
    மேரி 30,000 80,000 பற்பல கடனாளிகள் 60,000
    பொதுக் காப்பு   40,000 வங்கி ரொக்கம் 32,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   10,000    
    பற்பல கடனாளிகள்   20,000    
        1,50,000   1,50,000

     ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
    பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
    (i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
    (ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
    (iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
    (iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
    கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

  15. சாய் மற்றும் சங்கர் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அந்நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு இருந்தது.

    குறிப்பு
    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம்   34,000
    சாய் 48,000   அறைகலன்   6,000
    சங்கர் 40,000 88,000 முதலீடுகள்   20,000
    கடனீந்தோர்   37,000 கடனாளிகள் 40,000  
    கொடுபடவேண்டிய கூலி   8,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 3,000 37,000
          பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு   12,000
          சரக்கிருப்பு   16,000
          வங்கி   8,000
        1,33,000     1,33,000

     2017, டிசம்பர் 31 இல் சண்முகம் என்பவர் 1/4 இலாபப்பகிர்வு விகிதத்தில் கூட்டாண்மையில் சேருகிறார். அவர் பின்வரும் சரிகட்டுதலுக்குட்பட்டு ரூ.12,000 முதலாக கொண்டு வருகிறார்.
    (அ) அறைகலன் ரூ.5,000 மற்றும் கட்டடம் ரூ.50,000 ஆகவும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.5,500 ஆக உயர்த்த வேண்டும்.
    (இ) பதிவுறாத ரூ.6,000 மதிப்புள்ள முதலீடு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
    (ஈ) பதிவுறாத ரூ.2,500 மதிப்புள்ள பொறுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள முதல் கணக்கினையும் பதிவு செய்யவும்.

  16. சுந்தர் மற்றும் சுரேஷ் என்னும் கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2017, ஜனவரி 1-ல் அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 40,000
    சுந்தர் 30,000   அறைகலன் 13,000
    சுரேஷ் 20,000 50,000 சரக்கிருப்பு 25,000
    கடனீந்தோர்   50,000 கடனாளிகள் 15,000
    பொதுக்காப்பு   10,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 14,000
    தொழிலாளர் ஈட்டுநிதி   15,000 வங்கி 18,000
        1,25,000   1,25,000

     அவர்கள் சுகுமார் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாகச் சேர்த்தனர்.
    (i) சுகுமார் ரூ.30,000 முதலாக கொண்டுவருகிறார். நற்பெயரில் அவருடைய பங்கு ரூ.5,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
    (ii) சரக்கிருப்பு ரூ.20,000 என மதிப்பிடப்பட்டது.
    (iii) அறைகலன் மீது ரூ.2,000 தேய்மானம் நீக்கப்பட்டது.
    (iv) கட்டடம் மீது 20% தேய்மானம் நீக்கப்பட்டது.
    தேவையான பேரேட்டு கணக்குகளை தயார்செய்து கூட்டாளி சேர்ப்பிற்கு பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பையும் தயார் செய்யவும்.

  17. ஜான், ஜேம்ஸ் மற்றும் இராஜா என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள்  ரூ.

    ரூ.

    முதல் கணக்குகள்:     அலவலக சாதனங்கள்    70,000
    ஜான் 80,000   இயந்திரம்    1,40,000
    ஜேம்ஸ் 60,000   பற்பல கடனாளிகள்  52,000  
    இராஜா 1,00,000 2,40,000 கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு  2,000 50,000
    பற்பல கடனீந்தோர்   1,20,000 சரக்கிருப்பு    60,000
          வங்கி ரொக்கம்    40,000
        3,60,000     3,60,000

    2019, மார்ச் 31 ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    i) இயந்திரம் ரூ.1,30,000 ஆக மதிப்பிடுவது
    ii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ. 2,000 குறைப்பது 
    iii) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 ஆக உயர்த்துவது 
    iv) ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ரூ.25,000 பதிவு செய்ய வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  18. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     இயந்திரம் 45,000
    முத்து 20,000   அறைகலன் 5,000
    முரளி 25,000   கடனாளிகள் 30,000
    மனோஜ் 20,000 65,000 சரக்கிருப்பு 20,000
    பொதுக்காப்பு   6,000    
    கடனீந்தோர்   29,000    
        1,00,000   1,00,000

    பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
    (i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    (ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
    இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
    (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை  உடனடியாக செலுத்தப்படவில்லை.
    மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

  19. சந்துரு, விஷால் மற்றும் ரமணன் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள்   ரூ சொத்துகள்   ரூ
    முதல் கணக்குகள்     அறைகலன்   60,000
    சந்துரு 60,000   இயந்திரம்   1,20,000
    விஷால் 70,000   பற்பல கடனாளிகள் 33,000  
    ரமணன் 70,000 2,00,000 கழிக்க: ஐயக்கடன்    
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு   80,000 ஒதுக்கு 3,000 30,000
          பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு   50,000
          வங்கி ரொக்கம்   20,000
        2,80,000     2,80,000

    ரமணன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019, மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) இயந்திரம் ரூ.1,50,000 என மதிப்பிடப்பட்டது.
    (ii) அறைகலன் மதிப்பில் ரூ.10,000 குறைக்கப்பட்டது.
    (iii) ஐயக்கடன் ஒதுக்குரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
    (iv) ஏடுகளில் பதியப்பெறாத முதலீடுகள் ரூ.30,000 தற்போது பதியப்பட வேண்டும்.
    தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்

  20. ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ  ரூ  சொத்துகள் ரூ ரூ
    முதல் கணக்குகள்     கட்டடம்   60,000
    சரண்  60,000   இயந்திரம்   40,000
    அருண் 50,000   முதலீடுகள்   20,000
    கரண்  40,000 1,50,000 சரக்கிருப்பு   12,000
    பொதுக்காப்பு   15,000 கடனாளிகள் 25,000  
    கடனீந்தோர்    35,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 1000 24,000
          வங்கி ரொக்கம்    44,000
        2,00,000     2,00,000

    1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
    (ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
    (iii) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
    (iv) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
    (v) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
    (vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

  21. விஜயன், சுதன் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களுடைய 31.12.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    31.12.2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ  ரூ  சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     கட்டடம் 80,000
    விஜயன் 70,000   சரக்கிருப்பு 45,000
    சுதன் 50,000   கடனாளிகள் 25,000
    சுமன் 30,000 1,50,00 வங்கி ரொக்கம்  20,000
    பொதுக்காப்பு   18,000 கைரொக்கம்  15,000
    கடனீந்தோர்    17,000    
        1,85,000   1,85,000

    சுமன் 31.3.2019 அன்று இறந்து விட்டார். சுமனின் இறப்பின் போது, பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) கட்டடம் ரூ.1,00,000 என மதிப்பிடப்பட வேண்டும்.
    (ii) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்க வேண்டும்.
    (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.36,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
    2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலாபங்கள் முறையே ரூ.40,000,ரூ. 50,000 மற்றும் ரூ.30,000 ஆகும். சுமனின் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

  22. சரண்யா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம், 20,000 நேர்மைப் பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகளுக்கானத் தொகை கீழ்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

    விண்ணப்பத்தின் போது ரூ.3
    ஒதுக்கீட்டின் போது ரூ.4
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3

    30,000 பங்குகளுக்கான தொகை விண்ணப்பத்தின் போது பெறப்பட்டது. கூடுதலான விண்ணப்பத் தொகை திருப்பி, உடனடியாக அனுப்பப்பட்டது. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  23. நதியா ஜவுளி வரையறு நிறுமம் ரூ 10 மதிப்பிலான ரூ 8 அழைக்கப்பட்ட 100 பங்குகளை ஒறுப்பிழப்பு
    செய்தது. இதில் மயூரி பங்கு ஒன்றுக்கு ரூ 6 விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீட்டிற்கான தொகையினைச் செலுத்தி இருந்தார். அவற்றில் 75 பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ 7 பெற்றுக் கொண்டு ரூ 8 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக சௌந்தர்யா என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  24. கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.3 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  25. பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. ஆயிரங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156
    இதர வருமானம் 50 38 65
    செலவுகள் 100 135 123
  26. பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்

    விவரம் ரூ. இலட்சங்களில்
    வருடம் 1 வருடம் 2 வருடம் 3
    I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்      
      பங்குதாரர் நிதி 250 275 300
      நீண்ட காலப் பொறுப்புகள் 100 125 100
      நடப்புப் பொறுப்புகள் 50 40 80
    மொத்தம் 400 440 480
    II. சொத்துகள்      
      நிலைச் சொத்துகள் 300 360 390
      நடப்புச் சொத்துகள் 100 80 90
    மொத்தம் 400 440 480
  27.  பரணி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயாரிக்கவும்.

    விவரம் 2015-17
    ரூ.
    2016-18
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 30,000 45,000
    இதர வருமானம் 4,000 6,000
    செலவுகள் 10,000 15,000
    வருமான வரி 30% 30%
  28. மரியா மற்றும் கலா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பொது அளவு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்.

    விவரம் மரியா நிறுமம் கலா நிறுமம்
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,00,000 2,00,000
    இதர வருமானம் 10,000 30,000
    செலவுகள் 70,000 1,20,000
  29. பின்வரும் தகவல்களிலிருந்து கலா நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடுக.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 400 500 600
    இதர வருமானம் 100 150 200
    செலவுகள் 200 290 350
  30. மரியா நிறுமத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இலாப நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்க விலை விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் குறிப்பு எண் தொகை
    ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய்   8,00,000
    II. இதர வருமானம்   20,000
    III. மொத்த வருவாய் (I +II)   8,20,000
    IV. செலவுகள்:    
      கொள்முதல் செய்த சரக்குகள்   4,50,000
      சரக்கிருப்பு மாற்றம்   (-)40,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 1 22,000
      இதர செலவுகள் 2 68,000
      மொத்த செலவுகள்   5,00,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV)   3,20,000
    கணக்குகளுக்கான குறிப்புகள்
    விவரம் தொகை
    ரூ.
    1. பணியாளர் நலன்களுக்கான செலவுகள்  
      கூலி (நேரடி) 10,000
      சம்பளம் 12,000
      மொத்தம் 22,000
    2. இதர செலவுகள்  
      நிர்வாகச் செலவுகள் 20,000
      விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 28,000
      நிலைச்சொத்து விற்றதில் ஏற்பட்ட நட்டம் 20,000
    மொத்தம் 68,000
  31. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகயிலிருந்து
    (i) மொத்த இலாப விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம்
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 20,000
    II. இதர வருமானம்  
      முதலீடு மூலம் வருவாய் 200
    III. மொத்த வருவாய் (I+II) 20,200
    IV. செலவுகள்:  
      கொள்முதல் செய்த சரக்குகள் 17,000
      சரக்கிருப்பு மாற்றம் (–)1,000
      நிதிசார் செலவுகள் 300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
     மொத்த செலவுகள் 18,700
    V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 1,500
  32. பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்பு விகிதத்தினைக் கணக்கிடவும்.

    2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்கு முதல் 6,00,000
      (ஆ) காப்பு மற்றும் மிகுதி 2,00,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகால கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 6,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,60,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள்  
       கொடுபட வேண்டிய செலவுகள் 40,000
    மொத்தம் 16,00,000
  33. ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம்

    ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,50,000
      6% முன்னுரிமைப் பங்கு முதல் 2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) 3,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் 2,00,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000
    மொத்தம் 12,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 8,00,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 2,65,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 12,00,000
  34. பத்மா நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப மற்றும் நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்கவிலை விகிதம் கணக்கிடவும்

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் குறிப்பு எண். தொகை
    ரூ.
    I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்   15,00,000
    II. இதர வருமானம்   40,000
    III. மொத்த வருவாய் (I + II)   15,40,000
    IV. செலவுகள்:    
      கொள்முதல் செய்த சரக்குகள்   8,60,000
      சரக்கிருப்பு மாற்றம்   40,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் (சம்பளம்)   1,60,000
      இதர செலவுகள் 1 1,70,000
      மொத்த செலவுகள்   12,30,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV)   3,10,000

    கணக்குகளுக்கான குறிப்புகள்

    விவரம் தொகை
    ரூ.
    1. இதர செலவுகள்  
      அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 50,000
      விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 90,000
      அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம் 30,000
      1,70,000
  35. அப்துல் நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு

    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல் 2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகால கடன்கள் 1,50,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,30,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 5,000
      (இ) குறுகிய கால ஒதுக்குகள் 20,000
    மொத்தம் 5,55,000

    அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000.
    அவ்வாண்டில் பயன்படுத்திய முதலிலிருந்து பெற்ற வருவாய் விகிதம் கணக்கிடவும்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Important 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment