பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 175

    பகுதி I

    35 x 5 = 175
  1. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  2. பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31-12-2018
    ரூ.
    அறைகலன் 30,000 30,000
    கைரொக்கம் 10,000 17,000
    கடனாளிகள் 40,000 60,000
    சரக்கிருப்பு 28,000 11,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100
    வங்கிக் கடன் 25,000 25,000
    கடனீந்தோர் 15,000 16,000

    கூடுதல் தகவல்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800
    ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750
    கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700
    கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500
    எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000
    சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400

    சரிக்கட்டுதல்கள்:
    அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  3. மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    விவரம் ரூ. விவரம் ரூ.
    இருப்பு கீ/கொ 1,20,000 கொள்முதல் 1,50,000
    விற்பனை 3,60,000 கடனீந்தோர் 2,50,000
    கடனாளிகள் 3,40,000 கூலி 70,000
        பற்பலச் செலவுகள் 1,27,000
        இருப்பு கீ/இ 2,23,000
      8,20,000   8,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் 1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 1,10,000 1,80,000
    பற்பல கடனாளிகள் 1,30,000 ?
    பற்பல கடனீந்தோர் 1,60,000 90,000
    அறைகலனும் பொருத்துகைகளும் 80,000 80,000
    கூடுதல் தகவல்கள்: ரூ.
    கடன் கொள்முதல் 1,80,000
    கடன் விற்பனை 2,90,000
    தொடக்க முதல் 2,80,000

    அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  4. சென்னை விளையாட்டு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்
     

    விவரம் ரூ  விவரம் ரூ ரூ
    தொடக்க  இருப்பு (1.4.2017) 10,000 சந்தா பெற்றது    
    தொடக்க வங்கி இருப்பு (1.4.2017) 15,000 2016 – 2017 4,500  
    வட்டி செலுத்தியது 5,000 2017 – 2018 65,000  
    தொலைபேசி செலவுகள்  7,000 2018 – 2019 5,000 74,500
    மைதானம் பராமரித்தது  22,500 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    12,500
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது 5,500 தொடர் விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்    15,000
    மட்டைகள் மற்றும் பந்துகள் வாங்கியது  13,000 இறுதிரொக்க இருப்பு (31.3.2018)   5,000
  5. சேலம் பொழுதுபோக்கு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள்  ரூ
    இருப்பு கீ/கொ     அறைகலன் 15,000
    கைரொக்கம்   9,000 எழுதுபொருள்கள் 2,400
    சந்தா      முதலீடு 12,500
    2018 – 2019 12,500   அஞ்சல் செலவுகள் 1,000
    2019 – 2020 400 12,900 இருப்பு கீ/இ  
    பொழுதுபோக்குக மூலமாக பெற்ற வருமானம்   12,000 கைரொக்கம் 3,500
    பல்வகை வரவுகள்    500    
        34,400   34,400

    கூடுதல் தகவல்கள்:
    (i)  மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ. 30 செலுத்துகின்றனர்.
    (ii) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31-ல் ரூ300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500.
    (iii) 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ரூ  9,300 
    2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

  6. மதுரை மாநகர மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு

    துரை இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ  ரூ 
    இருப்பு கீ/கொ     மைதான பராமரிப்பு   16,500
    ரொக்கம் 500   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    19,000
    வங்கி 7,000 7,500 பல்வகைச் செலவுகள்   11,000
          அறை கலன்   20,000
    சந்தா (2016-17 ஆம் ஆண்டிற்கான ரூ 4,000 உட்பட   30,000 இருப்பு கீ/இ    
    உயில்கொடை    9,000 கைரொக்கம்  1,500  
    அரங்க வாடகை   10,000 வங்கி ரொக்கம் 11,000 12,500
    விளையாட்டுப் போட்டி நிதி வரவுகள்   22,500      
        79,000     79,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல்ப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.40,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ30,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ4,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ4,500. இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

  7. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து கடலூர் கபடி மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம்  ரூ
    ரொக்க இருப்பு (1.4.2018) 11,000 வட்டி மற்றும் வங்கிக் கட்டணம் 250
    வங்கி மேல்வரைப்பற்று இருப்பு (1.4.2018) 20,000 இதர வருமானம்  350
    எழுதுபொருள் வாங்கியது 5,200 மைதானம் பராமரிப்பு 550
    பயணச் செலவுகள் 1,800 அரசிடமிருந்து பெற்ற மானியம் 12,000
    பங்காதாயம் பெற்றது 3,000 தொலைபேசிக் கட்டணம் செலுத்தியது 2,800
    பொதுச் செலவுகள் 500 அறக்கட்டளை நிதி பெற்றது 10,000
    சேர்க்கைக் கட்டணம் 4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது 2,000
    தூது அஞ்சல் செலவுகள் 2,000 மின்கட்டணம் செலுத்தியது 5,000
    நகராட்சி வரி செலுத்தியது 3,000 ரொக்க இருப்பு (31.3.2019) 1,750
  8. ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாlளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   சம்பளம்  14,000
    கைரொக்கம்  9,600 அலுவலகச் செலவுகள் 7,200
    புத்தகம் வாங்குவதற்காக பெற்ற   புத்தகங்கள் வாங்கியது 15,000
    அரசு மானியம் 10,000 எழுதுபொருள்கள் வாங்கியது 1,800
    சந்தா 24,800 செய்தித்தாள் வாங்கியது 2,100
    சேர்க்கைக் கட்டணம் 2,000 பரிசுகள் வழங்கியது 5,000
    பரிசுநிதி வரவுகள் 6,000 இருப்பு கீ/இ  
    வங்கி வட்டி 1,500 கைரொக்கம் 9,900
    பழைய செய்தித்தாள்கள் விற்றது 1,100    
      55,000   55,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
    (ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
    (iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
    (iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.

  9. சிவகாசி ஓய்வூதியர் மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ     வாடகையும், வரியும் 18,000
    கைரொக்கம்  10,000   மின் கட்டணம் 17,000
    வங்கி ரொக்கம் 20,000 30,000 அறைகலன் வாங்கியது 12,000
    சந்தா     பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 70,000
    2016 – 2017 5,000   பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல்  16,000
    2017 – 2018 25,000   சிறப்பு விருந்து செலவுகள் 4,000
    2018 – 2019 6,000 36,000 பற்பலச் செலவுகள் 2,000
    உயில்கொடை   40,000 இருப்பு கீ/இ  
    அரங்க வாடகை   14,000 கைரொக்கம்  1,000
    பாதுகாப்பு பெட்டக வாடகை    5,000    
    சிறப்பு விருந்திற்கான வசூல்   12,000    
    இருப்பு கீ/இ        
    வங்கி மேல்வரைப்பற்று   3,000    
        1,40,000   1,40,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) சங்கத்தின் 300 உறுப்பினர்கள் தலா ரூ100 வீதம் ஆண்டுச்சந்தா செலுத்துகின்றனர்.
    (ii) 1.4.2017 அன்று சங்கத்தின் அறைகலன் இருப்பு ரூ10,000
    (iii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ.1,000.

  10. பிரகதீஷ் மற்றும் நரேஷ் ஆகிய கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் பிரகதீஷ் ரூ. நரேஷ் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 4,00,000 6,00,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு 20,000(வ) 15,000(ப)
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 50,000 -
    அவ்வாண்டின் எடுப்புகள் 45,000 60,000
    எடுப்புகள் மீது வட்டி 2,000 3,000
    அவ்வாண்டின் இலாபப் பங்கு 80,000 1,20,000
    முதல் மீது வட்டி 20,000 30,000
    கழிவு 17,000 -
    ஊதியம் - 38,000
  11. பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூபன் ரூ. டெரி ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000
    கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000
    2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800
    முதல் மீது வட்டி 3,500 2,500
    சம்பளம் - 18,000
    கழிவு 12,000 -
  12. பின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.50,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம்: 10%
    (இ) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ.13,000, ரூ.15,000 மற்றும் ரூ.17,000.
    (ஈ) 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ரூ.1 ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.2.4868.

  13. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் ரூ.20,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.1,50,000

  14. வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்     அறைகலன் 25,000
    வெற்றி 30,000   சரக்கிருப்பு 20,000
    இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000
    காப்பு நிதி   5,000 கைரொக்கம் 35,000
    பற்பல கடனீந்தோர்   45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
        1,00,000   1,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
    (i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
    (ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
    (iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
    (iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
    (v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
    புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

  15. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
    அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
    சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
    இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
    கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
        10,00,000   1,40,000

    பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
    (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
    (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
    (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
    மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  16. மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    மணி  50,000   சரக்கிருப்பு 20,000
    ரமா  50,000   அறைகலன்  70,000
    தேவன்  50,000 1,50,000 கடனாளிகள்  20,000
    பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம்  10,000
    இலாபநட்டக் க/கு   30,000    
        2,00,000   2,00,000

    பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
    (i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
    (ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.

  17. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     நிலம் 80,000
    சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
    விவேக்  40,000   கடனாளிகள் 30,000
    பாண்டியன் 10,000 1,00,000 வங்கிரொக்கம் 14,000
    பொதுக்காப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்ட வேண்டும்.
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்.
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை செலுத்தப்படவில்லை.
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்

  18. ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்:     கட்டடம் 1,00,000
    மஞ்சு 70,000   அறைகலன் 80,000
    சாரு 70,000   சரக்கிருப்பு 60,000
    லாவண்யா 70,000 2,10,000 கடனாளிகள் 40,000
    பற்பல கடனீந்தோர்   40,000 கைரொக்கம்  20,000
    இலாப நட்டக் கணக்கு   50,000    
        3,00,000   3,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.10,000 குறைக்க வேண்டும்.
    (i) ஐயக்கடன் ஒதுக்கு ரூ .3,000 உருவாக்க வேண்டும்.
    (i) கட்டடத்தில் ரூ. 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
    (ii) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும்செலுத்தப்படவில்லை.மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.

  19. கீர்த்திகா நிறுமம் பங்கொன்று ரூ.10 வீதம் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. தொகையானது விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3 (முனைமம் உட்பட), முதல் அழைப்பின் போது ரூ.3, மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 எனச் செலுத்தப்பட வேண்டும்.
    பின்வரும் தருணங்களில் பங்குகளை ஒறுப்பிழப்பு செய்வதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
    (i) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
    (ii) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
    (iii) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் முதல் அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் முதல் அழைப்பிற்கு பின் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன

  20. இலக்ஷித் என்பவர் ரூ.10 மதிப்புள்ள 50 பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அவர் அதற்கென விண்ணப்பத்தின் மீது ரூ.2 செலுத்தியுள்ளார். ஆனால், ஒதுக்கீட்டின் மீது ரூ.4 மற்றும் முதலாவது அழைப்பின் மீது ரூ.2 செலுத்தவில்லை. முதலாவது அழைப்பிற்கு பின் இயக்குனர்கள் பங்கினை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பு செய்த பங்குகளுக்கான குறிப்பேட்டு பதிவினைத் தரவும்

  21. வைரம் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் பின்வரும் செலுத்துதலுக்கேற்ப வெளியிட்டது.

    விண்ணப்பத்தின் போது ரூ.6
    ஒதுக்கீட்டின் போது ரூ.4 (முனைமம் உள்பட)
    முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2

    அனைத்துப் பங்குகளும் ஏற்கப்பட்டன. சரிதாவின் 100 பங்குகளுக்கான ஒதுக்கீடு, முதலாவது அழைப்பு மற்றும் இறுதி அழைப்பிற்கானத் தொகை தவிர, ஏனைய அனைத்தும் பெறப்பட்டன. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பரிமளா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  22. பின்வரும் விவரங்களைக் கொண்டு, முல்லை வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.இலட்சங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 120 160
    இதர வருமானம் 20 24 20
    செலவுகள் 20 14 40
    வருமானவரி 30% 30% 30%
  23. முத்து நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒப்பீட்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கவு

    விவரம் 2017, மார்ச் 31 2018, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 4,00,000 4,40,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 1,50,000 1,65,000
      நடப்புப் பொறுப்புகள் 75,000 82,500
    மொத்தம் 6,25,000 6,87,500
    II. சொத்துகள்    
      நீண்டகாலச் சொத்துகள் 5,00,000 6,00,000
      நடப்புச் சொத்துகள் 1,25,000 87,500
    மொத்தம் 6,25,000 6,87,500
  24. யாஸ்மின் மற்றும் சக்தி நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து பொது அளவு நிதிநிலை அறிக்கையினைத் தயார் செய்யவும்

    விவரம் யாஸ்மின் நிறுமம் சக்தி நிறுமம்
    ரூ. ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      (அ) பங்கு முதல் 2,00,000 3,00,000
      (ஆ) காப்பும் மிகுதியும் 50,000 60,000
    2.நீண்டகாலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 1,50,000 1,80,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000 60,000
    மொத்தம் 5,00,000 6,00,000
    II. சொத்துகள்    
      1.நீண்டகாலச் சொத்துகள்    
      (அ) நிலைச் சொத்துகள் 2,00,000 3,00,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000 1,20,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 2,00,000 90,000
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 50,000 90,000
    மொத்தம் 5,00,000 6,00,000
  25. பின்வரும் தகவல்களிலிருந்து, அனு நிறுமத்தின் போக்கு சதவிகிதங்களை கணக்கிடவும்.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்      
      பங்குதாரர் நிதி 500 550 600
      நீண்டகாலப் பொறுப்புகள் 200 250 240
      நடப்புப் பொறுப்புகள் 100 80 120
    மொத்தம் 800 880 960
    II. சொத்துகள்      
      நீண்டகாலச் சொத்துகள் 600 720 780
      நடப்புச் சொத்துகள் 200 160 180
    மொத்தம் 800 880 960
  26. மரியா நிறுமத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இலாப நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்க விலை விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் குறிப்பு எண் தொகை
    ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய்   8,00,000
    II. இதர வருமானம்   20,000
    III. மொத்த வருவாய் (I +II)   8,20,000
    IV. செலவுகள்:    
      கொள்முதல் செய்த சரக்குகள்   4,50,000
      சரக்கிருப்பு மாற்றம்   (-)40,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 1 22,000
      இதர செலவுகள் 2 68,000
      மொத்த செலவுகள்   5,00,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV)   3,20,000
    கணக்குகளுக்கான குறிப்புகள்
    விவரம் தொகை
    ரூ.
    1. பணியாளர் நலன்களுக்கான செலவுகள்  
      கூலி (நேரடி) 10,000
      சம்பளம் 12,000
      மொத்தம் 22,000
    2. இதர செலவுகள்  
      நிர்வாகச் செலவுகள் 20,000
      விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 28,000
      நிலைச்சொத்து விற்றதில் ஏற்பட்ட நட்டம் 20,000
    மொத்தம் 68,000
  27. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகயிலிருந்து
    (i) மொத்த இலாப விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம்
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 20,000
    II. இதர வருமானம்  
      முதலீடு மூலம் வருவாய் 200
    III. மொத்த வருவாய் (I+II) 20,200
    IV. செலவுகள்:  
      கொள்முதல் செய்த சரக்குகள் 17,000
      சரக்கிருப்பு மாற்றம் (–)1,000
      நிதிசார் செலவுகள் 300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
     மொத்த செலவுகள் 18,700
    V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 1,500
  28. கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும். மொத்த நடப்புப் பொறுப்புகள் ரூ.2,40,000; மொத்த நடப்புச் சொத்துகள் ரூ.4,50,000; சரக்கிருப்பு: ரூ.70,000; முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்: ரூ20,000

  29. சுந்தரம் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்:

    சுந்தரம் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் தொகை
      ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      (i) நேர்மைப் பங்குமுதல் 2,50,000
      (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 1,50,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,50,000
    மொத்தம் 6,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 4,60,000
      (ஆ) நீண்ட கால முதலீடுகள் 1,00,000
    2. நடப்புச் சொத்துகள்  
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 40,000
    மொத்தம் 6,00,000
  30. ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம்

    ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,50,000
      6% முன்னுரிமைப் பங்கு முதல் 2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) 3,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் 2,00,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000
    மொத்தம் 12,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 8,00,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 2,65,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 12,00,000
  31. வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொகை முறையே ரூ.1,10,000 மற்றும் ரூ.1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்

  32. பத்மா நிறுமத்தின் 2018, மார்ச் 31 ஆம் நளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப மற்றும் நட்ட அறிக்கை பின்வருமாறு. இயக்க அடக்கவிலை விகிதம் கணக்கிடவும்

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் குறிப்பு எண். தொகை
    ரூ.
    I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்   15,00,000
    II. இதர வருமானம்   40,000
    III. மொத்த வருவாய் (I + II)   15,40,000
    IV. செலவுகள்:    
      கொள்முதல் செய்த சரக்குகள்   8,60,000
      சரக்கிருப்பு மாற்றம்   40,000
      பணியாளர் நலன்களுக்கான செலவுகள் (சம்பளம்)   1,60,000
      இதர செலவுகள் 1 1,70,000
      மொத்த செலவுகள்   12,30,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV)   3,10,000

    கணக்குகளுக்கான குறிப்புகள்

    விவரம் தொகை
    ரூ.
    1. இதர செலவுகள்  
      அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 50,000
      விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 90,000
      அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம் 30,000
      1,70,000
  33. ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து நிகர இலாப விகிதம் கணக்கிடவும்

    விவரம் ரூ.
    விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 9,60,000
    விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 5,50,000
    அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 1,45,000
    விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 25,000
  34. ரொவினா நிறுமத்தின் பின்வரும் வியாபார நடவடிக்கைகளிலிருந்து
    (i) மொத்த இலாப விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம்
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் ரூ.
    I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 4,00,000
    II. இதர வருமானம்:  
      முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் 4,000
    III. மொத்த வருவாய் (I+II) 4,04,000
    IV. செலவுகள்:  
      கொள்முதல் செய்த சரக்குகள் 2,10,000
      சரக்கிருப்பு மாற்றம் 30,000
      நிதிசார் செலவுகள் 24,000
      இதர செலவுகள் (நிர்வாக மற்றும் விற்பனை) 60,000
    மொத்த செலவுகள் 3,24,000
    V. வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 80,000
  35. பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
    அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு 

    பொறுப்புகள்  ரூ  சொத்துகள்  ரூ 
    முதல் பற்பல கடனீந்தோர்: 1,60,000 கட்டடம்  40,000
    மாயா க/கு  20,000 அறைகலன்  20,000
        சரக்கிருப்பு  10,000
        பற்பல கடனாளிகள்:  
        பீட்டர்  20,000
        கை ரொக்கம்  30,000
        வாங்கி ரொக்கம்  60,000
      1,80,000   1,80,000

    (அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
    (ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
    (இ) ரொக்கக்  கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
    (ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
    (உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
    (ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
    (எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
    (ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
    (ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
    (ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
    31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Model 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment