மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 170

    பகுதி I

    34 x 5 = 170
  1. பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    ப ரொக்க ஏடு வ
    பெறுதல்கள் ரூ. செலுத்தல்கள் ரூ.
    இருப்பு கீ/கொ 32,000 கொள்முதல் க/கு 56,000
    விற்பனை க/கு 1,60,000 கடனீந்தோர் க/கு 80,000
    கடனாளிகள் க/கு 1,20,000 பொதுச் செலவுகள் க/கு 24,000
        கூலி க/கு 10,000
        இருப்பு கீ/இ 1,42,000
      3,12,000   3,12,000

    பிற தகவல்கள்:

    விவரம் 1.4.2018 ரூ. 31.3.2019 ரூ.
    சரக்கிருப்பு 40,000 60,000
    கடனாளிகள் 38,000 ?
    கடனீந்தோர் 58,000 52,000
    இயந்திரம் 1,70,000 1,70,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) கடன் கொள்முதல் 74,000
    (ii) கடன் விற்பனை 1,40,000
    (iii) தொடக்க முதல் 2,22,000
    (iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

  2. இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 31.3.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    சரக்கிருப்பு 2,20,000 1,60,000
    கடனாளிகள் 5,30,000 6,40,000
    வங்கி ரொக்கம் 60,000 10,000
    இயந்திரம் 80,000 80,000
    பற்பல கடனீந்தோர் 3,70,000 4,20,000

    பிற தகவல்கள்: 

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வாடகை செலுத்தியது 1,20,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 12,50,000
    பெற்ற தள்ளபடி 35,000 எடுப்புகள் 1,00,000
    அளித்த தள்ளுபடி 25,000 ரொக்க விற்பனை 20,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 11,00,000 1.4.2018 அன்று முதல் 5,20,000
  3. பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  4. டில்லி இலக்கிய மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு பின்வருமாறு.

    ப டில்லி இலக்கிய மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   வாடகையும் வீதமும் 21,000
    கைரொக்கம் 3,200 விரிவுரை கட்டணம் 4,500
    நுழைவுக் கட்டணம் 2,300 பல்வகைச் செலவுகள் 7,200
    சந்தா 46,000 நிலை வைப்பு 40,000
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 2,500 இருப்பு கீ/இ  
    நிலை வைப்பின் மீதான வட்டி பெற்றது 500 கைரொக்கம் 4,300
    அறைகலன் விற்றது (1.4.2018) 22,500    
    (ஏட்டு மதிப்பு Rs. 25,000)      
      77,000   77,000

    கூடுதல் தகவல்கள்:
    (அ) ஆண்டு தொடக்கத்தில் மன்றத்தில் இருந்த நூல்கள் மதிப்பு ரூ.20,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ. 40,000.
    (ஆ) நடப்பாண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.1,000.
    சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  5. மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ 
    தொடக்க ரொக்க இருப்பு 15,000 காவலாளிக்குச் சம்பளம் கொடுத்தது 12,000
    தொடக்க வங்கி இருப்பு 25,000 மன்ற ஆண்டு விழாச் செலவுகள் 15,000
    நன்கொடைகள் பெற்ற 48,000 ஒளியூட்டுச் செலவுகள்  16,500
    பழைய உபகரணங்கள் விற்றது 26,000 பொழுதுபோக்குச் செலவுகள் 13,500
    சிற்றுண்டிச் செலவுகள்  13,000 பில்லியார்ட்ஸ் மேசை வங்கியது 5,000
    மன்ற ஆண்டு விழா வசூல் 18,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவுகள்  3,000
    டென்னிஸ் மைதான கட்டுமானச் செலவுகள்  7,000 முதலீடுகள் விற்றது 12,000
    அறக்கொடை நாடகக்காட்சி வசூல் 4,000 இறுதி ரொக்க இருப்பு 12,000
    வாடகைச் செலுத்தியது 1,000    
  6. ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாlளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   சம்பளம்  14,000
    கைரொக்கம்  9,600 அலுவலகச் செலவுகள் 7,200
    புத்தகம் வாங்குவதற்காக பெற்ற   புத்தகங்கள் வாங்கியது 15,000
    அரசு மானியம் 10,000 எழுதுபொருள்கள் வாங்கியது 1,800
    சந்தா 24,800 செய்தித்தாள் வாங்கியது 2,100
    சேர்க்கைக் கட்டணம் 2,000 பரிசுகள் வழங்கியது 5,000
    பரிசுநிதி வரவுகள் 6,000 இருப்பு கீ/இ  
    வங்கி வட்டி 1,500 கைரொக்கம் 9,900
    பழைய செய்தித்தாள்கள் விற்றது 1,100    
      55,000   55,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
    (ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
    (iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
    (iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.

  7. விருதுநகர் கைப்பந்து சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    ப 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ 
    இருப்பு கீ/கொ      விளையாட்டுப் போட்டிச் செலவுகள்   25,000
    கைரொக்கம்   5,000      
    சந்தா     விளையாட்டு அரங்க பராமரிப்பு   17,000
    2017 10,000   செயலாளருக்கான மதிப்பூதியம்   18,000
    2018 55,000   பந்து மற்றும் மட்டைகள் வாங்கியது   22,000
    2019 5,000 70,000      
    நன்கொடைகள்   40,000 புல் விதைகள் வாங்கியது   2,000
    விளையாட்டுப் போட்டி     நிலைவைப்பு   58,000
    நிதி வரவுகள்   30,000 பல்வகைச் செலவுகள்   3,000
    நிலைவைப்பு மீதான வட்டி   8,000 இருப்பு கீ/இ    
    இதர வரவுகள்   5,000 கைரொக்கம் 7,000  
          வங்கி ரொக்கம் 6,000 13,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) 1.1.2018 அன்று சங்கத்தில் இருந்த முதலீடுகள் ரூ.10,000; வளாகம் மற்றும் மைதானங்கள் ரூ.40,000 ; பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ.5,000.
    (ii) 2017 ஆம் ஆண்டிற்கான சந்தா இன்னும் பெறவேண்டியது ரூ.5,000
    (iii) 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ.6,000.
    2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்ககையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

  8. துரை மற்றும் வேலன் 2018, ஏப்ரல் 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். துரை ரூ.25,000 மற்றும் வேலன் ரூ.30,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
    (அ) துரை மற்றும் வேலன் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
    (ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% தரப்பட வேண்டும்.
    (இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது: துரை ரூ.300 மற்றும் வேலன் ரூ.450.
    (ஈ) துரைக்கு ஊதியம் ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
    (உ) வேலனுக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.2,000.
    அவ்வாண்டில் வட்டி, ஊதியம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.20,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.

  9. அந்தோணி மற்றும் ரஞ்சித் 2018, ஏப்ரல் 1 அன்று முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.3,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினர். கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி அந்தோணி ஆண்டுக்கு ரூ.90,000 ஊதியம் பெற வேண்டும். முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% மற்றும் அந்தோனியின் ஊதியம் மற்றும் கழிவினை கழித்ததற்கு பின் உள்ள இலாபத்தில் 25% ரஞ்சித் கழிவாகப் பெற வேண்டும். இரு கூட்டாளிகளுக்கு இடையேயான இலாபப் பகிர்வு விகிதம் 1:1. அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,65,000.
    இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ல் கணக்கு முடிக்கிறது.

  10. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) சாதாரண இலாப விகிதம் 10%
    (ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
    (இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
    (ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.

  11. வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்     அறைகலன் 25,000
    வெற்றி 30,000   சரக்கிருப்பு 20,000
    இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000
    காப்பு நிதி   5,000 கைரொக்கம் 35,000
    பற்பல கடனீந்தோர்   45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
        1,00,000   1,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
    (i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
    (ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
    (iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
    (iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
    (v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
    புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

  12. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப்பகிர்வு விகிதம் 3:2. 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
    அமீர் 80,000   அறைகலன் 40,000
    இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
    காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
    கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
          வங்கி ரொக்கம் 20,000
        2,00,000   2,00,000

     ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ.10,000 கொண்டு வந்தார்.
    மறுமதிபீடுப் பின்வருமாறு செய்யப்பட்டது
    (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்படவேண்டும்.
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
    தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக்
    குறிப்பினைத் தயார் செய்யவும்.

  13. அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 80,000
    அமல் 70,000   அறைகலன் 20,000
    விமல் 50,000 1,20,000 சரக்கிருப்பு 25,000
    பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 30,000
    இலாப நட்ட க/கு   24,000 வங்கி 19,000
        1,74,000   1,74,000

    1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
    அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
    (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
    (இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
    மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

  14. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
    அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
    சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
    இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
    கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
        10,00,000   1,40,000

    பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
    (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
    (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
    (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
    மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  15. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
    சார்லஸ்  30,000   சரக்கிருப்பு 40,000
    முத்து  40,000   கடனாளிகள்  30,000
    சேகர்  20,000 90,000 வங்கி ரொக்கம்  42,000
    தொழிலாளர் ஈட்டு நிதி    27,000 இலாபநட்ட க/கு 18,000
    பற்பல கடனீந்தோர் க/கு   33,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
    (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
    மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

  16. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     நிலம் 80,000
    சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
    விவேக்  40,000   கடனாளிகள் 30,000
    பாண்டியன் 10,000 1,00,000 வங்கிரொக்கம் 14,000
    பொதுக்காப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்ட வேண்டும்.
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்.
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை செலுத்தப்படவில்லை.
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்

  17. ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்:     கட்டடம் 1,00,000
    மஞ்சு 70,000   அறைகலன் 80,000
    சாரு 70,000   சரக்கிருப்பு 60,000
    லாவண்யா 70,000 2,10,000 கடனாளிகள் 40,000
    பற்பல கடனீந்தோர்   40,000 கைரொக்கம்  20,000
    இலாப நட்டக் கணக்கு   50,000    
        3,00,000   3,00,000

    பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.10,000 குறைக்க வேண்டும்.
    (i) ஐயக்கடன் ஒதுக்கு ரூ .3,000 உருவாக்க வேண்டும்.
    (i) கட்டடத்தில் ரூ. 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
    (ii) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும்செலுத்தப்படவில்லை.மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.

  18. வர்ஷா, சாந்தி மற்றும் மாதுரி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 5:4:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்றைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     வளாகம் 1,20,000
    வர்ஷா   80,000   சரக்கிருப்பு 40,000
    சாந்தி 60,000   கடனாளிகள் 50,000
    மாதுரி 20,000 1,60,000 வங்கி ரொக்கம் 18,000
    பொதுக்காப்பு    48,000 இலாப நட்டக் க/கு 12,000
    பற்பல கடனீந்தோர்   32,000 (நட்டம்)  
        2,40,000   2,40,000

    1.1.2018 அன்று மாதுரி இறந்து விட்டார். அவரின் இறப்பின் போது பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    (i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
    (ii) வளாகம் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்
    (iii) வாராக்கடன் ஒதுக்கு ரூ. 4,000 உருவாக்க வேண்டும்.
    (iv) மாதுரிக்குச் செலுத்த வேண்டியத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  19. திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  20. லலிதா வரையறு நிறுமம் ரூ.10 வீதம் 30,000 நேர்மைப் பங்குகளை பொதுமக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3, மீதம் தேவைப்படும் போது செலுத்தப்பட வேண்டும், 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்.
    10,000 பங்குகளுக்கான விண்ணப்பம் - முழுவதும் ஒதுக்கீடு
    35,000 பங்குகளுக்கான விண்ணப்பம் - 20,000 பங்குகள் (மிகுதித் தொகை ஒதுக்கீட்டில் சரிசெய்யப்படும்)
    5,000 பங்குகளுக்கான விண்ணப்பம் - ஒதுக்கீடு இல்லை
    அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. ஒதுக்கீடு பெரும் வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  21. காஞ்சனா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 50,000 நேர்மைப் பங்குகளை பின்வருமாறு வெளியிட்டது

    விண்ணப்பத்தின் மீது ரூ.1
    ஒதுக்கீட்டின் மீது ரூ.5
    முதாலவது அழைப்பின் மீது ரூ.2
    இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2

    70,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 8,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. மேலும், இதர விண்ணப்பங்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இயக்குனர்கள் இரண்டு அழைப்புகளும் விடுத்தனர். 1500 பங்குகளின் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பின் தொகையை தவிர, அனைத்து பங்குகளுக்குமான தொகை பெறப்பட்டது. அப்பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டனர். பின்னர், 1200 ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட பங்குகள் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. இதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  22. பாரடைஸ் வரையறு நிறுமம், ரூ.4,40,000 மதிப்புள்ள சொத்துகளை சுகுணா அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ரூ.10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.
    அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
    ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்

  23. பின்வரும் விவரங்களைக் கொண்டு நெய்தல் வரையறு நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.இலட்சங்களில்
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 150 135 90
    இதர வருமானம் 25 5 15
    செலவுகள் 125 75 50
    வருமானவரி 40% 40% 40%
  24. டேனியல் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, ஒப்பீட்டு வருமான அறிக்கையைத் தயார் செய்யவும்

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 40,000 50,000
    இயக்கச் செலவுகள் 25,000 27,500
    வருமான வரி % (வரிக்கு முன்னர் உள்ள இலாபத்தில்) 30 30
  25. சாம் நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து பொது அளவு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,00,000 5,00,000
    இதர வருமானம் 80,000 50,000
    செலவுகள் 2,40,000 2,50,000
    வருமான வரி 30% 30%
  26. பின்வரும் தகவல்களிலிருந்து கலா நிறுமத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடுக.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 400 500 600
    இதர வருமானம் 100 150 200
    செலவுகள் 200 290 350
  27. பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபம் கணக்கிடவும்:
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.1,00,000, விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.80,000 மற்றும் கொள்முதல் ரூ.62,500.

  28. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கைகயிலிருந்து
    (i) மொத்த இலாப விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம்
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம் ரூ.
    I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 20,000
    II. இதர வருமானம்  
      முதலீடு மூலம் வருவாய் 200
    III. மொத்த வருவாய் (I+II) 20,200
    IV. செலவுகள்:  
      கொள்முதல் செய்த சரக்குகள் 17,000
      சரக்கிருப்பு மாற்றம் (–)1,000
      நிதிசார் செலவுகள் 300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
     மொத்த செலவுகள் 18,700
    V. அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III - IV) 1,500
  29. கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து விரைவு விகிதத்தைக் கணக்கிடவும். மொத்த நடப்புப் பொறுப்புகள் ரூ.2,40,000; மொத்த நடப்புச் சொத்துகள் ரூ.4,50,000; சரக்கிருப்பு: ரூ.70,000; முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்: ரூ20,000

  30. சுந்தரம் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்:

    சுந்தரம் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் தொகை
      ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      (i) நேர்மைப் பங்குமுதல் 2,50,000
      (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 1,50,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,50,000
    மொத்தம் 6,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 4,60,000
      (ஆ) நீண்ட கால முதலீடுகள் 1,00,000
    2. நடப்புச் சொத்துகள்  
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 40,000
    மொத்தம் 6,00,000
  31. ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
    (i) புற அக பொறுப்புகள் விகிதம்
    (ii) உரிமையாளர் விகிதம்
    (iii) முதல் உந்துதிறன் விகிதம்

    ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 2,50,000
      6% முன்னுரிமைப் பங்கு முதல் 2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) 3,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் 2,00,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000
    மொத்தம் 12,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      நிலைச் சொத்துகள் 8,00,000
    2. நடப்புச் சொத்துகள்  
      (அ) சரக்கிருப்பு 1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 2,65,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 12,00,000
  32.  அருணா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும்
    (iv) நிலைச்சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 3,60,000 4,40,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 7,40,000 6,60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,90,000 2,30,000
    நிலைச் சொத்துகள் 6,00,000 8,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.35,00,000
    (ii) அவ்வாண்டில் கொள்முதல் ரூ.21,00,000
    (iii) விற்பனையிலிருந்து பெற்றபெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.16,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் எனக் கொள்ளவும்.

  33. ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து நிகர இலாப விகிதம் கணக்கிடவும்

    விவரம் ரூ.
    விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் 9,60,000
    விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 5,50,000
    அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் 1,45,000
    விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் 25,000
  34. அப்துல் நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு

    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல் 2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகால கடன்கள் 1,50,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,30,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் 5,000
      (இ) குறுகிய கால ஒதுக்குகள் 20,000
    மொத்தம் 5,55,000

    அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000.
    அவ்வாண்டில் பயன்படுத்திய முதலிலிருந்து பெற்ற வருவாய் விகிதம் கணக்கிடவும்.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Sample 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment