மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 65

    பகுதி I

    13 x 5 = 65
  1. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு இறுதி பற்பல கடனாளிகளையும், இறுதி பற்பல கடனீந்தோரையும் கணக்கிடுக்க.

      ரூ.
    1.4.2002 அன்று பற்பல கடனாளிகள்  30,000
    1.4.2002 அன்று பற்பல கடனீந்தோர்  41,000
    கடன்கொள்முதல்  1,50,000
    கடன் விற்பனை  1,70,000
    பெற்ற தள்ளுபடி  5,000
    அளித்த தள்ளுபடி  6,000
    கொள்முதல் திருப்பம்  7,500
    விற்பனைத் திருப்பம்  6,500
    பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்  1,50,000
    பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  1,40,000
  2. தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ. விவரம்  ரூ.
    தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) 15,000 சந்தா பெற்றது  40,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 9,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்  7,500
    அச்சு மற்றும் எழுதுபொருள்  2,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது  5,250 புத்தகங்கள் வாங்கியது  10,000
    முதலீடுகள் விற்றது  4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது  4,000
    சிற்றுண்டி வாங்கியது  2,500 பல்வகை வரவுகள்  650
    கொடுபட வேண்டிய சம்பளம்  6,000 அரசிடமிருந்து பெற்ற மானியம்  6,000
    அறக்கொடை நிதி பெற்றது  6,000 சிற்றுண்டி விற்றது  1,500
    ஒளியூட்டுக் கட்டணம்  3,300 கட்டடம் மீதான தேய்மானம்  3,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  3. திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    திருச்சி இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ. ரூ.
    இருப்பு கீ/கொ      மைதான பராமரிப்பு    33,000
    ரொக்கம்  1,000   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    38,000
    வங்கி  14,000   பல்வகைச் செலவுகள்    22,000
    சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட)   60,000 அறைகலன்    40,000
    உயில்கொடை    18,000 இருப்பு கீ/இ     
    விளையாட்டுப் போட்டி நிதி    20,000 கைரொக்கம்  3,000  
    வரவுகள்   45,000 வங்கி ரொக்கம்  22,000 25,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

  4. நிலா மற்றும் மாதுரி இருவரும் கூட்டாளிகள், நிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.60,000 எடுத்துக்கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4, 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்

  5. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
    (ஆ) சாதாரண இலாப விகிதல் 10%
    (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000:

  6. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப் பகிர்வு விகிதம் 3 : 2 : 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துக்கள் ரூ.
    முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
      அமீர் 80,000   அறைகலன்  40,000
      இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
    காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
    கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
          வங்கி ரொக்கம் 20,000
        2,00,000   2,00,000

    ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ,10,000 கொண்டுவந்தார்.
    பின்வருமாறு மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது
    தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

  7. ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்

  8. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலம் 80,000
      சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
      விவேக் 40,000   கடனாளிகள் 30,000
      பாண்டியன் 10,000 1,00,000 வங்கி ரொக்கம் 14,000
    பொதுக்கப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

     1.1.2019 அன்று பாண்டியன் இறந்தது விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டடன
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிருமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  9. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பாங்கொன்றிற்கு      ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பாங்கொன்றிற்கு      ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பாங்கொன்றிற்கு      ரூ.2

    60,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திரும்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  10. கீர்த்திகா நிறுமம் பங்கொன்று ரூ,10 வீதம் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. தொகையானது விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3 (முனைமம் உட்பட அழைப்பின் போது ரூ.3, மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 எனச் செலுத்தப்பட வேண்டும்.
    பின்வரும் தருணங்களில் பங்குகளை ஒறுப்பிழப்பு செய்வதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    1) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
    2) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் அவருடைய பங்குகள் ஒறுபிழப்பு செய்யப்பட்டன.
    3) 50 பங்குகளை வைத்திருக்கும் மோகன் என்பவர் ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் முதல் அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் முதல் அழைப்பிற்கு பின் அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன.

  11. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம்  2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
    இதர வருமானங்கள்  50,000 1,50,000
    செலவுகள்  5,00,000 3,00,000
    வருமான வரி % 40 40
  12. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
    (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

    அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம்  ரூ 
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
    1. பங்குதாரர் நிதி   
      (அ) பங்குமுதல்   
      நேர்மைப் பங்குமுதல்  1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்   
      நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
    3. நடப்பு பொறுப்புகள்   
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
      மொத்தம்  10,00,000
    II  சொத்துகள்   
    1. நீண்ட காலச் சொத்துகள்   
      நிலைச் சொத்துகள்  7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  1,20,000
      (அ) சரக்கிருப்பு  1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
      செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
      மொத்தம்  10,00,000
  13. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து 
    (i) மொத்த இலாப விகிதம் 
    (ii) நிகர இலாப விகிதம் 
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம் 
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம்  ரூ
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  20,000
    II. இதர வருமானம்   
      முதலீடு மூலம் வருவாய்  200
    III  மொத்த வருவாய் (I+II) 20,200
    IV  செலவுகள்   
      கொள்முதல் சரக்குகள்  17,000
      சரக்கிருப்பு மாற்றம்  (-)1,000
      நிதிசார் செலவுகள்  300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
      மொத்த செலவுகள்  18,700
    அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) 1,500

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment