முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 120

    பகுதி I

    24 x 5 = 120
  1. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  2. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

  3. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.

  4. பழப்பூச்சியை (டிரைசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?

  5. கீழ்க்காணும் படியெடுத்தல் அலகிற்கான குறியீட்டு வரிசையின் படி, உருவாக்கப்படும் தூது ஆர்.என்.ஏ வில் உள்ள நியூக்ளியோடைடு வரிசையினை எழுதுக.
    5' TGCATGCATGCATGCATGCATGCATGC 3'

  6. போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக. 

  7. எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவாய்? 

  8. உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் எப்பொழுது உருவாகிறது?

  9. நகலாக்க செம்மறி ஆடு – டாலி ஒரு மிகப்பெரிய அறிவியல் திருப்பு முனை என்பதை விளக்குக.

  10. பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.

  11. உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்காற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிடுக.

  12. பின்வருவனவற்றை பற்றி சுருக்கமாக எழுதுக.
    அ) வினை வேகமாற்றிகள்
    ஆ) சூழல் சுகாதாரக் கழிவறைகள்

  13. நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.

  14. தொடர்ச்சியற்ற வேறுபாடுகளைத் தொடர்சியான வேறுபாடுகளுடன் வேறுபடுத்துக.

  15. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.

  16. மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.

  17. களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நண்மைகள் யாவை?

  18. மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி.

  19. பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைப் பற்றி தொகுத்து எழுதுக.

  20. உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.

  21. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
    நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.

  22. புதிய காடுகள் தோற்றுவித்தலில் தனி ஆய்வுகள் குறித்து விளக்குக.

  23. நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Important 5 Mark Book Back Questions (New Syllabus 2020)

Write your Comment