பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 115

    பகுதி I

    23 x 5 = 115
  1. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

  2. பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக.

  3. பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக

  4. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

  5. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

  6. எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துகாட்டுகளுடன் விளக்குக.

  7. போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக. 

  8. தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  9. கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை வரிசைப்படுத்துக

  10. மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.

  11. இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக.

  12. வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும்-நிரூபி.

  13. பின்வருவனவற்றை பற்றி சுருக்கமாக எழுதுக.
    அ) வினை வேகமாற்றிகள்
    ஆ) சூழல் சுகாதாரக் கழிவறைகள்

  14. நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.

  15. தொடர்ச்சியற்ற வேறுபாடுகளைத் தொடர்சியான வேறுபாடுகளுடன் வேறுபடுத்துக.

  16. மெய்யிலாமடியத்தின் வகைகளை படம் வரைக.

  17. உயிரி உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.

  18. உறைகுளிர் பாதுகாப்பு பற்றி விளக்குக.

  19. பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைப் பற்றி தொகுத்து எழுதுக.

  20. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
    நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.

  21. புதிய காடுகள் தோற்றுவித்தலில் தனி ஆய்வுகள் குறித்து விளக்குக.

  22. கலப்பின வீரியம் - குறிப்பு வரைக

  23. புலனுணர்வுமாற்ற மருந்துகள் என்றால் என்ன? அபின் மற்றும் கஞ்சாச்செடி பற்றிய குறிப்பு வரைக .

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Tamil Medium Model 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment